.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, November 17, 2013

முடி மிருதுவாக இருக்க!

 sublimemousse1


முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை  சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

இதை வாரம் இரு முறை  தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.

பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.

அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.


மருந்து பாட்டில்கள் ஏன் பிரவுன் நிறத்தில் செய்யப்படுகின்றன?


மருந்துகளுக்கும் சூரிய ஒளிக்கும் ஒத்துக்காது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு சூரிய ஒளி பட்டதும் கெட்டுப் போய் தண்ணீராக மாறிவிடும்.


சில்வர் நைட்ரேட் பற்றி உங்களுக்குத் தெரியும் அதன் மீது வெளிச்சமே படக்கூடாது.


விட்டமீன்கள், ஆண்டிபயாட்டிக் கெமிக்கல்கள் போன்றவை வெளிச்சத்தில் சீக்கிரம் செயலற்றுப் போய்விடுவதால் பொதுவாகவே எல்லா மருந்துகளுக்கும் கெமிக்கல்களுக்கும் பிரவுன் நிற பாட்டில்களையே பயன் படுத்துகிறார்கள். 

கண்ணீர் புகை எப்படி கண்ணீர் வரவழைக்கிறது?



கண்ணீர்ப் புகையின் கெமிக்கல் பெயர் குளோரோ செப்டோ ஃபீனோன். இந்த கெமிக்கல் ஈரம் பட்டதும் மெல்லிய அமிலமாகிறது. 

மென்மையான தொண்டை, நுரையீரல் போன்ற இடங்களில் படும்போது கண்ணீர் வருகின்றது.


தும்மல், இருமல், கண்ணெரிச்சல் முதலிய ஒன்றன் பின் ஒன்றாக வந்து தொந்தரவு ஏற்படும். 


இது எவ்வளவு பாதுகாப்பாக இருப்பினும், கண்ணீர் புகையை தாக்குப்பிடிக்க முடியாது.


மக்கள் கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்துகிறார்கள்.


கண்ணீர்ப்புகை திரவ ரூபத்தில் கேனிஸ்டர்களில் நிரப்பி கூட்டத்தில் வீசுவார்கள்.


கிரனேட் லாஞ்ச்சர் என்ற துப்பாக்கியின் மூலம் வீசுவார்கள். கையால் வீசினால் அது கிட்டேயே விழுந்து அவர்களையே தாக்கும் என்பதால் வீசும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள். 

இந்திய விலங்கியல் வல்லுநர்கள் யார் என்று தெரியுமா?

எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் விலங்குகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு உலகளாவிய புகழைப் பெற்றுள்ளனர். அவர்களில் சிலரும், அவர்கள் சாதித்த துறைகளையும் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா....படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

சலீம் அலி - பறவையியல் துறை


ஜி.சி பட்டாச்சார்யா - பூச்சியில் துறை


எம்.எஸ். மணி - பூச்சியியல் துறை


ஏ.சவுத்ரி - பாலூட்டியில் துறை


பி.பிஸ்வாஸ் - பறவையியல் துறை


சி.ஆர். நாராயணராவ் - ஊர்வனவியல் துறை


அசோக் கேப்டன் - ஊர்வனவியல் துறை


பி.ஜே. சவுத்ரி - சுரப்பியியல் துறை


எஸ்.ஜெய்ராஜ்புரி - புழுவியல் துறை


ஆர்.இ.விட்டேகர் - ஊர்வனவியல் துறை

 
back to top