.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, November 17, 2013

தனுஷுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்!

 6008f19d-e2fa-4421-9fe0-f584c6784317_S_secvpf

நடிகர் தனுஷ் தற்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் ‘வேங்கை சாமி’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படங்களுக்கு பிறகு தனுஷை வைத்து ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’ ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படமொன்றிலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறாராம். தனுஷும், காஜல் அகர்வாலும் முதன்முதலாக ஜோடி சேரும் படம் இதுதான்.

தனுஷும், காஜல் அகர்வாலும் இணைந்து போஸ் கொடுத்த படங்கள் இணைய தளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இருவரும் இணைந்து எந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருந்தது. தற்போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது

லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்!

 natural-organic-lipstick

பெண்கள் உபயோகிக்கும் அழகுப் பொருட்களில் முதன்மையானது தான் லிப்ஸ்டிக். லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கவும், லிப்ஸ்டிக் போடும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் பார்க்கலாம்.

* லிப்ஸ்டிக் போடும் முன், சிறிது பெட்ரோலியம் ஜெல்லைத் உதட்டில் தடவிய பின் லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்

* நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டுமானால், இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த லிப்ஸ்டிக்கை போட்டால், அது நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

 * லிப்ஸ்டிக் போட்ட பின் பார்க்க சூப்பராகவும், அதிக நேரம் அது நிலைத்து இருக்கவும், உதடுகளுக்கு சிறிது பவுடர் போட்டு, பின்னர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இதனால் லிப்ஸ்டிக் காபி குடித்தால் கூட போகாமல் அப்படியே இருக்கும்.

 * தற்போது வயதானவர்களும் லிப்ஸ்டிக் போட ஆரம்பிப்பதால், அவர்கள் நல்ல அடர்ந்த நிறமுள்ள லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுத்து போடாமல், வெளிர் நிறங்களை தேர்ந்தெடுத்து போட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

 * எப்போதும் லிப்ஸ்டிக் போடும் போது, இரண்டு வகையான நிறங்களை ஒன்றாக போடக்கூடாது. இதனால், அவை சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்தி, உதடுகளின் அழகையே கெடுத்துவிடும்.

முடி மிருதுவாக இருக்க!

 sublimemousse1


முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை  சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

இதை வாரம் இரு முறை  தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.

பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.

அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.


மருந்து பாட்டில்கள் ஏன் பிரவுன் நிறத்தில் செய்யப்படுகின்றன?


மருந்துகளுக்கும் சூரிய ஒளிக்கும் ஒத்துக்காது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு சூரிய ஒளி பட்டதும் கெட்டுப் போய் தண்ணீராக மாறிவிடும்.


சில்வர் நைட்ரேட் பற்றி உங்களுக்குத் தெரியும் அதன் மீது வெளிச்சமே படக்கூடாது.


விட்டமீன்கள், ஆண்டிபயாட்டிக் கெமிக்கல்கள் போன்றவை வெளிச்சத்தில் சீக்கிரம் செயலற்றுப் போய்விடுவதால் பொதுவாகவே எல்லா மருந்துகளுக்கும் கெமிக்கல்களுக்கும் பிரவுன் நிற பாட்டில்களையே பயன் படுத்துகிறார்கள். 

 
back to top