.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, November 18, 2013

திருமணங்களை நடத்தி வைக்கும் “ரோபோ’க்களை அடுத்து மாடு மேய்க்கும் ரோபோ ரெடி!




 சமீப காலமாக் ஜப்பானியர்கள் ரோபோக்களை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிறிய ரக கார்களை ஓட்டும் மினி ரோபோக்கள், மனிதனின் கட்டளைகளுக்கு ஏற்ப சிறு சிறு பணிகளை செய்து முடிக்கும் வகையிலான ரோபோக்கள் போன்றவற்றை வடிவமைத்து ஜப்பானியர்கள் உலகின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.

அத்துடன் திருமணங்களில் மணமக்களின் நண்பனாகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளராகவும் செயல்படும் அதிநவீன ரோபோக்களையும் ஜப்பானிய நிபுணர் வடிவமைத்ததையடுத்து ஜப்பானை சேர்ந்த இளம் ஜோடிகள் பலரும் தங்கள் திருமணத்தில் இந்த அதி நவீன ரோபோக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.இந்த வகையில், மாடு மேய்க்கவும் ரோபோக்களை ஆஸ்திரேலியாவில் உள்ள சில விஞ்ஞானிகள் வடிவமைத்து அசத்தி இருக்கிறார்கள்,

இதற்காக இந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு ரோபோவை தயாரித்துள்ளனர். இந்த ரோபோ மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு செல்லும். அது மட்டுமின்றி இரவில் மாடுகளை கண்காணிக்கும். விவசாயிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் இந்த ரோபோவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரோபோ முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 nov 17 - tec robot-roundup.

டீ என்கிற தேநீர் – சூடு பறக்கும் சில உண்மைகள்!

 nov 17 - tea biscut.Mini

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பீகார் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஏழை குடும்பத்தில் பிறந்த நான், ரெயில்வே நிலையம் மற்றும் ஓடும் ரெயிலிலும் டீ விற்று இருக்கிறேன் என்று கூறினார்.இதைத் தொடந்து ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் கமான்ட் அடிக்க மோடி பதிலடியாக “டீ விற்றவரை நாட்டின் பிரதமராக கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டை விற்பதை காட்டிலும் டீ விற்பதே சிறந்தது.” என்றார் இப்படி சூடு பறக்கும் தேநீர் பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `

கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம்.

இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.இப்படி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் தினமும் 2 கோப்பைக்கும அதிகமாக தேநீர் குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது என்றும தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் தேநீர் குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

அத்துட்ன் தேநீர் குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால்தான் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இதையெல்லாம் விட மேலாக தேநீரில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அந்நிலையில் மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `தேநீர்ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக தேநீர் இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் தேநீர் தடுக்கிறது.இனி பல்லை பாது காக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. தேநீர் குடித்தாலே போதும்.

வானில் 28 - 29-ந் தேதிகளில் வால் நட்சத்திரம் தோன்றும்!



நமது சூரிய குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உள்பட 8 கிரங்கள் உள்ளன. ஒரு சில கிரங்களைச் சற்றி துணக்கோள்களும் (நிலவு) இயங்குகின்றன.


இவற்றை தவிர ஏராளமான விண்கற்களும் சூழன்று வருகின்றன. இவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போன்று தோன்றும் அந்த வகையில் ஐசான் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் , நவம்பா் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காட்சியளிக்க உள்ளது.


இந்த வால்நட்சத்திரம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இது பூமியை நோக்கி நெருங்கி வருகிறது.


 குறிப்பாக தென்னிந்திய பகுதியை நோக்கி வருவதால்  இப்பகுதி மக்கள் இதை காண முடியும். 2 நாட்களிலும் மாலை 5 மணியளவில் இந்த நட்சத்திரம் காட்சியளிக்கத் தோன்றும்.


 மேகக் கூட்டங்களில் காண்பது கடினம். ஆகவே, சென்னை அறிவியல் மையத்தில் இதை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 6 சுற்றுகள்; என்ன செய்யப் போகிறார் ஆனந்த்?

 

அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வி அடைந்ததன் மூலம் கார்ல்ஸெனை விட 2 புள்ளிகள் பின் தங்கி உள்ளார் ஆனந்த். இன்னும் 6 சுற்றுகள் மட்டுமே மீதி உள்ளது. அதனால், அனுபவம் வாய்ந்த ஆனந்த் எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற ஆவல் மேலோங்கி உள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் இத்தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதுவரை முடிந்த 6 சுற்றுக்களின் முடிவில், நார்வேயின் கார்ல்ஸென் 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 5-வது மற்றும் 6-வது சுற்றுக்களில் அடுத்தடுத்து அவர் 2 வெற்றிகள் பெற்றதே இதற்கு காரணம்.

இத்தொடரில் 6.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தரவரிசையில் முதல் இடத்திலுள்ள கார்ல்ஸென் இன்னும் 2.5 புள்ளிகள் பெற்றால், உலக சாம்பியனாகி விடுவார்.

ஓய்வுக்குப்பின் திங்கள்கிழமை 7-வது சுற்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆனந்த் தன் திறமையை நிரூபித்தாக வேண்டும். இந்த தொடர் தொடங்கும் முன், ஆனந்த் இவ்வளவு எளிதில் சரணடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் நான்கு சுற்றுகள் டிராவில் முடிந்தபோது நம்பிக்கையுடன் இருந்த ஆனந்த், அடுத்தடுத்த தோல்வியால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். 6-வது சுற்றின் முடிவில் இது கண்கூடாகத் தெரிந்தது.

5-வது சுற்றின் தோல்வி, 6-வது சுற்று ஆட்டத்தில் எதிரொலித்தது என்று ஆனந்த் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த தோல்விகளைக் கையாளும் விதம் குறித்து நார்வே பத்திரிகையாளர் ஒருவர் ஆனந்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆனந்த், ""இன்னும் திறமையாக செயல்பட வேண்டும்'' என்றார்.

பதிலை விரிவாகத் தெரிவிக்குமாறு அந்த நிருபர் வலியுறுத்தினார். அதற்கு ஆனந்த், ""திறமையாக செயல்பட வேண்டும் என்பதற்கு அர்த்தம் திறமையாக செயல்பட வேண்டும் என்பதே. இந்த ஆங்கிலம் ஏன் உங்களுக்குப் புரியவில்லை எனத் தெரியவில்லை'' என்றார்.

இதற்கு முன்பும் தோல்விக்குப் பின் பத்திரிகையாளர்கள் இதுபோல ஆனந்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஆனந்த் அப்போதெல்லாம் நிதானம் இழக்கவில்லை.

7-வது சுற்றில் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாட உள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறக் காய்களிலும் கார்ல்ஸென் திறமையை நிரூபித்து விட்டார். குறிப்பாக, கருப்பு நிறக் காய்களுடன் காரோ கான் மற்றும் பெர்லின் தடுப்பு முறைகளில் ஆனந்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார்.

புள்ளிகள் பட்டியல்

சுற்று ஆனந்த் கார்ல்ஸென்

1               0.5     0.5

2               0.5     0.5

3               0.5     0.5

4                0.5    0.5

5                    0      1

6                     0     1

* டிராவானால் தலா 0.5 புள்ளிகள்.

* வெற்றி பெற்றால் 1 புள்ளி.
 
back to top