.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, November 18, 2013

போயிங் 737 விமான விபத்தில் 50 பேர் பலி-வீடியோ



  
ரஷ்யாவின் கஸன் விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முயன்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பயணிகள், 6 விமான சிப்பந்திகள் உள்பட 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம் விமானி, ஊழியர்கள் 6 பேர் மற்றும் பயணிகள் 44 பேருடன் மேற்கு ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டன் மாகாண தலைநகர் காசன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானம் நேற்று இரவு 7.25 மணிக்கு காசன் விமான நிலையம் அருகே சென்றது. பின்னர் அங்கு தரை இறங்க விமானி முயற்சி மேற்கொண்டார். ஆனால் உடனடியாக தரை இறங்க முடியவில்லை.தொடர்ச்சியாக 3 முறை முயற்சித்தார். எனினும், தரை இறங்க முடியவில்லை.

4-வது முறையாக விமானத்தை காசன் விமானநிலைய ஓடு பாதையில் தரை இறக்க முயன்றபோது, அது தரையில் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது.இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் தங்களது உயிரைக் காப்பாற்றும்படி அலறினார்கள். எனினும், விபத்து நடந்த சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த 50 பேரும் உயிரிழந்தனர்.

 nov 18 - Russisa accident

 

பி.எஸ்.என்.எல்: தொலைபேசி கட்டணம் செலுத்த இனி வரிசையில் நிற்க வேண்டாம்..

 

தொலைபேசி கட்டணம் செலுத்த இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் அல்லது ஐ பேட் மூலமாகவே இனி கட்டணத்தை செலுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்திருக்கிறது.



முதலில் ‘‘மை பி.எஸ்.என்.எல். ஆப்’ எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஸ்மார்ட் மொபைல் கொண்டோ அல்லது ஐ-பாடில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்துகொள்ள வேண்டும்.



இதனை ‘‘ஆன்ட்ராய்டு அப் ஸ்டோர்ஸ்’’ அல்லது ‘‘விண்டோஸ் அப் ஸ்டோர்ஸ்’’ எனும் இணைய தளங்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.



இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்க் மற்றும் பி.எஸ்.என்.எல்.-பிராண்ட் ட்ரஸ்ட் கார்டு மூலமாகவும் தங்களது பில் தொகையை செலுத்தலாம்.



இதில் மொபைல் போன் ரீ-சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை ஆக்டிவேட் செய்யும் வசதியும் உள்ளன. பணம் செலுத்திய பின்னர் அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சச்சின் வேடத்தில் நடிக்க ஆசை!



பாலிவுட்டில் வித்தியாசமான முயற்சிகளுக்குப் பெயர் போனவர் ஆமிர்கான்.

கமர்ஷியல் சினிமாவில் நடித்துக்கொண்டே, மாற்று சினிமாவுக்கும் முக்கியத்துவம் தரும் ஆமிர்கானின் சினிமா காதல் சொல்லித் தீராதது.

ஒவ்வொரு படத்திலும் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்று ஆமிர்கான் இப்போதும் விரும்புகிறார்.

'லகான்' படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்த ஆமிர்கானுக்கு சச்சின் மேல் பெரும் ஈர்ப்பு இருந்திருக்கிறது.

சச்சின் ஓய்வு பெறும் இந்தத் தருணத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஆமிர்கான்.

''சச்சின் பற்றி படம் எடுத்தால், அதில் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

சச்சின் வேடத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?? அவசியம் படிக்கவும்!

 
 
சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா....

ஒரு நிமிஷம் இதப்படிங்க..

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

 
back to top