.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, November 18, 2013

குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் – டெல்லியில் துவங்கியது!

 nov 18 - child university.2

ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி தலைமையில் செயல்பட்டு வரும் நவ்ஜோதி இந்தியா பவுண்டேஷன் என்ற தொண்டு அமைப்பு குழந்தைகளிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கும் விதமாக குழந்தைகளே நடத்தும் குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை வடமேற்கு டெல்லி மாவட்டம், கராலா பகுதியில் தொடங்கியுள்ளது. இதற்கு நவ்ஜோதி பால குருக்குலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் குறித்து கிரண்பேடி “மற்ற பல்கலைக்கழகம் போல் இல்லாமல், குழந்தைகளிடம் ஒழுக்க நெறிகளை போதிக்கும் துறைகளை கொண்டு இந்த பல்கலை செயல்படுத்தப்படும். குறிப்பாக, தைரியம், ஆரோக்கியம், சுகாதாரம், ஒருமை ப்பாடு போன்ற துறைகள் இருக்கும். இந்த சிறுவர் பல்கலைக்கு துணைவேந்தர், பதிவாளர், துறைத்தலைவர்கள், ஆகியோர் 16 முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமிகளே இருப்பார்கள். அவர்களை சிறுவர்களே தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் அனைவரும் அந்தந்த துறைக்கு இளம் தலைவர்களாக செயல்படுவார்கள். இதே போன்று ஒவ்வொரு ஆண்டும், தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதில், தகுதி மற்றும் தலைமை பண்பு அடிப்படையில் சிறுவர், சிறுமியரே தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், செல்ப் டீச்சிங், வழிபாடு, ஒழுக்க நெறிகளை கற்றுத்தரும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதன் முக்கிய காரணம், சிறுவர்களிடையே இணைந்து செயல்படுதல், கற்றுகொள்ளுதல் போன்ற செயல்கள் ஊக்கப்படுத்தப்படுத்துவது என்பது தான். இந்த பவுண்டேசனில் உள்ள பெரியவர்கள் ஆலோசகராகவும், தன்னார்வலராகவும், வருகை பேராசிரியராகவும் மட்டுமே செயல்பட்டு சிறுவர்களை வழிநடத்துவார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பள்ளி நேரம் முடிந்த பிறகே துவங்கும். அப்போது தான் சிறுவர்கள் அவர்களது நேரத்தை நற்பண்புகளை வளர்த்து கொள்வதற்கும், படிப்பின் அனுபவத்தை உணர்ந்து கொள்ளவும் பயன்படுத்த இயலும்.

இதன் மூலம் சிறுவர்களுக்கு துணிவு, பெரியவர்களை மதிக்கும் குணம், சேவை உள்ளிட்ட பண்புகளை கற்றுக்கொள்வார்கள். சமூகத்தின் அனைத்து பிரிவுகளை சார்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இதில் இணைந்து கற்கும் வாய்ப்பினை சாதகமாக்குவோம். இதை இதற்கு முன்பே துவங்கி இருக்க வேண்டும். . மேலும், இக்னோ போல், இதுவும் ஆன்லைன் பல்கலையாக மாறும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Children-led ‘university’ opens in Delhi

 ***************************************************

 Aiming to develop ethical values among children, a unique “university of the children and by the children” was today opened in the national capital with an emphasis on self-learning. The ‘Navjyoti Bal Gurukul’, set up in Karala area of North West district by former IPS officer Kiran Bedi-led Navjyoti India Foundation, would have “department of values” instead of regular departments of a varsity and the children would be taught values of courage, honesty and service.

போயிங் 737 விமான விபத்தில் 50 பேர் பலி-வீடியோ



  
ரஷ்யாவின் கஸன் விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முயன்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பயணிகள், 6 விமான சிப்பந்திகள் உள்பட 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம் விமானி, ஊழியர்கள் 6 பேர் மற்றும் பயணிகள் 44 பேருடன் மேற்கு ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டன் மாகாண தலைநகர் காசன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானம் நேற்று இரவு 7.25 மணிக்கு காசன் விமான நிலையம் அருகே சென்றது. பின்னர் அங்கு தரை இறங்க விமானி முயற்சி மேற்கொண்டார். ஆனால் உடனடியாக தரை இறங்க முடியவில்லை.தொடர்ச்சியாக 3 முறை முயற்சித்தார். எனினும், தரை இறங்க முடியவில்லை.

4-வது முறையாக விமானத்தை காசன் விமானநிலைய ஓடு பாதையில் தரை இறக்க முயன்றபோது, அது தரையில் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது.இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் தங்களது உயிரைக் காப்பாற்றும்படி அலறினார்கள். எனினும், விபத்து நடந்த சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த 50 பேரும் உயிரிழந்தனர்.

 nov 18 - Russisa accident

 

பி.எஸ்.என்.எல்: தொலைபேசி கட்டணம் செலுத்த இனி வரிசையில் நிற்க வேண்டாம்..

 

தொலைபேசி கட்டணம் செலுத்த இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் அல்லது ஐ பேட் மூலமாகவே இனி கட்டணத்தை செலுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்திருக்கிறது.



முதலில் ‘‘மை பி.எஸ்.என்.எல். ஆப்’ எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஸ்மார்ட் மொபைல் கொண்டோ அல்லது ஐ-பாடில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்துகொள்ள வேண்டும்.



இதனை ‘‘ஆன்ட்ராய்டு அப் ஸ்டோர்ஸ்’’ அல்லது ‘‘விண்டோஸ் அப் ஸ்டோர்ஸ்’’ எனும் இணைய தளங்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.



இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்க் மற்றும் பி.எஸ்.என்.எல்.-பிராண்ட் ட்ரஸ்ட் கார்டு மூலமாகவும் தங்களது பில் தொகையை செலுத்தலாம்.



இதில் மொபைல் போன் ரீ-சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை ஆக்டிவேட் செய்யும் வசதியும் உள்ளன. பணம் செலுத்திய பின்னர் அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சச்சின் வேடத்தில் நடிக்க ஆசை!



பாலிவுட்டில் வித்தியாசமான முயற்சிகளுக்குப் பெயர் போனவர் ஆமிர்கான்.

கமர்ஷியல் சினிமாவில் நடித்துக்கொண்டே, மாற்று சினிமாவுக்கும் முக்கியத்துவம் தரும் ஆமிர்கானின் சினிமா காதல் சொல்லித் தீராதது.

ஒவ்வொரு படத்திலும் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்று ஆமிர்கான் இப்போதும் விரும்புகிறார்.

'லகான்' படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்த ஆமிர்கானுக்கு சச்சின் மேல் பெரும் ஈர்ப்பு இருந்திருக்கிறது.

சச்சின் ஓய்வு பெறும் இந்தத் தருணத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஆமிர்கான்.

''சச்சின் பற்றி படம் எடுத்தால், அதில் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

சச்சின் வேடத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 
back to top