.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, November 25, 2013

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது உண்மையான காரணம் இதுதான்!

 

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?

இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

 இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான்

 குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

நீரில் மூழ்கினால் பறந்து போய் காப்பாற்றும் ரோபோ! வீடியோ!




 முன்னெல்லாம் நாளுக்கு நாள் என்பது இப்போது மணிக்கு மணி மனிதனின் செய்யும் வேலைகள் அனைத்திலும் ரோபோட்டின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது அந்த வகையில் : நீரில் மூழ்கி, உயிருக்கு போராடும் நபர்களை பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது.

 ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில் இந்த ரோபோ கரையை அடைந்தது. அதே நேரத்தில், லைப்கார்டு மூலம் அங்கிருந்து கரைக்கு பாதிக்கப்பட்ட நபர் வர 91 வினாடிகள் வரை நீந்த வேண்டியிருந்தது. இந்த ரோபோவை மேலும் மேம்படுத்தி நீரில் மூழ்குபவர்களை மீட்பதற்கு மட்டுமல்லாமல் உளவு பார்க்கவும் இதை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

nov 25 - tec robot.mini

ஸ்போர்ட்ஸை பார்த்தாலே போதும்-’பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆய்வு முடிவு!

பொதுவாக ‘பிட்னஸ்’ என்பதை முழு நலம் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய முழு நலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப் படுகிறது.இது போன்ற ‘பிட்னஸ்’ஆக வேண்டுமெனில் ஓட்டப்பந்தயம், நீசசல் போட்டி அல்லது பழுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டுமென்ற சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும்போதே பார்ப்பவரின் இதயத்துடிப்பு விகிதம், சுவாசம், ரத்த ஓட்டம் மற்றும் வெளியேறும் வியர்வையின் அளவு உள்ளிட்டவைகள் அதிகரித்து அவர்களை ‘பிட்’ஆக்குகிறது என்று ஒரு ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது.

nov 25 - health sports

அண்மையில் இன்டர்நேஷனல் ஜர்னல் பிரான்டியர்ஸ் இன் அட்டானமிக் நியூரோசயின்சில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு தொடர்பான தகவல் அறிக்கையில்,”கடின உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை, ஒருவர் பார்க்கும்போது, அவரது தசை நரம்பின் இயங்கு நடவடிக்கை அதிகமாவதை முதலில் உறுதி செய்யப்பட்டது. நம் உடலில் அரிதாக ஏற்படும் உடலளவில் மற்றும் மன ரீதியான அளவில் ஏற்படும் மாறுபாட்டை கண்டறிவதற்கான சிறந்த கருவியாக தசை நரம்பின் இந்த அதீத செயல்பாடு காணப்பட்டது.

இதற்கிடையில் கடினமான உடற்பயிற்சிகள் செய்யும் போது ஏற்படும் இதயத்துடிப்பு அதிகரிப்பு, வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரித்தல், ரத்த குழாய்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்கள், இந்த தசை நரம்புகளின் அதீத இயங்குதிறனால் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.

இதையொட்டி நடந்த ஆய்விற்கு 9 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் உடலின் வெளிநரம்புகளில் கூரிய ஊசிகள் செலுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

முதலில், அவர்கள் சாதாரணமாக இருக்கும் நிலையில் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் 22 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ அவர்கள் முன் ஒளிபரப்பப்பட்டது. பின் அவர்களது ரத்த குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் பதிவான மின்னணு மாற்றங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ஏற்படும் மின்னணு மாற்றங்களை ஒத்த அளவில் இருந்தது கண்டறியப்பட்டது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்?


கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
இதற்கு  ஒரு அருமையான விளக்கம் உள்ளது.


பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.

ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.

நடுவிரல் - நம்மை குறிப்பது.

மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.

சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.


முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.

இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.

இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.

ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.



கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா??

ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.
 
back to top