.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, November 25, 2013

நெய் மைசூர் பாக் - சமையல்!




தேவையான பொருட்கள்:
========================

கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - இரண்டு கப்
நெய் - ஒண்ணேகால் கப்
முந்திரி பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
அரை கப் - நீர்

செய்முறை:
===========

* கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து  வறுத்து வைக்கவும்.

*  சர்க்கரையை நீர் சேர்த்து கலந்து பாகு தயாரிக்கவும்.

* பாகின் பதம் பார்க்க சிறிது  பாகை எடுத்து அதை குட்டி பந்து போல் உருட்ட முடிந்தால் அதுவே சரியான பதம்.

* மெது மெதுவாக மாவை சேர்த்து கட்டி உருவாகாமல் கலக்கவும்.

* ஒன்று சேர்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் எடுத்து வைத்து மீதம் உள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும்.

* slow flame மில் வைத்து கிளறவும்.

* தனியாக எடுத்து வைத்த நெய்யை ஒரு பாத்திரத்தில் முழுவதும் படுமாறு தடவவும்.

* கிளறிய பாகை நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி சமமாக பரப்பி விடவும்.

* நன்றாக ஆறியதும் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.

* சுவையான நெய் மைசூர் பாக் தயார்.


குறிப்பு:
=======

சர்க்கரை பாகின் பதம் சரியாக வரவில்லை என்றாலோ,மாவு சரியாக இல்லைஎன்றாலோ சுவையும் பதமும் சரியாக வராது.முதன் முறையாக செய்கிறீர்கள் என்றால் மிகவும் சிறிய அளவில் செய்து பார்க்கவும்.

சிறுபட்ஜெட்டில் படம் எடுக்கப்பபோவதாக இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு!

 




 பெரிய படங்களை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்த இயக்குநர்கள் பிரம்மாண்ட இயக்குனர்கள் என முத்திரையுடன் தொடர்ந்து பெரும் பொருட்செலவிலேயே படங்களை எடுப்பார்கள் ஆனால் செல்வராகவனோ இதில் மாறுபட்டு குறைந்த செலவில் படம் எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்

 இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்களில் மிக அதிக  பொருட் செலவில் உருவான படம்  தற்போது வெளியாகியுள்ள ‘இரண்டாம் உலகம்’.  அகும். இதற்கு முன்னதாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் படமாக்கியிருந்தார்,

இந்நிலையில், ‘இரண்டாம் உலகம்’ படத்தைத் தொடர்ந்து சிறு பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக செல்வராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அடுத்ததாக ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கப் போகிறேன். ஆக்ஷன் என்றதும் பெரிய பட்ஜெட் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். சிறு பட்ஜெட்டிலேயே இந்த படத்தை எடுக்கப் போகிறேன் என்றார்.

பாலிவுட் செல்கிறாரா அஜித்?

 

'பில்லா'வைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தீபாவளிக்கு ரிலீஸான இப்படம் 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

அஜித் நடிக்கும் 'வீரம்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்போதே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'ஆரம்பம்' படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து நடிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். 'துப்பாக்கி'. 'ரமணா' படங்களின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய்குமாருக்கு 'ஆரம்பம்' ரீமேக்கில் நடிக்க ஆசையாம்.

இந்நிலையில், 'ஆரம்பம்' படம் பார்த்த ஷாருக்கான், இயக்குநர் விஷ்ணுவர்தனை மனம் திறந்து பாராட்டினாராம். ''படம் பிரமாதம். நீங்கள் விரும்பினால் இந்தியில் ரீமேக் செய்யுங்கள். நானே ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று ஷாரூக், விஷ்ணுவர்தனிடம் கூறி இருக்கிறார்.

அதோடு, தமிழில் அஜித் நடித்த வேடத்தில் ஷாருக்கானும், ராணா நடித்த வேடத்தில் அஜித்தும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியில் ஷாரூக் நடித்த 'சாம்ராட் அசோகா' படத்தில் அஜித்தும் நடித்திருந்தார். இப்போது ஷாரூக்கும், அஜித்தும் இணைந்து நடித்தால் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

கோச்சடையான் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!

 
ரஜினியின் 'கோச்சடையான்' ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக அமையும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதற்கு முன்னால் 'கோச்சடையான்' பற்றிய எக்ச்க்ளூசிவ் தகவல்கள் .

* 'கோச்சடையான்' தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரம்மிக்க படைத்தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து.

* படத்தின் முதல் பகுதியில் 'கோச்சடையான்' ஆதிக்கம் இருக்கும். ஆர்வ மிகுதியில் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள, அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று 'கோச்சடையான்' மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். எதிரிகளால் தந்தை 'கோச்சடையான்' கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி.

* 'கோச்சடையான்' ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே,  ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

* ஷோபனாவுக்கும், ராணாவுக்கும் நடக்கும் போட்டி நடனம் அரங்கத்தை அதிர வைக்கும்.

* படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

* ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அதில் ஒன்று "எதிரிகள் இல்லை..." என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்தப் பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், தெலுங்கில் பாடியிருப்பவர் ரஜினி. இந்தி பதிப்பில் பாடியிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

* தமிழ் தெலுங்கு இரண்டிற்குமே ரஜினி டப்பிங் பேசியிருக்கிறார்.

* படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இன்டர்வெல் கிடையாது.

* படத்தை 3டியிலும் வெளியிட இருக்கிறார்கள். இதற்கான பணிகள் சீனாவில் நடந்து வருவதால் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட படம் பொங்கலுக்கு வருகிறது.
 
back to top