.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, November 25, 2013

ஸ்போர்ட்ஸை பார்த்தாலே போதும்-’பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆய்வு முடிவு!

பொதுவாக ‘பிட்னஸ்’ என்பதை முழு நலம் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய முழு நலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப் படுகிறது.இது போன்ற ‘பிட்னஸ்’ஆக வேண்டுமெனில் ஓட்டப்பந்தயம், நீசசல் போட்டி அல்லது பழுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டுமென்ற சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும்போதே பார்ப்பவரின் இதயத்துடிப்பு விகிதம், சுவாசம், ரத்த ஓட்டம் மற்றும் வெளியேறும் வியர்வையின் அளவு உள்ளிட்டவைகள் அதிகரித்து அவர்களை ‘பிட்’ஆக்குகிறது என்று ஒரு ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது.

nov 25 - health sports

அண்மையில் இன்டர்நேஷனல் ஜர்னல் பிரான்டியர்ஸ் இன் அட்டானமிக் நியூரோசயின்சில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு தொடர்பான தகவல் அறிக்கையில்,”கடின உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை, ஒருவர் பார்க்கும்போது, அவரது தசை நரம்பின் இயங்கு நடவடிக்கை அதிகமாவதை முதலில் உறுதி செய்யப்பட்டது. நம் உடலில் அரிதாக ஏற்படும் உடலளவில் மற்றும் மன ரீதியான அளவில் ஏற்படும் மாறுபாட்டை கண்டறிவதற்கான சிறந்த கருவியாக தசை நரம்பின் இந்த அதீத செயல்பாடு காணப்பட்டது.

இதற்கிடையில் கடினமான உடற்பயிற்சிகள் செய்யும் போது ஏற்படும் இதயத்துடிப்பு அதிகரிப்பு, வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரித்தல், ரத்த குழாய்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்கள், இந்த தசை நரம்புகளின் அதீத இயங்குதிறனால் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.

இதையொட்டி நடந்த ஆய்விற்கு 9 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் உடலின் வெளிநரம்புகளில் கூரிய ஊசிகள் செலுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

முதலில், அவர்கள் சாதாரணமாக இருக்கும் நிலையில் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் 22 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ அவர்கள் முன் ஒளிபரப்பப்பட்டது. பின் அவர்களது ரத்த குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் பதிவான மின்னணு மாற்றங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ஏற்படும் மின்னணு மாற்றங்களை ஒத்த அளவில் இருந்தது கண்டறியப்பட்டது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்?


கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
இதற்கு  ஒரு அருமையான விளக்கம் உள்ளது.


பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.

ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.

நடுவிரல் - நம்மை குறிப்பது.

மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.

சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.


முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.

இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.

இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.

ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.



கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா??

ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.

நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடி!

12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க..

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க..

9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.கனவுலகூட

8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க ....

6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க. அதிகமான அளவில்

5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க..

4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேணுனாலும் செய்வீங்க

3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருக்காங்க இல்லியா ....

2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க

1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க...

அப்படீனா நீங்க உண்மையாவே காதலக்றீங்க ...........

மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்!

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!


தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள் மனம் விட்டு

சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.

 
back to top