.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, November 25, 2013

சிறுபட்ஜெட்டில் படம் எடுக்கப்பபோவதாக இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு!

 




 பெரிய படங்களை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்த இயக்குநர்கள் பிரம்மாண்ட இயக்குனர்கள் என முத்திரையுடன் தொடர்ந்து பெரும் பொருட்செலவிலேயே படங்களை எடுப்பார்கள் ஆனால் செல்வராகவனோ இதில் மாறுபட்டு குறைந்த செலவில் படம் எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்

 இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்களில் மிக அதிக  பொருட் செலவில் உருவான படம்  தற்போது வெளியாகியுள்ள ‘இரண்டாம் உலகம்’.  அகும். இதற்கு முன்னதாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் படமாக்கியிருந்தார்,

இந்நிலையில், ‘இரண்டாம் உலகம்’ படத்தைத் தொடர்ந்து சிறு பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக செல்வராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அடுத்ததாக ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கப் போகிறேன். ஆக்ஷன் என்றதும் பெரிய பட்ஜெட் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். சிறு பட்ஜெட்டிலேயே இந்த படத்தை எடுக்கப் போகிறேன் என்றார்.

பாலிவுட் செல்கிறாரா அஜித்?

 

'பில்லா'வைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தீபாவளிக்கு ரிலீஸான இப்படம் 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

அஜித் நடிக்கும் 'வீரம்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்போதே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'ஆரம்பம்' படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து நடிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். 'துப்பாக்கி'. 'ரமணா' படங்களின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய்குமாருக்கு 'ஆரம்பம்' ரீமேக்கில் நடிக்க ஆசையாம்.

இந்நிலையில், 'ஆரம்பம்' படம் பார்த்த ஷாருக்கான், இயக்குநர் விஷ்ணுவர்தனை மனம் திறந்து பாராட்டினாராம். ''படம் பிரமாதம். நீங்கள் விரும்பினால் இந்தியில் ரீமேக் செய்யுங்கள். நானே ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று ஷாரூக், விஷ்ணுவர்தனிடம் கூறி இருக்கிறார்.

அதோடு, தமிழில் அஜித் நடித்த வேடத்தில் ஷாருக்கானும், ராணா நடித்த வேடத்தில் அஜித்தும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியில் ஷாரூக் நடித்த 'சாம்ராட் அசோகா' படத்தில் அஜித்தும் நடித்திருந்தார். இப்போது ஷாரூக்கும், அஜித்தும் இணைந்து நடித்தால் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

கோச்சடையான் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!

 
ரஜினியின் 'கோச்சடையான்' ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக அமையும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதற்கு முன்னால் 'கோச்சடையான்' பற்றிய எக்ச்க்ளூசிவ் தகவல்கள் .

* 'கோச்சடையான்' தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரம்மிக்க படைத்தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து.

* படத்தின் முதல் பகுதியில் 'கோச்சடையான்' ஆதிக்கம் இருக்கும். ஆர்வ மிகுதியில் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள, அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று 'கோச்சடையான்' மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். எதிரிகளால் தந்தை 'கோச்சடையான்' கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி.

* 'கோச்சடையான்' ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே,  ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

* ஷோபனாவுக்கும், ராணாவுக்கும் நடக்கும் போட்டி நடனம் அரங்கத்தை அதிர வைக்கும்.

* படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

* ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அதில் ஒன்று "எதிரிகள் இல்லை..." என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்தப் பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், தெலுங்கில் பாடியிருப்பவர் ரஜினி. இந்தி பதிப்பில் பாடியிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

* தமிழ் தெலுங்கு இரண்டிற்குமே ரஜினி டப்பிங் பேசியிருக்கிறார்.

* படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இன்டர்வெல் கிடையாது.

* படத்தை 3டியிலும் வெளியிட இருக்கிறார்கள். இதற்கான பணிகள் சீனாவில் நடந்து வருவதால் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட படம் பொங்கலுக்கு வருகிறது.

காதலுக்கு அழகு!

பெண்களில் இரண்டு ரகம் உண்டு

பெண்களை அலங்காரப் பிரியர்கள் என்று சொல்வதுண்டு. அலங்காரம் செய்து கொள்வதில் பெண்கள் அதிக நேரம் ஒதுக்குவார்கள் என்பதும் உண்மைதான்.

தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களிடமும் இருக்கவே செய்கிறது.

இதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். தான் போட்டிருக்கும் அலங்காரம் வெளியே தெரியவேக் கூடாது என்று அழகு செய்து கொள்பவர்கள் ஒரு ரகம்.

பளிச்சென அழகு தர வேண்டுமென்பதற்காக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம்.

இதில் பளிச் ரகத்தினர் மிக எளிதாக ஆண்களுடன் பழகுபவர்களாக இருப்பார்கள்.

மிகவும் மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஆண்களிடம் பழகுவதற்கு தயங்குபவர்களாக இருப்பார்கள்.

இதில் முதல் ரகப் பெண்களிடம் ஆண்கள் உரிமையுடனும், சகஜமாகவும் பேசுவார்கள். பழகுவார்கள். உண்மைதான்.

ஆனால் தனக்குப் பிடித்த பெண் என்று வரும்போது, கண்டிப்பாக மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவளைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.

அதிகமாக அழகுப்படுத்திக் கொள்ளும் பெண், சுதந்திர விரும்பியாகவும், மிகத் தைரியமானவளாகவும், போராடத் தயங்காதவளாகவும் இருப்பார்கள். இவை யாவும் பெண்ணுக்குத் தேவையான குணங்கள் என்ற போதிலும், இதனை பெரும்பாலும் ஆண்கள் விரும்புவதில்லை.

அடுத்ததாக, அனைவரையும் கவரக் கூடிய அழகுடன் மிளிரும் இந்த பெண்ணுக்கு தான் தகுதியானவன் இல்லை என நினைத்தும் ஆண்கள் ஒதுங்கிவிடுவார்கள்.

இயற்கையான அழகுடன் மிளிரும் பெண்ணைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறது. ஆனால் இயற்கை அழகைத்தானே ஆண்கள் விரும்புகிறார்கள் என்று தனது ஆடை, சிகை அலங்காரத்தில் அலட்சியமாக இருப்பதையும் ஆண்கள் விரும்ப மாட்டார்கள்.

ஒரு ஆணை காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், முதலில் ஆடை, அலங்கார விஷயங்களில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையைப் படித்ததும், ஓர் ஆணிற்காக நான் ஏன் மாற வேண்டும், ஆணின் இஷ்டப்படி எல்லாம் நான் என்னை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எல்லாம் காதலுக்கு பொருந்தாது.

உங்கள் விருப்பங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, காதலரின் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் காதலுக்கு அழகு. பின் உங்கள் விருப்பத்திற்கு அவர் முழு சுதந்திரம் தருவார். அவருக்கு நீங்கள் முழு சுதந்திரம் தருவீர்கள். அப்போது காதல் என்பது நினைக்க நினைக்க இனிக்கும் அற்புத விஷயமாக இருக்கும்.

 
back to top