.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 26, 2013

ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!



பெண்களுக்கே உரிய பிரா ... இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்கப் போகிறது..
அதுவும் எப்படி.. புஷ் அப் பிரா... ஆம், ஆண்களுக்காகவே பிரத்யேகமான பிராவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பேஷன் துறையினர்தான் இந்த லந்துக்...கார வேலையில் இறங்கியுள்ளனர்.
ஆண்கள் மத்தியில் இது வித்தியாசமான ஆச்சரியத்தையும், சிலரது எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றுள்ளதாம்.

பெண்களுக்கு மட்டும்தானா...

பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடைதான் பிரேசியர் எனப்படும் பிரா. பெண்களின் தனிச் சிறப்பான உள்ளாடையாகவும் காலம் காலமாக திகழ்கிறது.

ஆண்களுக்கு முண்டா பனியன்.. கை வச்ச பனியன்
ஆண்களைப் பொறுத்தவரை முண்டா பனியன், கை வச்ச பனியன் என்று வரிசைப்படுத்தியுள்ளனர்.

ஆண்களுக்கும் வந்தாச்சுப்பா பிரா

ஆனால் இப்போது ஆண்களுக்கும் பிராவை கொண்டு வந்து விட்டனர். அதுவும் புஷ் அப் பிரா...


நெஞ்சை நிமிர்த்திக் காட்டுமாம்


ஆண்களுக்கு அழகே அந்த கட்டுமஸ்தான நெஞ்சுதான். ஆனால் எல்லோரும் சல்மான் பாடியோடு இருக்க முடியாதே... அப்படி இல்லாதவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். அவர்களுக்காகத்தான் இந்த புஷ் அப் பிராவை கொண்டு வந்துள்ளனராம்.


நெஞ்சுரம் மிக்கவர்களாக தோற்றமளிக்கலாம்
இந்த புஷ் அப் பிராவை அணியும் ஆண்களுக்கு கட்டுமஸ்தான நெஞ்சு இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுமாம்.


டி சர்ட் பிரா

இந்த பிராவை டி சர்ட் பிரா என்று அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான பிரா போல இது இருக்காது. மாறாக டி சர்ட்டுடன் கூடிய பிரா... இதை அணிந்தால் பைசெப்ஸ், டிரைசெப்ஸ், நெஞ்சுப் பகுதி என ஒட்டுக்காக எல்லாமே எடுப்பாக தெரியுமாம்.

படத்தில் விவேக் போல...

பிரபாகரன் படத்தில் விவேக் ஒரு குண்டாங்குறையாக டியூப்களை உடலில் சொருகி 8 பேக் காட்டுவாரே.. கிட்டத்தட்ட அது போலத்தான் இதுவும். ஆனால் இது காமெடிக்காக அல்ல, ஆண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருக்குமாம்.


இல்லாதவங்களுக்கு நல்லதுதானே...

இதுகுறித்து பாலிவுட் நடிகரான இஜாஸ் கான் கூறுகையில், எடுப்பான மார்பு இல்லாத ஆண்களுக்கு இது வரப் பிரசாதம்தான். காமெடியாக இருந்தாலும் இதைப் போட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதே எனது கருத்து... என்றார்.

என்ன கருமம்டா சாமி இது...

ஆனால் சிலர் இதற்கு முகம் சுளிக்கின்றனர். கெளதம் ரோட் என்ற இன்னொரு நடிகர் கூறுகையில், ஆண்களுக்குப் பிராவா.. என்ன கருமம் இது.. ஆண் என்றாலே ஆண்மைதானே.. பிறகு எதற்கு பெண்களைப் போல பிரா.. எனக்கு உடன்பாடில்லை என்கிறார்.

நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்!

உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை – இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர்.

பெயர் ஞடஈ-2.மனிதனுக்கு உள்ள அத்தனை உறுப்புக்களையும் கொண்ட ரோபோவுக்கு “லெனின் கிரேடு’ என்று பெயர். இது ரோபோ இயல் மற்றும் பொறியியல் சைபர்னடிக்ஸ் கழகத்தில் உள்ளது.அயர்லாந்து அருகே அட்லாண்டிக் கடலில் ஏர்இந்தியா ஜெட் விமானம் வெடித்துச் சிதறியபோது கடலில் மூழ்கிய பொருள்களைக் கண்டெடுத்த ரோபோவின் பெயர் “ஸ்கார்ப்’.2050,ம் ஆண்டுக்குள் சிவப்பு விளக்கு ஏரியாக்களில் பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் இடம்பெறும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

nov 26 - robot
செக்ஸ் பொம்மைகள், கருவிகள் போன்றவைஎல்லாம் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கின்றன. அதற்கிடையில் அமெரிக்காவை சேர்ந்த ‘ட்ரூ கம்பெனி’ என்ற நிறுவனம் ‘ராக்ஸி’ என்ற செக்ஸ் ரோபோவை 2010,ல் அறிமுகப்படுத்தியது. இதுதான் உலகின் முதல் செக்ஸ் ரோபோவாக கருதப்படுகிறது. வழக்கமாக ஒருவரது விருப்பத்துக்கு ஏற்ப ஒரு செக்ஸ் பொம்மையின் உடல் நிறம், முடி நிறம், முக அமைப்பு ஆகியவற்றை மாற்றிக் கொள்ள முடியும். சதே சமயம் செக்ஸ் ரோபோவான ராக்சியை பொருத்தவரை அதன் ‘மூடு’கூட மாற்றிக் கொள்ளலாம்.

 ரொம்ப வெட்கப்படும் ப்ரிகிட் ஃபரா, அதிரடி பெண்ணான வைல்ட் வெண்டி, வெகுளி பெண்ணான யங் யோக்கோ என்பது உள்பட 5 கேரக்டர்களாக இந்த ரோபோவை மாற்றிக் கொள்ள முடியும். இப்படியான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் அதிநவீன செக்ஸ் ரோபோக்கள் வரக்கூடும். 2050ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த விபசார விடுதிகளிலும் பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் இடம்பெறும் என்கிறார்கள்.

இந்நிலையில் மனிதனை போன்று தோற்றமளிக்கும் ரோபோ எனப்படும் இயந்திர மனிதனும் நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.இது போன்ற ரோபோக்கள் மனிதர்களுக்கு பயன்படும் வகையிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் கொடுக்கும் கட்டளைக்கு ஏற்ப பணிகளை அவை செய்கின்றன. இது வரை ஒரு வேலைக்காரன் என்ற நிலையில் உள்ள அவற்றை தற்போது பாதுகாப்பு பணி, மருத்துவ சிகிச்சை, உடல் நலம் பேணுதல், வழிகாட்டிகள் மற்றும் பிற பணிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப அமைப்பில் உயிரி மருத்துவ பொறியியல் துறையின் பேராசிரியராக இருப்பவர் சார்லி கெம்ப். இவர் மனிதன் எதையெல்லாம் செய்கிறானோ அதனை திரும்ப செய்யும் வகையில் ரோபோக்களை வடிவமைக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதனால் மனிதர்களுக்கு சேவை செய்யும் வேலைக்காரன் என்ற நிலையில் இருந்து சக மனிதன் என்ற அந்தஸ்திற்கு ‘நர்சிங்’ என்ற தகுதிக்கு ரோபோக்கள் உயர்த்தப்படும் என்றும் அதற்கான ஆய்வுகள் பல்கலை கழகத்தில் நடைபெற்று வருவதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து – கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1

nov 26 - ravi sea

ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் தான் ஹாட் டெஸ்டினேஷன். மூன்று அடுக்குகள் கொண்ட இந்த ஹோட்டலில் கீழ் பகுதி பெட்ரூம் எட்டு கண்ணாடிகள் கொண்டது அதனால் 24 மணி நேரமும் பெரிய சிறிய அத்தனை வகை மீன்களும் சுற்றி கொண்டே இருக்கும்.

அதுக்கு அடுத்த தளத்தில் வரவேற்ப்பறை அதுவும் தண்ணீரில் மூழ்கி இருக்கும். அதை தாண்டி மேலே வந்தால் தண்ணீருக்கு மேல் இருக்கும் மொட்டை மாடி உண்மையிலெ சூப்பர் ஹோட்டல் தாங்க. 17 ரூம்கள் மட்டும் கொண்ட இந்த ரெஸார்ட்டில் தங்க ஒரு நாளைக்கு சுமார் 95,000 ரூபாய்கள் தான்…………………..

சுடு தண்ணீர் ஷவரில் குளிக்க வேண்டாமே!!!


சுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும்.

ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் எதற்கு சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று பல காரணங்களை நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

சூடான நீரில் கூந்தலை எதற்கு அலசக் கூடாது?
சூடான நீரில் கூந்தலை அலசினால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும். ஏனெனில் அப்போது முடித்துளைகள் விரிவடைவதால், வேர்கள் வலுவிழந்து, கூந்தல் காய்ந்தப் பின்னர் பார்த்தால், கூந்தல் கையோடு கொத்தாக வரும்.

அதுமட்டுமின்றி சுடு தண்ணீர் கூந்தலை எரித்துவிடும். அதாவது கூந்தலானது கெராட்டீன் என்னும் புரோட்டீனால் உருவானது. ஆகவே சூடான நீரில் குளிக்கும் போது, இந்த புரோட்டீனானது அதிக அளவில் வெப்பமடைகிறது. பின் அவை எளிதில் கரைந்து விடும். ஆகவே வெப்பம் அதிகமாக உள்ள நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சூடான தண்ணீரில் குளிக்கும் போது ஷாம்பு போட்டு குளிப்பது மிகவும் கெட்ட விளைவை அளிக்கும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஏனெனில் சூடான நீருக்கும், வெதுவெதுப்பான நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதிலும் பொதுவாக ஷாம்பு போட்டு குளித்தாலே, கூந்தல் வலுவிழந்து இருக்கும். அப்போது சூடான நீரில் அலசினால், கூந்தலை நன்கு கொத்தாக எடுக்கலாம்.

குளித்தப் பின்பு கூந்தலுக்கு கண்டிஷனர் போடுவோம். அப்போது நிச்சயம் குளிர்ந்த நீரில் தான் கூந்தலை அலச வேண்டும். இல்லை சூடான நீரில் அலசினால், கூந்தலுக்கு மென்மையைத் தருவதற்கு போடும் கண்டிஷனர் முற்றிலும் போய்விடும்.

ஆகவே சூடான நீர் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், கூந்தலுக்கு பெரும் பாதிப்பைத் தரும். எனவே தலைக்கு குளிக்க வேண்டுமெனில் அப்போது உடலுக்கு சூடான நீரையும், தலைக்கு குளிர்ந்த நீரையும் பயன்படுத்துவது நல்லது.
 
back to top