.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 26, 2013

"தோரணம்" பற்றிய அறிய தகவல்.!

 

தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும்.

தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.

1. மங்கள தோரணம்.

2. அமங்கள தோரணம்


மங்கள தோரணம்:

மாவிலை தோரணம், சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும்.

இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். 

குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.

அமங்கள தோரணம்:

மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்கள தோரணம் எனப்படும்.

 இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். 

குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கவேண்டும்.

பிரசவத்திற்குப் பின் வயிற்றுச் சதையை குறைக்க சில எளிய வழிகள்!!!

பெண்களுக்கு குழந்தைப்பேறு ஒரு சந்தோஷமான விஷயம் என்றால் அந்த சந்தோஷ நிகழ்வுக்குப் பின்பு வயிற்றுச் சதையை கட்டுப்படுத்துவது மற்றொரு சவாலான விஷயம். புதிதாக தாய்மைப் பேற்றை அடைந்த எல்லா பெண்களும் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுப் பகுதியில் சேர்ந்த சதையை எப்படி குறைப்பது என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர்.

வயிற்றுச்சதை என்று பார்க்கும் போது இரண்டு வகை கொழுப்புத்திசுக்களால் இந்த சதை உருவாகிறது. ஒன்று வயிற்றின் உள் உறுப்புகளை சூழ்ந்து சேர்ந்திருக்கும் கொழுப்பு, மற்றொன்று தோலுக்கடியில் சேகரமாகியிருக்கும் கொழுப்பு. வயிற்றின் உள்ளே சேகரமாகியிருக்கும் கொழுப்பை நம்மால் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் இது மிக அபாயகரமானது. அதே சமயம் தோலுக்கு அடியிலுள்ள கொழுப்பை நம்மால் தொட்டுணர்ந்து பார்க்க முடியும். மேலும் உள்ளே உள்ள கொழுப்பின் அளவு அதிமாகும் போது, அது தோலுக்கு கீழ் உள்ள கொழுப்பையும் புறந்தள்ளி வயிற்றை இன்னும் பெரிதாக தோற்றமளிக்க வைத்துவிடுகிறது.

வயிற்றுப் பகுதியில் பல காரணங்களால் அதிக சதை சேர்கிறது. கருவுற்றிருக்கும் போது வயிற்றைச் சுற்றிலும் இயற்கையாகவே எடை அதிகரித்து விடுகிறது. பிரசவத்திற்கு பின்பு இந்த எடையை குறைப்பது சிரமமாகத் தான் இருக்கும். எனினும் வயிற்றுக் கொழுப்பை குறைப்பதற்கான மிகச் சிறந்த ஆலோசனைகளை இங்கு தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, வயிற்றுக் கொழுப்பை கரைத்து, ஸ்லிம்மாக மாறுங்கள்.

பிரசவத்திற்குப் பின் வயிற்றுச் சதையை குறைக்க சில எளிய வழிகள்!!!

புதிதான பழங்கள்

 பழங்கள் சாப்பிடும் போது, அவற்றை நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள சத்துக்கள் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் நல்ல பிரஷ்ஷான பழங்களை சாப்பிட வேண்டும்.

சமைத்த உணவு

 பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட் பண்டங்களை தவிர்த்துவிட்டு, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் சேர்வதை தவிர்க்கலாம்.

காய்கறி மற்றும் பழங்கள்

 காலத்துக்கு ஏற்றபடி பல ரகங்களில் கிடைக்கும் புதிய காய்கள் மற்றும் பழங்கள் உடலுக்கு மிகவும் ஏற்றவை. இவை உடலுக்கு வித்தியாசமான சத்துப்பொருட்களை அளிக்கின்றன. அதுமட்டுமின்றி ஒரே மாதிரியான உணவை தினமும் சாப்பிடுவதை தவிருங்கள். அதே சமயம் அதிகமாகவும் எதையும் சாப்பிட வேண்டாம்.

உடற்பயிற்சி

 நடைப்பயிற்சியை மிஞ்சிய உடற்பயிற்சி ஏதும் இல்லை. எனவே அதற்கான நேரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் அதற்கு முன் மருத்தவரிடம் கலந்தாலோசியுங்கள்.

யோகா

 பொருத்தமான யோகா பயிற்சிகள் உடலை பழைய நிலைக்கு கொண்டு வரக்கூடியவை. அவிற்றில் பிராணயாமம் ஒன்று. ஆகவே அடிப்படைகளுடன் சொல்லித் தரும் ஒரு நல்ல யோகா வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள். இதனால் உடல் மட்டுமல்லாது, மனதிற்கும் மிகச்சிறந்த நன்மைகளை அளிக்கும்.

உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்


 உடலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றால், உணவை அவசர அவசரமாக சாப்பிடாமல், நன்கு மென்று சாப்பிடுவது மிகவும் அவசியம். இது வாய்ப் பகுதிக்கு நல்ல பயிற்சியும் கூட. அதுமட்டுமின்றி, இதனால் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.

தாய்ப்பாலை தவறாமல் அளித்தல்


 உடலை பார்த்துக் கொள்ளும் பரபரப்பில் தாய்ப்பால் அளிக்க தவறுவது குழந்தைக்கு மட்டுமல்ல, உங்கள் உடலையும் பாதிக்கும். எனவே மார்பகப் புற்றுநோய் அண்டாமல் இருக்கவும், மார்பக சதைகள் இளைக்கவும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.
மேற்கூறியவற்றையெல்லாம் தவறாமல் செய்து வந்தால், வயிற்றுத் தசை குறைவதை நன்கு காணலாம்.

'ஐ' படத்தில் பவர்ஸ்டார் இல்லையா?

 

சமீபத்தில் போலீஸ் விசாரணைக்காக அந்தமான் வரைக்கும் போய் வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

இந்த ட்ரிப் அவருக்கு எவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்? என்று தெரியவில்லை.

விசாரணை முடிந்து சென்னை திரும்பி, பிணையில் ரிலீஸ் ஆகி, என்று பல கட்டங்களை தாண்டிய பவர் ஸ்டாரை மீண்டும் அதே அந்தமானுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் ஒரு படத்திற்காக .

'நாலுபேரும் ரொம்ப நல்லவங்க' என்ற படத்திற்காகத்தான் இந்த விசேஷ ட்ரிப். இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசனின் மகன் ஜோ இயக்கும் படம் இது.

ஒரு குடும்பத்திடம் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராத டெரர் கேரக்டரில் நடிக்கிறாராம் பவர் ஸ்டார். கதைப்படி இவரை அந்தமான் சிறையில் அடைக்கிறார்கள் . அதற்காக, செல்லுலார் சிறையில் சில காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் பவர்.

'ஐ' படத்தில் பவர் ஸ்டார் நடித்த காட்சிகளை ஷங்கர் நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை படத்தில் சம்பந்தப்படுத்தி பார்க்கும் ஷங்கருக்கு இல்லை. எனவே பவர் கட் இருக்காது என்றும் கூறுகிறார்கள்.

படம் ரிலீஸான பிறகுதான் பவர்ஸ்டார் 'ஐ' படத்தில் இருக்காரா? இல்லையா? என்பது தெரியும்.

வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்?

 

சுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான்.

இதை எதற்கோ அழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.

இது ஆன்மிக காரணம்.

அறிவியல் காரணமும் இதற்கு உண்டு.!

தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன.

சுபநிகழ்வுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள்.

அவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும்

அத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ளும்.

அங்கு கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் காற்றில் பரவியிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும் உறிஞ்சும்.

 
back to top