.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, November 27, 2013

ஒரு சிகரெட் உங்களிடம் பேசுகிறது!

 

புகையிலைக்கு குட்பை ……

ஒரு சிகரெட் பேசுகிறது

வெளுத்த என் உடல் பார்க்க அழகுதான்,

ஆனால் என் உடல் முழுதும் விஷம்,

வெளியில் தெரியாத விஷ்ம்.

அணுஅணுவாக அழிப்பேன் உங்களை,

அதில் எனக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி,

நானும் ஒல்லி

என்னை நாடுபவனும் ஒல்லியாவான்,

என் நட்பைப் பெற.

நான் முதலில் இன்பத்தைக் கொடுத்து

ஏமாற்றுவேன்,

என் வசமாவான் அவன்.

நானில்லாமல் அவனில்லை

என்ற நிலை வந்ததும்

அவனை வதைக்க ஆரம்பிப்பேன்.

விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல்

என்னிடம் மாட்டுவார்கள்.

பின் தொலைந்தார்கள்,

புகை புகையாக வெளியே ஆனால்

உள்ளே புதைகிறார்கள் புகைக்குள்,

ஆனால் என்னிடம் ஒரு நல்லகுணம்.

முதலிலேயே.... என்னை நாடாதீர்கள்.

அபாயம்! என்று எச்சரிக்கை

விடுக்கிறேன்.

நல்லவனைக் காப்பாற்ற.

நுரையீரலைக் காப்பாற்ற,

அவனை சாவிலிருந்து காப்பாற்ற,

ஏன் எனக்கும் மனமுண்டே,

ஆனாலும் என் மேல் எல்லோருக்கும்

எத்தனை பாசம்

நூற்றி முப்பது கோடிகள்

என்னுடைய நண்பர்கள்.

ஒல்லியானாலும் எனக்கு எத்தனை வலிமை,

மனிதனே! உன் மன வலிமை விட

என் வலிமை பெரிதல்ல

விடுங்கள் என் நட்பை

பெறுங்கள் ஆரோக்கியத்தை.

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?

அக்காலத்தில் எல்லாம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால், பெயிண்ட் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு கருவி வந்துள்ளது. இப்படி வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால் நல்லதல்ல என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஏன் என்று தெரியுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வீட்டின் சுவற்றிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அது சீக்கிரம் போவதோடு, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இங்கு அந்த ஸ்ப்ரே பெயிண்ட்டை எதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ஸ்ப்ரே பெயிண்ட் அடிப்பதை தவிர்த்திடுங்கள்.

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?


* வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அதிலிருக்கும் கெமிக்கல்களின் நாற்றம் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருப்பதோடு, அந்த கெமிக்கல்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்திவிடும்.

* ஸ்ப்ரே பெயிண்ட்டானது, சாதாரண பெயிண்ட்டை விட எளிதில் போகக்கூடியது.

* மேலும் இந்த ஸ்ப்ரே பெயிண்ட் மிகவும் விலை அதிகமானது. அதுமட்டுமின்றி, நம் மக்களின் மனதில் விலை அதிகமான பொருட்கள் நல்ல தரமாக இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். அதனால் தான் பலர் இதனைப் பற்றிய உண்மையை சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர்.

* ஸ்ப்ரே பெயிண்ட் தண்ணீரை அதிகம் உறிஞ்சக்கூடியவை. அதிலும் மழைக்காலங்களாக இருந்தால், இந்த பெயிண்ட் தண்ணீரை உறிஞ்சி வீட்டின் உள்ளே ஆங்காங்கு ஈரப்பதமாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, அந்த ஈரப்பதம் உலர்ந்துவிட்டால், அங்கு திட்டுகளாக காணப்படும்.

* குறிப்பாக ஸ்ப்ரே பெயிண்ட் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே தான் ஸ்ப்ரே பெயிண்ட்டை பயன்படுத்த வேண்டாம் என்று பலர் சொல்கின்றனர்.

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...கவிதை!

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...

சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்..

சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள்.

பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக மனதில் நின்றாள்.

எந்தன் நெஞ்சை வென்று சென்றாள் - பின்

எதற்கும் இல்லை ஈடு என்றாள்..

என்னை விட்டு நீங்கி செல்லா, பிள்ளை தந்து

 எனக்கும் ஒரு தந்தை என்ற பெயரை தந்தாள்..

எந்தன் உயிர் போகும் வரை
 
 உந்தன் உயிர் நான் தான் என்றாள்.




எந்தன் தாயை நானும் கண்டேன் உந்தன் வடிவில்..

ஏனோ நானும், உந்தன்  தந்தை போல, மாறிவந்தேன்.

 மங்கை உன்னை கண்டபின்பு மாந்தனாக  மாறிவந்தேன்

மண்ணாக மாறிவிட்டேன்..

உன் கண்ணாக ஆகி விட்டேன்...

மாறாத காதல் கொண்டு,

தீராத ஆசைக்கொண்டு மணவாளன் ஆகி விட்டேன்,

பின் உன் உயிராக மாறிவிட்டேன்...

Tuesday, November 26, 2013

முளைகட்டிய நவதானிய சூப் - சமையல்!


 தேவையானவை:

முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,

வெங்காயம் - ஒன்று,

பூண்டு - 2 பல்,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,

மிளகு - காரத்துக்கேற்ப,

கொத்தமல்லி தழை - தேவையான அளவு,

எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

தேங்காய் பால் - 1 கப்

 புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


 * வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 * முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

 * மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 * காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

 * தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

 * அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

• பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

 
back to top