.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, November 27, 2013

நல்ல நண்பர்கள் ?

இதோ எனக்கு தெரிந்தவை

 நான் அறிந்தவை;;

 நல்ல நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் பிழை நண்பர்களில் இல்லை. நம்மனதில்தான்இருக்கிறது.நீங்கள் அறிந்த வரையறை பிழையானதாக இருக்கும். நண்பன் என்பவன் ஆபத்தில் உதவும் மூன்றாவது மனிதனாக மட்டுமின்றி, நீங்கள் வீட்டிற்குள் செல்லும்; போது ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் உங்கள் ஜுனியராகவோ, கால்களுக்கிடையே இடையே சுற்றிவரும் பூனைக்குட்டியாகவோ, சொன்னதையே சொல்லிச் சொல்லி இன்பம் தரும் கிளியாகவோ, உங்கள் சந்தோசத்தின் போது வாலையாட்டியும், துக்கத்தின் போது தானும் சாப்பிடாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டு நம் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் நாயாகவோ கூட இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட புத்தகங்களை உங்களது நண்பனாக்கிக் கொண்டால் சிறந்த மனிதனாவீர்கள். உங்கள் உள்ளங்கள் பரந்த வெளியாக இருக்கும் போது உங்களைச் சுற்றி நண்பர்கள் மட்டுமே இருப்பர்கள்.

நண்பர்கள் செய்யும் காரியம் ஏற்புடையதென்றால் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்துங்கள். கைகளைத் தட்டுவதால் உங்கள் ரேகைகள் அழிந்து போய்விடாது.  கைகளைத் தட்ட சோம்பல்படும் நண்பர்களிடம் சொல்லுங்கள் ; அமைதியாக வேடிக்கை பாருங்கள் – என்று. வேடிக்கை பார்த்துக் கொண்டே உங்களுக்குப் பள்ளம் வெட்டுபவர்களிடம் சொல்லுங்கள்,ஒரு நண்பனை
அழித்தால் அவன் போல  இன்னும் நூறு நண்பன் கிடைப்பான் என்று.
 
நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான்.

உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு.

ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். முக்கியமாக நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார்.

பெற்றோர்கள், மனைவியைவிட நமது துக்கத்திலும், சந்தோஷத்திலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாயிடமும், மனைவியிடமும், தந்தையிடம்கூட ஆலோசனை செய்ய முடியாத பல விடயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம்.

துன்பம் வரும் வேளையில் கடவுளை நினைக்கிறோம். அடுத்ததாக உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிறது.

இதுநாள் வரையிலும், நண்பர்களே எனக்கு இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது. நட்பு, தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், பால், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான்

அப்செட்டில் அனுஷ்கா!

 

இரண்டாம் உலகம்' படத்தின் ரிசல்ட் அப்படத்தில் கடுமையாக உழைத்த அத்தனை பேருக்கும் படு வேதனையைக் கொடுத்திருக்கிறது.

அதிலும் அனுஷ்கா ரொம்பவே அப்செட்.

இந்த படத்தை தெலுங்கில் 'வர்ணா' என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்கள்.

அங்கேயும் படம் ப்ளாப்.

இத்தனைக்கும் அனுஷ்கா நடிக்கும் 'ருத்ரம்மா தேவி' படத்தை ஆந்திராவே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்த நிலையில் 'வர்ணா', அனுஷ்காவிற்காவது ஓடியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததே வேறு.

'வர்ணா' ரிசல்ட் அனுஷ்கா நடித்து வரும் 'ருத்ரம்மாதேவி'க்கும் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'பாகுபாலி'க்கும் பெரிய தடைக்கல்லைப் போட்டிருக்கிறது.

'அருந்ததி' என்று பெரிய ஹிட் கொடுத்தார் அனுஷ்கா.

அந்த அளவுக்கு இந்தப் படமும் பேசப்படும் என்று நினைத்துதான், ஆக்ஷன் காட்சிகளில் நம்பிக்கையோடு நடித்தார்.

ஆனால், படத்துக்கு சரியான  ரெஸ்பான்ஸ் இல்லாததால் அப்செட்டில் இருக்கிறார் அனுஷ்கா.

தொண்டைச் சளிக்கு ஓமம்!


ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?

சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு உங்களுக்குக் கூடுவதால், மூக்கிலிருந்து நீராகவும், தொண்டைக் கபம், தும்மல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஐந்தும், வெற்றிலையுடன் சேர, இந்தக் குணங்களுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, கபத்தைக் குறைக்கின்றன.

மேலும் இவை அனைத்தும் பசியைத் தூண்டிவிடுவதால் உங்களுடைய செரிமானத்தின் தாமதம் விரைவில் குணமாகிவிடும். இவை மூலம் உட்கொண்ட உணவு செரித்துவிடுவதால் அகம் மலர்கிறது. செரிப்பைத் துண்டுவதாலேயே சீரகத்திற்கு, சீர்அகம் என்று பெயர். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகம் சாப்பிட்டால் வெகுட்டல், உமட்டல், வயிற்று உப்புசம், உளைச்சல், வயிற்று கனம் முதலிய ஜீரண உபாதைகள் நீங்கும்.

உண்ட களைப்பு நீங்க, வாயில் நீரூற்று நிற்க 5, 6 சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது வழக்கம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நுரைத்த கபத்துடன் காணும் இருமல் முதலியவற்றில் இது நன்கு உதவும். வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள விதை.

ஓமம் கபத்தைப் பிரித்து நாட்பட்ட இருமல், மூச்சிரைப்பு, கபம் வெளிவருவதற்காகக் கடுமையாக இருமுவது, இருமி இருமிக் கடைசியில் மிகக் கஷ்டப்பட்டுச் சிறிது கபம் வெளியாவது போன்ற கஷ்டங்களை நீக்கிவிடும். ருசியின்மை, பசி மந்தம், ஜீரண சக்திக் குறைவு, வயிற்று உப்புசம், வயிறு இறுகி கட்டிக் கொள்ளுதல், வயிற்று வலி, கிருமியால் வேதனை போன்றவற்றிற்கு ஓமமும் உப்பும் சேர்த்த சூரணத்தைச் சாப்பிடும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் கிராமங்களில் பழக்கத்திலுள்ளது.

பாவபிராகர் எனும் முனிவர் கிராம்பைப் பற்றி வெகுவாகப் புகழ்கிறார். காரமும் சிறிது கசப்பும் நிறைந்த அது, எளிதில் செரிப்பது. கண்களுக்கு நல்லது, குளிர்ச்சியானதாக இருந்தாலும் ருசி, பசியைத் தூண்டிவிட்டு கப பித்த ரத்த உபாதைகளை அகற்றக் கூடியது; மூச்சிரைப்பு, இருமல், விக்கல், க்ஷயரோகங்களை நீக்கக் கூடியது என்று தெரிவிக்கிறார். தன்வந்தரி நிகண்டுவில் இதயத்திற்கு நல்லதும், பித்தத்தைக் குறைப்பதும், விஷத்தை முறிக்கக்கூடியதும், விந்துவை வளர்ப்பதும், மங்களகரமானதும், தலையைச் சார்ந்த உபாதைகளை நீக்கக் கூடியது என்றும் கிராம்புவைப் பற்றி மேலும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏலக்காய் ருசி, பசி, ஜீரணச் சக்தி தரும். உடற்சூட்டைப் பாதுகாக்கும். வாயில் நீர் ஊறுதல், நாவறட்சி, வியர்வையுடன் கூடிய தலைவலி, வயிற்றில் கொதிப்பு, மலத்தடை, காற்றுத்தடை, வாந்தி, உமட்டல், சிறுநீர்ச் சுருக்கு, உஷ்ணபேதி, நெஞ்சில் கபக்கட்டு உள்ள போது ஏலத்தின் விதையைச் சுவைக்கலாம்.

வெற்றிலை, உணவிற்குப் பின் வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும், உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிப் பின் உபயோகிப்பர்.

அதனால் இவற்றை உபயோகித்து நீங்கள் விரைவில் கபத்தின் உபாதையிலிருந்தும், மந்தமான பசியிலிருந்தும் விடுபடலாம்.

விறு விறு வேகத்தில் விக்ரம் பிரபு!

 

அறிமுகமான 'கும்கி' படத்தில் நடித்து ஆஹா என பெயர் வாங்கினார் விக்ரம் பிரபு.

தற்போது விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேற மாதிரி ' டிசம்பர் 13ல் ரிலீஸ் ஆகிறது. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணனின் அடுத்த படம் என்பதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து விக்ரம் பிரபு இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் 'அரிமா நம்பி' படத்தில் ப்ரியா ஆனந்துடன் நடிக்கிறார்.

'தூங்கா நகரம்' கௌரவ் இயக்கும் 'சிகரம் தொடு' படத்தில் மோனல் கஜ்ஜாருடன் டூயட் பாடிக்கொண்டிருப்பவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

'கழுகு', 'சிவப்பு' படங்களை இயக்கிய சத்யசிவா அடுத்து இயக்கும் 'தலப்பாகட்டி' படத்தில் விக்ரம் பிரபுதான் ஹீரோ. 'ஹரிதாஸ்' இயக்குநர் ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கும் அடுத்த படத்திலும், எழில் இயக்கும் அடுத்த படத்திலும் விக்ரம் பிரபு நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் வாய்ப்புகளால் உற்சாகத்தில் இருக்கிறார் விக்ரம் பிரபு. கமிட் ஆன படங்களை சீக்கிரம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் விறு விறு வேகத்தில் பயணிக்கிறார்.
 
back to top