.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 28, 2013

ஆண்களின் காதல்..கவிதை .!!!

ஆண்களின் காதல்...!!!

ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி...!

அழகு தேவை இல்லை அன்பாய் இருந்தால் போதும்...!

அவள் சிரிக்க குழந்தையாய் மாறுவான்...!

அவள் அழுதால் தந்தையாய் மாறுவான்...!

சின்ன பரிசுகளில் சிலிர்க்க வைப்பான்...!

கட்டி அணைக்கும் பொழுது காமம் இருக்காது...!

முத்தம் இடும் பொழுது பொய்மை இருக்காது... !

எட்டி விலகும் பொழுது கண்கள் குளமாகும்... !

விரும்பி வரும் பொழுது தேகம் புதிதாகும்..!

உலகம் முழுவதும் அவள் தான்...!

அவள் வருகைக்கு காத்திருக்கும் பொழுது கால்கள் வலிக்காது...!

அவள் நேரம் தாழ்த்தி வந்தால் கோபம் இருக்காது...!

அவளுக்கு ஒன்றென்றால் உயிர்கள் தங்காது...!

காதலிக்கும் வரை காதலி...!

காதல் கல்யாணம் ஆகும் பொழுது இன்னொரு அம்மா...!

வயதுகள் தளரும் பொழுது காதல் தளர்வதில்லை...!

அவள் போதும்...! அவள் மட்டும் போதும்...!

வேறேதும் இல்லை அவளை விட பெரிய உலகம்...!

கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!


• தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

• கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

• கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.

• முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு
 கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.

• கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும்.

• குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.

• கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.

• கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.

• கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.

• மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்!


 பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.

ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் பெரிய அளவில் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

Wednesday, November 27, 2013

அப்பா-என் ஒவ்வொரு வயதிலும்!

ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

 என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!

என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!

என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!

என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!

என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்!

என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி

என் 20 வயதில் : எங்கப்பா தொல்லையைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்களோ?

என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!

என் 30 வயதில் : என் பையனை கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!

என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்

என் 45 வயதில் : அப்பா எங்களையெல்லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியல

 என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது

என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்
 
back to top