.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 28, 2013

பெரிய நம்பிக்கை.........!

உலகில் பெரிய காரியங்களைச் செய்தவர்கள் எல்லோருமே தங்களுடைய நம்பிக்கையை சிறிய செயல்களில் செலுத்தி வீணாக்கி விடவில்லை.

இதற்கு மாறாக நம்பிக்கையை பெரிய செயலில் செலவிடுவதே வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்து, அதற் காக ஓயாது பாடுபட்டு முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஜான் பயர்டு என்பவர் தான் டி.வி.யைக் கண்டு பிடித்தார். அவருடைய நம்பிக்கை எவ்வளவு பெரியதாகவும், அளவு கடந்ததாகவும் இருந்தது என்பதனை உணர்ந்து கொண்டாலே போதும்.

நம்முடைய நம்பிக்கையை எதில் வைத்து எப்படி செயல்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஜான் பயர்டின் இளமைப் பருவத்திலே பொறிகளை உருவாக்க வேண்டும் என்றஎண்ணம் இருந்தது. இந்த எண்ணத்தினால் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மின் இயல் கல்வியைக் கற்றார்.

பின்பு ஒரு தொழிற்சாலையில் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றினார். அதன் பின்பு ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவலில் கால் உறையை தயாரித்தார்.

அத்துடன் காலணிகளுக்கான மையும் உற்பத்தி செய்தார். ஆனாலும் அவற்றில் லாபம் கிடைக்கவில்லை. கடுமையான உழைப்பின் பயனாக உடல் தளர்வுற்று நோய் ஏற்பட்டது.

உடல்நலம் நன்றானதும் மறுபடியும் பழச்சாறு செய்யும் தொழிலை மேற்கொண்டார். அதிலும் எதிர் பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இனிமேல் தொழில் தொடங்க வேண்டாம் என்றமுடிவில் சில கம்பெனிகளிடம் பணிபுரிந்தார். போதுமான வருவாய் கிடைக்கவில்லை.

அதன் பிறகு எப்படியும் டி.வி.யை கண்டு பிடிக்க வேண்டும் என்று விடாப் பிடியாகச் செயல்பட நம்பிக்கையுடன் ஆரம்பித்தார்.

தேநீர் தயாரிக்கும் ஒரு பாத்திரமும் ஒரு தகர டப்பாவுமே ஆய்வுக்கருவி களாக அமைத்து ஆராய்ச் சியைத் தொடங்கினார்.

இரவு பகலாக ஆராய்ந்தார். எண்ணற்ற இடுக்கண்களையும் ஏமாற்றங்களையும் தோல்வி களையும் தாங்கிக் கொண்டார்.

வெற்றி பெற்றே தீருவது என்றதிடமான நம்பிக்கை யோடு ஆண்டு கணக்கில் ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தினார்.

இந்தச் சமயத்தில் அவருக்குப் பணம் தேவைப் பட்டது. பலரிடம் உதவி கேட்டார். இவருடைய வெற்றி யில் நம்பிக்கை வைத்து எவரும் பணம் தர முன்வரவில்லை.

ஆனால் அவருக்கோ தன்னுடைய ஆராய்ச்சியில் முழுமையான நம்பிக்கை இருந்தது பசியோடும் பட்டினி யோடும் வேலை செய்தார். இன்னல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டார்.

தன் முன்னே வைத்து ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த பொம்மையின் உருவம் மங்கலாகத் திரையில் விழுந்ததும் அவருக்கு எற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

பொம்மையை வைத்து ஆராய்ச்சி நடத்தி வெற்றி கண்ட அவர் மனிதனையும் முன்னே நிறுத்தி ஆராய்ச்சியில் வெற்றி காண வேண்டும் என்ற ஆவல் கொண்டார்.

உடனே செயல்பட ஆரம்பித்து மாடிப் படியிலிருந்து கீழே இறங்கி கண்ணில் பட்ட சிறுவனை அழைத்து பொம்மை இருந்த இடத்தில் சிறுவனை நிறுத்தினார்.

கருவிகளை இயக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! சிறுவனின் உருவம் கருவியில் தெளிவாகத் தென்பட்டது.

பயர்டு டி.வி.யை கண்டு பிடித்து விட்டார். பெரிய அளவில் நம்பிக்கை வைத்துச் செயல்பட்டு வெற்றியும் பெற்றார்.

நாமும் இவரைப் போன்று ஏன் பெரிய நம்பிக்கை வைத்துச் செயல்பட்டு வெற்றி பெறக் கூடாது? அவரைப் போன்ற ஆற்றலும் திறமையும் நம்மிடமும் உள்ளது அல்லவா! பின்பு ஏன் செயல்படாமல் சும்மா இருக்க வேண்டும் ?

நாமும் பெரிய நம்பிக்கையை வைத்துச் செயல்பட ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இதில் சந்தேகமே இல்லை. நாமும் இன்று முதல் பெரிய நம்பிக்கை வைத்து செயல்படுவோம். வெற்றிகளை குவிப்போம்.

வாழ்வின் சிறப்பு!

1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு.

2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு.

3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு.

4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு.

5. எது நடந்தாலும் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது சிறப்பு.

6. உன்னைப்போல் பிறரையும் நேசித்து வாழ்வது சிறப்பு.

7. ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாக
சேமித்து வைப்பது சிறப்பு.

8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் உன்னிடம் உள்ளதை வைத்து மனதிருப்தியுடன் வாழ்வது சிறப்பு.

9. அதிகமாக ஆசைப்படாமலும், கோபப்படாமலும், கவலைப்படாமலும் வாழ்வது சிறப்பு.

10. பிறர் நம்மீது வைத்திருக்கும் பாசம், நம்பிக்கையை சீர்கெடாமல் வாழ்வது சிறப்பு.

11. மனபலத்தையும், உடல் பலத்தையும் பாதிக்கும்
தீய செயல்களைச் செய்யாமல் வாழ்வது சிறப்பு.

12. தீயவர்களுடன் சேராமலும், நல்லவர்களுடன் நட்புறவு கொள்வது சிறப்பு.

13. அனைவரிடமும் அன்புடனும், பணிவுடனும், புன்னகையுடனும் பழகுவது சிறப்பு.

14. பிறரை ஏமாற்றாமலும், பிறரிடம் ஏமாறாமலும் வாழ்வது சிறப்பு.

15. தீயது என தெரிந்ததை செய்யாமலும், நல்லது
என அறிந்ததை துணிவுடன் செய்து
நல்ல மனசாட்சியுடன் வாழ்வது சிறப்பு.

127 ஆண்டுகால தயாரிப்பு இரகசியத்தை பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கும் 'கோக்கோ கோலா

 

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.

இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ஒர் பெருந்தொகையை கோக்கோ கோலா நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்றும் ஒருவர் மிரட்டல் விடுத்தது நினைவிருக்கலாம்.

1886ம் ஆண்டு தொழில் முறையாக தொடங்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள கோக்கோ கோலா நிறுவனம் 1910ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது.

மெல்ல, மெல்ல அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு குளிர்பானங்களின் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக கோக்கோ கோலா இன்றளவும் திகழ்கிறது. உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக அடையாளப் பெயராக 2011ம் ஆண்டு கோக்கோ கோலா தேர்வு செய்யப்பட்டது.

கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறிந்த சங்கதிதான். ஆனால், அட்லாண்டாவில் உள்ள தொழிற்சாலையில் உச்சகட்ட லேசர் விளக்குகளின் பாதுகாப்பில் அந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த பாதுகாப்பு பெட்டகத்தை தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோக்கோ கோலா பிரியர்கள் கண்டு களைப்பு நீங்கி, களிப்படைந்து வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு...

 * வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.

 * முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.

 * ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.

 * மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள்.

 * வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது.

 * எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம், அவர்களின் உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது.

 * வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு செல்வதே பாதுகாப்பானது". இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால், அவர்களைப் பார்த்து கூச்சல் போடக் கூடாது.

ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்கலாம். அதனால் மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்து விட்டு, பின் அவர்கள் கவனம் மாறும்போது வெளியே தப்பி வந்து சத்தம் போடலாம். அவர்களின் பலம் தெரியாமல் அவர்களைத் தாக்க முயற்சிப்பது மிகப் பெரிய தவறு.
 
back to top