.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 29, 2013

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்!

 

தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும்.

இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்.
இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1. தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்.

2. உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும்.இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

3. எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

4. கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது.

ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

nov 28 -malala_yousafzai_

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த
மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிருந்து வெளிவரும் வார இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

பெண் கல்வியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சர்வதேச நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார். சர்வதேச நாடுகள், மலாலாவை பாராட்டி பல விருதுகள் வழங்கி வரும் நிலையில், அண்மையில் லண்டனில் நடைபெற்ற கராவி குஜராத்-2 என்ற கூட்டத்தில் தைரியத்திற்காக வழங்கப்படும் ஹேமர் விருதுக்கு, மலாலாவும் அவருடன் சுடப்பட்ட மற்ற இரு சிறுமிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் பிரிட்டனை சேர்ந்த வாரப் பத்திரிக்கை ஒன்று பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 101 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மலாலா யூசப்சாய் செல்வாக்கு மிக்க முதல் ஆசியராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக, லேபர் கட்சியின் எம்.பி.யும், பாராளுமன்ற விவகாரக்குழு தலைவருமான கீத் வாஸ் இரண்டாவது செல்வாக்கு மிக்க ஆசியராக உள்ளார். ஒருமுறை பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த லட்சுமி மிட்டல் இப்போது இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் .

Thursday, November 28, 2013

நிம்மதி...!

நிறைவு,நிம்மதி இவையிரண்டையும் தேடியே எல்லோர் வாழ்க்கையும் இயங்குகிறது. சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதியும் மன நிறைவும் இருக்காது. ஏன்? நாம் எடுக்கும் எல்லா முடுவுகளுமே சரியானதாக அமைவதில்லை. அதேபோல் நம் வாழ்க்கை குறித்தும்,லட்சியம் குறித்தும் எடுக்கும் முடுவுகளும் சரியானதாக தான் இருக்கவேண்டும் என்பதல்ல. சில நேரங்களில் நாம் விரும்புபவை,நேசிப்பவை கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.

வாழ்க்கைப் பாதை என்றும் பூந்த்தோட்டமாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முட்களும் குழிகளும் நிரம்பியதாகவும் இருக்கலாம். வாழ்வில் எப்போதும் கவனம் தேவை. அந்த கவனம்,நிதானம் மட்டுமே உன் வாழ்க்கை மலர் போல பூக்க உதவும். நாம் என்ன வேண்டுமானாலும் நம் வாழ்வு குறித்து திர்மானிக்கலாம். ஆனால்,அந்த முடிவே தவறாகக் கூடாது. முடிவெடுத்த வாழ்க்கை முழுமையை வருவது நம் கையில் தான் உள்ளது. பல நேரங்களில் நம்மை பற்றி,நம் தோல்வியை பற்றி,நம் குறை பற்றி,நம் இயலாமை பற்றியே மனம் சிந்திக்கிறது.

வாழ்வில் தொடர்ந்து முன்னேற,நிறைவுகளையும் அடிக்கடி நினைவுக் கூற வேண்டும். இது வரை நடந்தவையே இன்று நடப்பதற்கு பாடம். ஆனால்,எல்லா விசயங்களும் ஒரே தடவையில் மனதில் பதிந்து விடுவதில்லை. கற்றுக்கொள்ளும் ஆர்வம்,நம்முள் நம்மை பரிசிலிக்கும் போதுள்ள இவையே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள தோன்றும். அதுவே நாளைய விளைவு.

ஒருவர் மன நிம்மதியை அடைய சில வழிகள்:

- தன் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வது.

- தன் சூழலை முழுமையை பார்ப்பது.

- மாற்று வழிகள் வாழ்வில் உண்டா என்று தேடுவது.

- வாழ்வின் பாதையை முடிவெடுப்பது.

- திறமைகளை வளர்ப்பது.

- ஒவ்வொரு கால கட்டத்திலும் விளைவுகளை பார்ப்பது.

"கனவு மெய்ப்படவேண்டும்,காரியமாவது விரைவில் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்"என்று பாரதி கூறியது போல,நம்மை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்தாலே நிம்மதி வரும்.

விடா முயற்சி..!


"எப்போதும் தோற்காதவர்கள் யாரெனில், எப்போதும் முயற்சி செய்யாதவர்களே" - இந்தக் கருத்தைப் பற்றி பார்ப்போம்.

என்னிடம் ஒரு வெற்றியாளரைக் காண்பியுங்கள் 'ஒரே இரவில் வெற்றி' என்பது எவ்வளவு போலியானது என்று நான் காண்பிக்கிறேன்.  ஒவ்வொரு வெற்றியாளனும் தோற்க துணிந்தால்தான் வெற்றி பெறுகிறான்.  பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்.

இரண்டாம் உலகிப்போரின்போது டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் பொறியாளர் வேலைக்கு நடந்த இன்டர்வியூவில் சொயிசிரோ தேறவில்லை.  ஆனாலும் அவர்நம்பிக்கை இழக்கவில்லை.  ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்தார்.

கவர்ச்சியாக இல்லை என்று டிவென்டியெத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தால் அவர் நிராகரிக்கப்படார். பல ஆண்டுகள் கழித்து மர்லின் மன்றோ எல்லோரும் நேசிக்கும் ஹாலிவுட் நடிகையாக விளங்கப்போகிறார் என்று ஃபாக்ஸுக்குத் தெரியவில்லை.
அவருடைய இசை ஆசிரியர் 'இசையமைப்பாளராக நீ ஜெயிக்க முடியாது' என்று கூறினார். பித்தோவனின் இசை இன்றும் வாழ்கிறது.

இவர்கள் அனைவருமே உலகத்துக்கு ஒரு விஷயத்தை நிரூபித்தார்கள்.  உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், உலகம் என்னதான் சொன்னாலும், உங்களால் முடியும் என்று நம்புகிற விஷயத்தைத் தொடர்ந்துவிடா முயற்சியோடு செய்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.  வெற்றிகரமான மனிதர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது பலமில்லாதது அல்ல.  அறிவில்லாதது அல்ல, ஆனால் விடாமுயற்சி இன்மைதான்.

உங்களுக்கு நிறைய வேட்கை இருக்கலாம்.  ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பாக செயல்படலாம்.  ஆனால் நீண்ட காலத்தில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஒவ்வொரு முறையும் முடிந்த அளவுக்கு சின்சியராகச் செயல்படுவதே முக்கியம்.  அப்போதுதான் நீங்கள் மிக நன்றாகத் தீட்டப்பட்ட வைரமாக இருக்க முடியும்.  தீட்டப்படுவது என்பதற்கு அர்த்தம், கடின உழைப்பு.
 
back to top