.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 30, 2013

பெற்றோர்களை பேணுவோம்!

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.

உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிக்கிறார்கள். மாறாக பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!

முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும். இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! "முன் செய்யின் பின் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: "எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக" என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?

நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள். கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?

எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது! அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார், தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.

ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வவ்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டேன். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்!

• பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி "நைட்டியில" அலையறது ஏன்னு புரியல?



• 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)


• புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி "10 வருடம்" ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!


• பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன "மளிகை லிஸ்டை", அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது... ஏங்க?


• பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், "அதே தோழியிடம்" 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது... ஏங்க?


• பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)


• பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது "பிரேக் போடுங்க", "அப்டி வளைக்காதீங்க", "பார்த்து ஓட்டுங்க"ன்னு சொல்றது... ஏங்க?


• தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, "தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில" போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே... ஏங்க?

அற்புத பொன்மொழிகள் அவசியம் படிக்கவும்!


தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!



எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.



பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.



நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.



முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..



ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.



யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.



மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.



பயமில்லாமை தைரியமல்ல. பலநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.



எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.



நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
 நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
 காளானாய் இராதே!

கிராமத்து அஜித் வர்றார்... - இயக்குநர் சிவா

 

என்னை எல்லோரும் 'சிறுத்தை' சிவான்னு சொல்றாங்கன்னு எனக்கே தெரியாது. நாலு மாசத்துக்கு முன்னாடிதான் தெரியும். என்னோட பெயரை மக்கள் மறக்கமால் இருந்தா போதும். எப்படிக் கூப்பிட்டா என்ன..?’ என்று அடக்கமாகப் பேசுகிறார் அஜித்தை வைத்து 'வீரம்' படத்தை இயக்கிவருறார் சிவா.

வீரம் எந்த மாதிரியான படம்? 

வீரம் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்துல சின்னக் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வந்து பார்க்குற ஜாலியான படமாக இருக்கும். அதே சமயத்துல ஆக்ஷனும் இருக்கும்.

அஜித் என்ன மாதிரியான கேரக்டர் பண்ணியிருக்கார்?


அஜித் இதுக்கு முன்னாடி இந்த மாதிரிக் கேரக்டர்ல பண்ணியிருக்கார். ஆனால் முழுப்படமும் பண்ணியதில்லை. கமர்ஷியல் படத்துல முழுக்க ஆக்ஷன் ஹீரோவா பட்டையக் கிளப்பியிருக்கார். வீரம் படத்தோட ஸ்பெஷல், அஜித் படம் முழுக்கவே, பட்டையக் கிளப்பியிருக்கார், முழுக்க வேட்டி சட்டைல தான் நடிச்சிருக்கார். அஜித் இந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதைல, இதுக்கு முன்னாடி நடிக்கல. அது தான் வீரம் ஸ்பெஷல்.

கதையைக் கேட்டுட்டு அஜித் என்ன சொன்னார்?

முதல் முறையா அஜித்தை சந்திச்சு, எந்த மாதிரி கதை பண்ணலாம் அப்படின்னு பேசிட்டு இருந்தோம். அப்போ அஜித் சார், ஸ்டைலிஷான படங்கள் எல்லாம் பண்ணிட்டார். நாம் ஏதாவது புதுசா பண்ணலாம்னு கிராமத்துக் கதைய படமா பண்ணலாம்னு ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணினோம்.

மண்ணின் மனத்தோடு படம் பண்றோம் அப்படிங்கிறதுல ரெண்டு பெருமே தெளிவாக இருந்தோம். தமிழ்நாட்டில இருக்கிற சிட்டி மக்கள்ல இருந்து கிராமத்து மக்கள் வரைக்கும் ரீச்சாகிற மாதிரியான ஒரு கதை இது. அனைத்து தரப்பு மக்களையும் இந்தப் படம் கவரும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

முதல் முறையா அஜித்தை எங்க சந்திச்சீங்க?

அஜித்தை வைச்சு படம் பண்ணனும் அப்படிங்கிறது எனது நீண்ட நாள் ஆசை. சிறுத்தை முடிச்ச உடனே, உங்களோட நீண்ட நாள் ஆசை என்னன்னு கேட்டாங்க. நான் ஹாலிவுட் படம் பண்ணனும்னு சொன்னேன். ஹாலிவுட் படம் பண்ணா யாரை இங்கிருந்து ஹீரோவா வைச்சு பண்ணுவீங்கனு கேட்டாங்க. உடனே என்னோட ஒரே சாய்ஸ் அஜித்தான்னு சொன்னேன். எனக்கு மனசுல தோணுச்சு, சொன்னேன். அந்த ஆசை உடனே நிறைவேறும்னு நான் எதிர்பார்க்கல.

ஒருநாள் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா கால் பண்ணினார். அஜித் சார் உங்களோட சேர்ந்து படம் பண்ணனும்னு ஆசைப்படுறார்னு சொன்னார். என்னால நம்பவே முடியல. அவரே அஜித் நம்பரையும் கொடுத்தார். நான் போன் பண்ணி அஜித்கிட்ட பேசினேன். என்னால நம்பவே முடியல.

ஒளிப்பதிவாளர் சிவா, இயக்குநர் சிவாவாக மாறக் காரணம் என்ன?

நான் 6ஆம் வகுப்பு படிக்கிறப்போ இருந்தே இயக்குநராகணும் அப்படிங்கிறது என்னோட ஆசையா இருந்துச்சு. நான் டிகிரி படிக்கல. அதனால இயக்குநர் படிப்பு பண்ண முடியாம போச்சு. உடனே ஒளிப்பதிவாளர் படிப்பு படிச்சேன். ஒளிப்பதிவாளரா படங்கள் பண்ணினாலும், நாம இயக்குநராகணும் அப்படிங்கிறது எனக்குள்ள இருந்த விஷயம்தான்.என்னோட இயக்குநர் பாதைக்கு ஒளிப்பதிவு உதவியா இருந்துச்சு.

தெலுங்குப் படங்கள், தமிழ்ப் படங்கள் என்ன வித்தியாசம் பார்க்குறீங்க?

தென்னிந்தியப் படங்கள் எல்லாமே ஒண்ணுதான். தமிழ், தெலுங்கு அப்படினு பிரிக்க முடியாது. இரண்டு மொழி படங்கள் பார்த்தீங்கன்னா, ஒரே எமோஷன்தான் இருக்கும். எனக்கு இரண்டு மொழிகளிலுமே தெரியும். ரெண்டிலுமே கதை எழுதுவேன், ஹீரோஸ்கிட்ட கதை சொல்லும்போது ஈஸியா இருக்கும். அதனால எனக்கு பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியல.

தமன்னா எப்படி தமிழ்ப் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினாங்க?
சிறுத்தை படம் முடிச்சவுடனே, நீங்க அடுத்த படம் பண்ணும் போது, ஹீரோயினா எப்போ கூப்பிட்டாலும் நான் ரெடின்னு சொன்னாங்க. வீரம் முடிவான உடனே, யார் ஹீரோயின்னு பேச்சு வந்துச்சு. அப்போ அஜித் - தமன்னா இதுவரைக்கும் ஒண்ணா படங்கள் பண்ணியதில்லை.

உடனே தமன்னாவிற்கு போன் பண்ணி, உங்க தேதிகள் வேணும், அஜித் சாருக்கு ஜோடி அப்படினு மட்டும் தான் சொன்னேன். எப்போனு கேட்டாங்க. நேரா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துட்டாங்க. இதுவரைக்கும் படத்தோட கதை என்னனு கேட்கல. என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சுருக்காங்க.

தொடர்ச்சியாக மாஸ் மசாலா படங்கள் இயக்கிட்டு இருக்கீங்க...

மாஸ் மசாலா படங்கள் பண்றது தான் ரொம்ப கஷ்டம். பொதுவான ஆடியன்ஸுக்காக படம் எடுக்கிறோம். இதில் பணக்காரங்க, ஏழை, புத்திசாலி... இப்படி பலதரப்பட்ட மக்கள் இருப்பாங்க. இவங்க எல்லாருமே தியேட்டருக்கு வந்து படம் பார்த்து சூப்பர்னு சொல்லணும். அப்பத்தான் படம் சக்சஸ். பணம் போடுற தயாரிப்பாளர், ஹீரோ, தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், படம் பார்க்க வர்ற மக்கள் இப்படி எல்லாரையும் திருப்திப்படுத்துறது ரொம்ப கஷ்டம். எல்லாமே கரெக்டா இருந்தா, ஜாக்பாட்தான்.

வீரம் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டு படமாக்கிய காட்சின்னு ஏதாவது இருக்கா?

படம் பெரிய பட்ஜெட். மொத்தம் 28 ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. எல்லாருமே பெரிய ஆர்டிஸ்ட். அப்போ எல்லாருக்குமே ஒரு பயம் இருக்கும். ஆனா, அந்த பயம் எல்லாத்தையும் போக்கியவர் அஜித்.’

ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர், ஒளிப்பதிவாளர், லைட் மேன் இப்படி எல்லாருக்குமே ஒரே நோக்கம் படம் நல்லா வரணும். இந்த நோக்கத்திற்கு காரணம் அஜித் மட்டுமே. ஏன்னா எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பேசுவாரு, பழகுவாரு. படத்துல நாலு தம்பிகளுக்கு மட்டும், அண்ணனா இல்ல. எங்க மொத்த யூனிட்டுக்கே அண்ணன் அஜித்.

இடைவேளை அப்போ ஒரு ரயில்ல வைச்சு சண்டைக் காட்சி இருக்கும். அதுல ரொம்ப சிரமப்பட்டு எடுத்தோம். 100 கி.மீ. வேகத்துல போற ரயில்ல வைச்சு எட்டு நாள் ஷூட் பண்ணினோம்.

அஜித் ரசிகர்களுக்கு 'வீரம்' ஸ்பெஷல் என்ன?

இது வரைக்கும் பார்க்காத அஜித்தை பார்ப்பீங்க. எல்லாருமே சொல்றது தானே நினைப்பாங்க. முதல் முறையாக அஜித் இறங்கியடிச்சிருக்கார். நாங்க பொங்கல் வெளியீடு அப்படினு அஜித் டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு போஸ்டர் வெளியிட்டோம் பார்த்தீங்களா. அதே மாதிரி தான் படமும். சும்மா புகுந்து விளையாடிருக்கார் மனுஷன். சிவா, நான் இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேசி நடிச்சதில்லை. எனக்கே புதுசாயிருக்கு அப்படினு சொல்வார். அவரே புதுசாயிருக்குனு சொல்றப்போ, பாக்குற ரசிகர்களுக்கும் புதுசாதானே இருக்கும்.

 
back to top