.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 1, 2013

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம்: நாளை அனுப்புகிறது சீனா!

 

சீனா முதல் முறையாக சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தனித்துவமான இடத்தைப் பெற வேண்டும் என்ற சீனாவின் லட்சியத் திட்டம் நிறைவேறுகிறது.

சாங் இ-3 (கியான் வைபிங் -3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக விண்கல ஏவுதளத் தலைமை அலுவலகக் குழுவினர் தெரிவித்தனர்.

சீனா இதற்கு முன்பு சந்திரனுக்கு அனுப்பிய 2 விண்கலங்களும் சந்திரனின் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. தற்போது சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை சீனா முதல் முறையாக அனுப்புகிறது.

விண்கலத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், ஏவுதளமும் அதற்கேற்ப நல்ல நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாங் இ-3 விண்கலம் "யுது' என்று அழைக்கப்படும் சந்திரனை ஆராய்ச்சி செய்யும் கருவியையும், அதை தரையில் நிலைநிறுத்தக் கூடிய கருவியையும் தாங்கிச் செல்கிறது. ("யுது' என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மக்களால் சந்திரக் கடவுளாக வணங்கப்பட்டு வரும் வெள்ளை முயலைக் குறிப்பதாகும்.)

சந்திரனில் உள்ள இயற்கை வளங்கள், மேற்பரப்பில் உள்ள பொருள்கள், புவியியல் அமைப்பு போன்றவற்றை "யுது' ஆய்வு செய்யும்.

விண்வெளி மையத்தில் ரஷியா அமைத்துள்ள மீர் விண்வெளி நிலையத்தைப்போல, ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையத்தை தானும் அமைக்க வேண்டும் என்பதுதான் சீனா தொடர்ந்து விண்கலங்களை சந்திரனுக்கு செலுத்தி வருவதின் பின்னணியாகும்.

சந்திரனையும் தாண்டி, செவ்வாய், புதன் போன்ற கிரகங்கள் தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் எங்களது விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் செயல்படத் தொடங்குவோம் என்று சாங் இ-3 விண்கலத்தின் தலைமை விஞ்ஞானி யே பெய்ஜியான் தெரிவித்தார்.

செவ்வாய் கிரகம் நோக்கி “மங்கள்யான்” : சாதித்து காட்டிய இந்தியா!

 

நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான் செயற்கைக்கோள் நேற்று வரை பயணித்த புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக துவக்கியது.இதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் நவம்பர் 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை, 12:30 மணிக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் நோக்கி தனது 68 கோடி கி.மீ பயணத்தை துவக்கியது. அண்மையில் சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது. இதை அடுத்து இந்தியாவின் மங்கல்யான் பயணத்தை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்த நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனை பெருமைக்குரியதுதானே?

டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம். மார்ச்சுவரி கொடுமைகள் குறைய வாய்ப்பு…!

 

உலகிலே மிக கொடுமையான விஷயம் மரண்ம். இயற்கை மரணம் ஏற்பட்டால கவலை இல்லை ஆனால் விபத்து, தற்கொலை மற்றும் இயற்கை அல்லாத ஒரு மரணம் சம்பவித்து விட்டால் கொடுமை – அதிலும் போஸ்ட்மார்ட்டம் என்னும் உடலை ஆய்வு செய்யும் ஒரு கொடுமை.

இதற்கிடையில் இதை அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் தான் செய்ய முடியும். அதை செய்ய பல ஃபார்மாலிட்டீஸ்……. போலீஸ் கம்ப்ளயன்ட் செய்திருக்க வேண்டும். மார்ச்சுவரி செய்ய மருத்துவர் நேரம் ஒதுக்க வேண்டும். சில சமயம் 1 நாளில் இருந்து மூன்று அல்லது 1 வாரம் கூட ஆகும் கொடுமை. அடுத்து அங்கிருக்கும் அக்க போர்கள்….. பான்டேஜ் வாங்கனும், காடா துணி வாங்கனும், காசு தாங்க சார் சரக்கு அடிச்சா தான் நல்லா அறுக்க முடியும்னு ஏற்கனவே சோகமா இருக்கிற உறவுகள் கிட்ட காசை புடுங்கு புடுங்குனு புடுங்கி மண்டையை இரண்டா புளந்து அப்புறம் உடம்பில் கழுத்தில் இருந்து கீழ் வரை ஒரே வெட்டு வெட்டு உள்ளே உள்ளது எல்லாம் எடுத்து அப்படியே கோனி தைக்கிற மாதிரி தைத்து ஒரு பொட்டலமாய் தான் தருவார்கள். இதனால் அவர்களுக்கு அளிக்க படும் இறுதி யாத்திரை குளியல் செய்ய முடியாது அது போக உடலை கட்டி கூட அழ முடியாத ஒரு அவலம் தான் இந்த போஸ்ட்மார்ட்டம்.

பெரும் சோகத்தை ஏற்படுத்தும் இதனை முறியடிக்க முதலில் இங்கிலாந்தின் மார்ச்சுவரியில் ஹைடெக் 3டி சி டி மற்றும் எம் ஆர் ஸ்கேனரை உபயோகபடுத்துகிறார்கள். இதன் மூலம் இறந்தவரை துல்லியமாக கத்தியின்றி ஆராய முடியும். அப்படியும் தேவை எனைல் தோலை சிறிதாக வெட்டினால் போதும். இதை செய்திருப்பது இங்கிலாந்து அரசாங்கம் செய்திருக்கும் கம்பெனி ஐஜீன் என்ற மலேஷிய கம்பெனி. இதன் மூலம் இங்கிலாந்தில் 2015க்குள் எல்லா மருத்துவமனையிலும் செய்ய இயலும். இதே போல மலேஷியாவில் உள்ல கோலலம்பூர் ஜி ஹெச் எனப்படும் அரசாங்க மருத்துவமனையிலும் இது நடக்கிறது.

இப்படி மோசமான மரணத்தின் இறுதி சடங்க்காற்றும் இந்தியாவுக்கு மிக அவசிய தேவையான ஒன்று இது. உலகில் எவ்வளவு பெரிய அப்பாடக்காராய் இருந்தாலும் ஒரு முறை ராயப்பேட்டை அல்லது ஜி ஹெச்சில் உள்ள சவக்கிடங்குக்கு போய் வந்தால் அவர்களின் அத்தனை ஆணவ ஆட்டமும் அடங்கும் என்று நான் அடித்து கூறுவேன்………….சே இவ்வளவுதானா மனிதன் வாழ்க்கை என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம்.!

உலகின் நீளமான பைக் சேல்ஸுற்க்காக இநதியா வருகிறது!

 

உலகின் மிக நீளமான ‘பைக்’ வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக விரைவில் இந்தியா வர உள்ளது. இந்த பைக்கில் பயணம் செய்வது என்பது காற்றில் கலந்து போகும் உணர்வை தர வல்லது. அத்துடன் கவர்ச்சிகரமான விசாலமான தோற்றத்துடன் உள்ள இந்த பைக்கை ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது.

பார்ப்போரை அசர வைக்கும் இந்த பைக் 11 அடி நீளமுள்ளது; அதிலும் சாதாரண பைக்கை விட ஐந்து மடங்கு அதிகமாக கிட்டத்தட்ட 650 கிலோ எடையைக் கொண்டுள்ளது; இதை ஓட்டுவதற்காக சிறப்புப் பயிற்சியுடன் விசேஷ லைசென்ஸ் பெற வேண்டும்.

அதிலும் இதுவரை எந்த பைக் தயாரிப்பு நிறுவனமும் பயன்படுத்தாத மிகப் பெரிய 6,728 சி.சி., திறன் கொண்ட ‘தம்தார்’ இன்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்று டிரான்ஸ்மிஷன் கருவிகளும், மூன்று கியர்களும் உள்ள .இந்த பைக்கின் முன் சக்கரத்தில் 38 அங்குல டயரும், பின் சக்கரத்தில் 42 அங்குல டயரும் பொருத்தப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த பைக்கைதான் விரைவில் விற்பனைக்காக இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
back to top