.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 2, 2013

பொன்மொழிகள்!

 


1. கோட்டையுள்ள நகரைக் காட்டிலும்

வலிமையுள்ளது இதயம்.

 - இங்கிலாந்து

 2. இதயம் பொய் சொல்லாது.

 - ஹாலந்து

 3. மறைத்து வைக்கப்பட்டுள்ள மனிதனின்

செல்வம் இதயம்.

 - பல்கேரியா


 4. இதயத்தின் மகிழ்ச்சியை முகத்தின் நிறத்தில் காணலாம்.

 - இங்கிலாந்து

 5. காயம்பட்ட இதயத்தைக் குணப்படுத்துவது

 கடினம்.

 - கதே


 6. இதயத்தின் சாட்சியம் அதிக வலிமை உள்ளது.

 - துருக்கி

 7. தன் இதயத்தை அறிந்து கொண்டவன்

 கண்களை நம்ப மாட்டான்.

 - சீனா



 8. ஏழைக்கும் ஒரு இதயம் உண்டு.

 - அமெரிக்கா


 9. வறுமையில்தான் மனம் திரும்பிப் பார்க்கும்.

- இத்தாலி


 10. மனமிருந்தால் மலையையும் சாய்க்கலாம்.

 - தமிழ்நாடு

பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையினம்..

 

ஆஸ்திரேலியாவின் “மாலிபவுல்’ என்னும் பறவை
 ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு
 பெற்றோர் யார் என்றே தெரியாது.


ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள்
 போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும்.
குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே
 பறக்க ஆரம்பித்து விடும்.


அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன.


இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப்
 பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது
 முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண
 வருவதில்லை.


பொறுப்பில்லாத மம்மி. இந்தப் பறவை பற்றிய
 இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே
 பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8


“அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது…”


அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் “பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி” என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள்.


 தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்:


“பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற விளிப்புகளும் அப்படி அழைக்கபடுபவரை பீடத்தில் வைத்து, அந்த ஆபாச விளிப்புகளில் மயங்கிய மக்கள் அவரை எந்த கேள்வியும் கேட்கமுடியாமல், விமர்சிக்க இயலாமல் செய்துவிடுகிறது”


அமெரிக்க ஜனாதிபதியை எப்படி விளிப்பது என்றும் ஒரு விவாதம் எழுந்தது. “ஹிஸ் ஹைனஸ், பிரசிடெண்ட் ஆஃப் தெ யுனைடெட் ஸ்டேட்ஸ்” என அழைக்கவேண்டும் என ஒரு சாரார் கூறினர். “ஹிஸ் எக்சலன்ஸி” என அழைக்கவெண்டும் என்றனர் சிலர். அரசியல் சாசன தந்தை ஜேம்ஸ் மேடிசன் அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.


அமெரிக்க ஜனாதிபதி “மிஸ்டர் பிரசிடெண்ட்” என மட்டுமே அழைக்கபடுவார்!!!!!!

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 

புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் விசித்திரமான மன இயல்புகளையும், வியப்படையச் செய்யும் கொள்கைகளையும் உடையவர். இவருடைய வாழ்க்கை மிகவும் சுவையானது.


-
இவர் எழுதும் காகிதம், மை, பேனா போன்றவைகளில்கூட சில பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார்.


-
நாவல் எழுதுவதானால் அதற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பேனாவினால் நீலநிறக் காகிதத்தில் மட்டுமே எழுதுவார். கவிதைகளை எழுதுவதற்குத் தனியாக சில பேனாக்களை வைத்திருப்பார். பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளை ரோஜா நிறம்கொண்ட காகிதத்திலும், கவிதைகளை மங்களகரமான மஞ்சள் நிறக் காகிதத்திலும்தான் எழுதுவார்.

-

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பேனா உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நீலநிற இங்க் – மையைப் பயன்படுத்தவே மாட்டார். ஏனென்றால், நீல நிற மை மனக்குழப்பத்தை – தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது இவருடைய ஆழ்ந்த நம்பிக்கை. இவர் எழுதிய நூல்கள் 1,200.

 
back to top