.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 2, 2013

புயல் கூண்டுகள் குறித்த விளக்கம்!

புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :

ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.

5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.

8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.

காதலர் தினத்தில் 'விஸ்வரூபம் 2' ?

 

'ஜில்லா', 'வீரம்' படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றன. 'கோச்சடையான்' படத்தை ஜனவரி 26ல் ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்தப் படங்கள் ரிலீஸ் ஆன பிறகு, 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிடப் போகிறார்களாம்.

கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

 'விஸ்வரூபம்' முதல் படம் ஆஃப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடப்பதாக கதை அமைப்பு பின்னப்பட்டிருந்தது.

பட முடிவில் வில்லன் தப்பித்துப் போவதாக காட்டியிருந்தார் கமல். இப்போது அதன் தொடர்ச்சி இந்தியாவில் நடைபெறுகிறதாம்.

பாடல்களை ஜனவரி மாதத்தின் இடையிலும், படத்தை பிப்ரவரி 14 அன்று வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார் கமல்.

காதலர் தினத்தில் 'விஸ்வரூபம்2' ரிலீஸ் ஆகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..!

சித்திரை மாத பௌர்ண மிக்கு தனிச் சிறப்பு
 உண்டு. அந்த நன்னாளில் ரமணாசிரமத்தில் நடந்த
 சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று.

ஆசிரமத்தில் உணவு உண்ட பின்னர் ஓய்வடுத்த
 சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு
 தன் வயிற்றைத் தடவியபடி ஒளவையாரின் பாடல் ஒன்றைப்
 பாடினாரராம்

”ஒருநாள் உணவை

 ஒழியென்றால் ஒழியாய்


 இரு நாளைக்கு


 ஏலென்றால் ஏலாய்


 ஒரு நாளும்


 என்னோ அறியாய்


 இடும்பை கூர்


 என் வயிறே


 உன்னோடு வாழ்தல் அரிது”


இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு
 மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.


”ஒரு நாழிகை வயிறு எற்கு


 ஓய்வு ஈயாய் நாளும்


 ஒரு நாழிகை


 உண்பது ஓயாய்


 ஒரு நாளும்


 என்னோ அறியாய்


 இடும்பை கூர்


 என் உயிரே


 உன்னோடு வாழ்தல் அரிது”


பாடலின் பொருள் இதுதான்:

”ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய
 எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை.
ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை
 நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை.
எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே!
உன்னோடு வாழ்தல் அரிது.”

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ”விளையாட்டுக்காக
 எழுதிப் பாடினேன்” என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது
 விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?

ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு,
வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!

அரசியல் பன்ச் இல்லாத ஜில்லா!

 

'ஜில்லா' பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவித்த பின்னர் இன்னும் ஸ்பீடாக பட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பாடல் காட்சிகளை ஜப்பான், ஹைதரபாத்தில் ஷூட் செய்த பின்னர்,  இப்போது பொள்ளாசியில் ஷூட் செய்து இருக்கிறார்கள்.

பசுமையான வயல்வெளிகள், தென்னை மரத் தோப்புகள், சோலைகளுக்கு நடுவில் விஜய் பாடுவதாக படத்தின் ஓப்பனிங் பாடல் இருக்கிறதாம்.

பொள்ளாச்சி விஜய்க்கு ரொம்ப ராசியான இடமும் கூட.
'வேட்டைக்காரன்', 'வேலாயுதம்' உட்பட பல படங்களின் பாடல் காட்சிகள் பொள்ளாச்சியில் ஷூட் செய்யப்பட்டவைதான்.

இப்போது 'ஜில்லா' படத்திற்கு செம மாஸ், க்ளாஸாக விஜய்யுடன் 80 நடனக்கலைஞர்களும், 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் பங்கேற்றுள்ளனர்.

அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவர் ராஜு சுந்தரம். இதில் அரசியல் குறித்து எந்த வரியும் இல்லையாம்.

டி.இமான் இசையில் படத்தில் மொத்தம் 6 பாடல்கள். அதில் விஜய், ஸ்ரேயா கோஷல் பாடிய மெலோடி பாடலைத்தான் ஜப்பானில் பூக்கள் பூத்து குலுங்கும் ஒரு தோட்டத்தில் ஷூட் செய்திருக்கிறார்கள்.

 
back to top