.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, December 4, 2013

இயற்கை முறையில் பயனுள்ள சில வைத்திய குறிப்புகள்!


 உணவுக்கு பின்பு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

 * துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

 * 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

 * காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

 * தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

 * அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

 * கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

 * பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

 * சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

 * குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

 * காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

 * வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

நடைப்பயிற்சி அணி!

காலை விடிந்ததும், 50 வயதுள்ள என் அத்தை, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். நான், என்னவென்று விசாரித்த போது, "வாக்கிங்' செல்வதாக சொன்னார். நான் அதை கண்டுகொள்ளாமல், "சரி போய்ட்டு வாங்க...' என்று கூறி, உள்ளே சென்று விட்டேன்.

வாக்கிங் செல்வதாக கூறிக் கிளம்பிய அத்தை, வாசலிலேயே, 10 நிமிடம் நிற்க, "என்ன அத்தே... இன்னும் இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க?' என்றேன். அதற்கு அத்தை என்னிடம், "எங்க டீம் வருவாங்க, அவங்களோடு சேர்ந்துதான் போவேன்...' என்றார். "அது என்ன... டீம்?' என்று கேட்டேன்.


அவர் கூறியது: தன்னந்தனியாக, "வாக்கிங்' போறப்போ, சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும் நடப்பாங்க. ஒரு சிலர், "வாக்கிங்' பற்றிய, முறை தெரியாம இருப்பாங்க. ஆனால், குழுவா சேர்ந்து, "வாக்கிங்' போனா ஒரே சீரா நடப்போம்; சிரமம் தெரியாது. அதோட நகை திருடர்கள், நாய் தொல்லை, எதுவும் கிடையாது. திரும்பி வரும் போது, பால் பாக்கெட், பேப்பர் வாங்கிட்டு வருவோம். அதோட பலரோடு பழகும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்...' என்றார்.


தனியாக மைதானத்திற்கோ, மாடியிலோ, "வாக்கிங்' செல்வதை விட, இதுபோன்று தெருவாசிகளோடு, ஓர் அணியாக, "வாக்கிங்' செல்வது புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். உங்கள் பகுதியிலும் இதுபோல சிலர் இணைந்து செயல்படலாமே!

ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !

“ அடக்கடவுளே !!! இந்த ஒரு சேலையை எடுக்கவா இத்தனை மணி நேரம்” என்று சலித்துக் கொள்ளும் கணவன்களின் குரல்களால் நிரம்பி வழியும் எல்லா துணிக்கடை வாசல்களும்.

“ஐயோ, உன் கூட துணி எடுக்க வந்தால் ஒரு நாள் போயே போச்சு…” என்று மனைவியிடம் புலம்பாத ஆண்கள் இருக்க முடியுமா என்ன ?.

இதற்கெல்லாம் இனிமேல் பெண்களைக் குற்றம் சொல்லாதீங்க. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ரசனை வேறுபாடுகள் அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்த ஒன்று என்கிறார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர்.

ஆண்கள் சட்டென ஒரு துணிக்கடையில் நுழைந்து தேவையானதை எடுத்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வெளியே வந்து சட்டென நடையைக் கட்டி விடுகிறார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்லவே. ஐந்தாவது மாடியில் தான் தேவையான பொருள் கிடைக்கிறது என்றால் அந்த மாடிக்கே கடைசியில் தான் போவார்கள்.

ஆண்கள் அரைமணி நேரத்தில் வாங்கிய பொருட்களுடன் திருப்தியடைந்து விடுகிறார்கள். ஆனால் பெண்களோ அத்தனை மணி நேரம் சுற்றி வாங்கி வந்த பொருளைக் கூட முழுமையாய் விரும்பாமல், இன்னும் கொஞ்சம் நல்லதாய் வாங்கியிருக்கலாம் என்றே நினைக்கிறார்கள்.

பல வேளைகளில் வாங்கச் சென்ற ஒரு பொருளை வாங்காமல் நான்கு பை நிறைய பொருட்களை அள்ளிக் கொண்டு வருவதும் நடந்து விடுகிறது.

காரணம் ஆண்களுடைய மனம் ஒரு செயலை உள்ளுக்குள் உறுதிப் படுத்திக் கொண்டு சட்டென சென்று முடித்துவிட்டு வரும் கொள்கை வகையைச் சார்ந்ததாம்.

ஆண்கள் மனம் முடிவை மையமாய் கொண்டு இயங்குவது போல, பெண்கள் மனம் பார்வை சார்ந்து இயங்குகின்றது. அவர்களுக்கு சுற்றுப்புறத்தை நன்றாகப் பார்த்து, கடையை அலசி, பல கடைகளில் அந்த பொருட்களைப் பார்த்த பின்பே முடிவு ஏற்படுகிறதாம். அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கே நிறைய நேரம் பிடிப்பதால் தான் அதிக நேரத்தைக் கடைகளில் செலவிடுகின்றனராம்.

ஒரு செயலைச் செய்ய வேண்டுமெனில் ஆண்கள் சட்டென அதை செய்து விடுவதும், பெண்களோ தங்கள் பெற்றோர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் விசாரித்து விட்டே செயல்களில் இறங்குவதும் இத்தகைய இயல்பு சார்ந்ததே.

ஆண்களும் பெண்களும் வாங்கும் புத்தகங்களில் கூட பல உளவியல் கூறுகள் இருக்கின்றன. குறிப்பாக ஆண்களை வசீகரிக்க ஒரு கவர்ச்சிப் படமே போதும். பெண்களுக்கோ நல்ல இலட்சியவாதிகளான, உயர்ந்த கொள்கைகளை உடைய, வாழ்வில் வெற்றி பெற்ற பெண்கள் வேண்டும்.

காரணம், ஆண்களுடைய சிந்தனை அட்டைப் படத்தில் அழகிய ஒரு பெண்ணைக் கண்டவுடன்

“எனக்கு அவள் வேண்டும்” என விரிகிறதாம்.

பெண்களுடைய சிந்தனையோ, “அவளைப் போல ஆக வேண்டும்”  என விரிகிறதாம்.

மரண‌ம் எ‌ன்பது எ‌ன்ன?

இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத‌்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?


உட‌ல் செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போவதுதா‌ன் மரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.


இதய‌ம் செய‌ல்படாம‌ல் ‌நி‌ன்று ‌வி‌ட்ட ‌பிறகு‌ம், மூளையானது இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் 2 ம‌ணி நேர‌ம் வரை கூட மூளை இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ப்பது உ‌ண்டு. இது ‌கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.


‌பி‌ன்ன‌ர்தா‌ன் மூளை‌யி‌ன் இய‌க்கமு‌ம் ‌நி‌ன்று போ‌கிறது. இதை செ‌ரிபர‌ல் டெ‌த் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள‌். இ‌ப்போதுதா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.


‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி தலை‌யி‌ல் காய‌ம் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் மூளை தனது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்‌தி‌யிரு‌க்கு‌ம். ஆனா‌ல் இதய‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களது உட‌ல்க‌ள்தா‌ன் தானமாக அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.


எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்
 
back to top