.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, December 5, 2013

சிந்தனைக்கு!

சிறிய ஊனத்துடன் பிறந்து வளர்ந்த குழந்தை ஒன்று,


விளையாட்டுப் பந்தயம் ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பியது.


அது வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதி விபரம் கேட்காமலேயே ஆறுதலாய்ப் பேச ஆரம்பித்ததார் அப்பா. 


” அதாவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டால் உனக்கு ஒரு விஷயம் குறைவுதானே” என்று ஆரம்பித்தார்.


போட்டியில் வென்றிருந்த குழந்தை சொன்னது….

...
“இல்லை அப்பா! எனக்கு எல்லாமே அதிகம்தான்! 


நான் ஊனம் என்பதனாலேயே, ஜெயிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம். அதனாலே என் உழைப்பு அதிகம்.


என் ஆர்வத்தை அறிந்ததால் இந்த சமூகத்தில் எனக்கு ஆதரவும் அதிகம்”.


பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம்தானே இருக்கிறது.

ஆரோக்கியமாக வாழ...!

 * தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்;
பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.

சிறிது நேரம் வாய்க்குள்
 தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

 * தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில்
 ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள்.
அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள்
போன்றவைகளை கண்டறியலாம்.

 * உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான
 அளவு சேருங்கள்.

 * முடிந்த அளவு வாகன
 பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்;
அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

 * தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது.
அப்படி செய்தால்
 இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.

 * குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும்
 தேய்த்து கழுவுங்கள்.

 * படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில்
 தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர்
 குடியுங்கள்.

 * முளைவிட்ட கடலை,
சிறுபயறு போன்றவைகளை காலை உணவில்
 சேர்க்க வேண்டும்.

 * கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.

 * உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.

 * அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக்
 கொள்ளுங்கள்.

 * இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

 * இரவில் அதிக நேரம்
 விழித்திருப்பதும், பகலில் தூக்கம்
 போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

 * கொழுப்பு நிறைந்த
 எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும்,
ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

 * தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு
 முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

 * தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

பெரியவருக்கு பரம திருப்தி !! குட்டிக்கதைகள்!

வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,

”நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,” என்றார்.

இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்! தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா!

அவர்கள் தினசரி விளையாடினார்கள்.

ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான் கொடுத்தார்.

மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.

நான்காவது வாரம், தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.

இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

 "வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா? இனி நாங்கள் இங்கே விளையாட வரமாட்டோம்.” என்று கூறிச் சென்று விட்டனர்.

பெரியவருக்கு இப்போது பரம திருப்தி !!!

துன்பம்‏!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்

- ஸ்காட்லாந்து பொன்மொழி


துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

- கவியரசு கண்ணதாசன்


உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.

- வால்டேர்


அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்

- நெப்போலியன்

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.

 - ஆஸ்கார் ஒயில்ட்


பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்

- பெர்னாட்ஷா

அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.

- ஹாபர்ட்.

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!

 - பாலஸ்தீனப் பழமொழி

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

- ப்ரெட்ரிக் நீட்சே

நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.

 - வின்ஸ்டர் லூயிஸ்

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்


குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்


சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்


வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல் *) பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!


அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை


நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்

 
back to top