.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, December 5, 2013

டிசம்பரில் வெளியாகும் 14 படங்கள்!

2013ம் ஆண்டில் ரிலீஸுக்குத் தயாராக கிட்டத்தட்ட 40 படங்கள் இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களையும் ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

ஆனாலும், கடைசி மாதம் என்பதால் பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று தீயாய் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி, இந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 14 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

டிசம்பர் 6ல் 'ஈகோ', 'கல்யாண சமையல் சாதம்', 'தகராறு', 'வெள்ளை தேசத்தின் இதயம்' ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன. 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் பிரசன்னா- லேகாவாஷிங்டனும், 'தகராறு' படத்தில் அருள்நிதி- பூர்ணாவும் நடித்துள்ளனர்.

டிசம்பர் 13ல் விக்ரம்பிரபு நடித்த 'இவன்வேற மாதிரி',  நித்யாமேனன் நடித்த 'மாலினி 22 பாளையங்கோட்டை', ஓவியா நடித்த 'மதயானைக்கூட்டம்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.

'எங்கேயும் எப்போதும்' சரவணன் 'இவன் வேற மாதிரி' படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்ரீப்ரியா 'மாலினி 22 பாளையங்கோட்டை' படத்தை இயக்கி உள்ளார். 'ஆடுகளம்' படத்துக்கு வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் 'மதயானைக்கூட்டம்' படத்தை இயக்கி உள்ளார்.

டிசம்பர் 20ல் கார்த்தி- ஹன்சிகா நடித்த 'பிரியாணி', ஜீவா, த்ரிஷா. ஆண்ட்ரியா நடித்த 'என்றென்றும் புன்னகை' படங்கள் வெளியாகின்றன. இதேநாளில் சேரன் இயக்கிய 'ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை',  பாலுமகேந்திரா இயக்கிய 'தலைமுறைகள்', மகேந்திரன் ஹீரோவாக நடித்த 'விழா' ஆகிய ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

டிசம்பர் 27ல் விஜய் சேதுபதி நடித்த 'ரம்மி', கஞ்சா கருப்பு தயாரிப்பில் மகேஷ் நடித்த 'வேல்முருகன் போர்வெல்ஸ்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன.

உணவில் எந்த அளவிற்கு உப்பு சேர்ப்பது நலம்?



உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள், அந்த வகையில் நாம் உண்ணும் உணவிற்கு ருசி உண்டாக்குவதில் உப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

இருப்பினும் உப்பை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, உணவில் சேர்த்தால் தான் அது உடல்நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். அளவிற்கு மீறி சேர்க்கும் போது அதன் விளைவாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இது பற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் வயிற்று புற்றுநோய், நெஞ்சுவலி, இருதய கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

உப்புசத்து குறைவான ரொட்டி(பிரட்), தானியங்களை காலை உணவில் சேர்க்கலாம். கடல்மீன், சிப்ஸ் ஆகியவற்றில் ஏற்கனவே உப்பு சேர்ந்திருப்பதால் குறைந்த அளவில் சேர்க்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 6 கிராம்(ஒரு டீஸ்பூன்) எடை அளவிற்கே உப்பு இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் 8.6 கிராம் அளவிற்கு சேர்க்கிறார்கள்.

ஆகவே குறைவான உப்பு சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்வது தான் உடலுக்கு ஆரோக்கியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தள்ளனர்.

அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள்!

நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?

அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள்

காலை உணவைத் தவிர்க்காதீர்!


பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!

காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்


வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்

டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி


அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

மசாலா பொருட்களின் மகத்துவம்!



 நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும், மசாலா பொருட்களும் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பவனவாகவும் சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துபவனாகவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுபவனாகவும் உணவின் தரத்தை மேம்படுத்துபவனாகவும் அமைந்துள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.


உடலின் எடையை குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும் மசாலா பொருட்களையும் பார்க்கலாம். வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளை தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனை கட்டுப்படுத்துகிறது. மஞ்சளுக்கு உடல் எடையை குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்பு திசுக்கள் உருவாவதை குறைக்க உதவுகிறது.


இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. வரமிளகாயில் கேப்சைசின் எனும் பொருள் அடங்கி உள்ளது. இது கொழுப்பை எரித்து பசியுணர்வை அடக்கி வைக்கிறது. இலவங்கப்பட்டை உடலின் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இலவங்கப்பட்டையானது ரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது.


நீண்ட நேரத்துக்கு பசியுணர்வு தோன்றாமல் பார்த்துக் கொள்கிறது. கொழுப்பினை விரைவாக செரிக்க செய்கிறது. இஞ்சியானது ரத்தத்தை நன்றாக சுத்திகரிக்கிறது. செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்கள் தேங்கி கிடக்காத வகையில் எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் சீரகம் உதவுகிறது. சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் எனும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகடிறது.


நமது செரிமான சக்தியை தூண்டி கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது. ஓட்டல்களில் சாப்பிட்ட பின்னர் சாம் சோம்பு சாப்பிட தருவார்கள். இதற்கு காரணம் வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கும் என்பது மட்டுமின்றி உணவு செரிமானத்துக்கு சோம்பு சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும் கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.
 
back to top