.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 8, 2013

பாரதி இதைப் பார்த்திருந்தால்..... கவிதை!


பாரதி இதைப் பார்த்திருந்தால்
 தலைப்பாகையை கழற்றிவிட்டு
 தண்டவாளத்தில் படுத்திருப்பான் !


கோவா கடற்கரை
 அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
 அலைகளிலும் கலக்கிறதா ?


காதலர் என்ற பெயரில்
 இந்த சதைப் பிராணிகள் சிலது
 தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
 அசிங்கப்பட்டுப் போகிறது.


அலைகள் விளையாடி
 ஆனந்தம் நிறைந்த
 மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
 சிற்பங்கள் நிறைந்த
 கஜுராஹோ கோயிலா ?


 ' காதாலாகி... கசிந்துருகி...
கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
 எழுதிய விரல்களை
 வெட்டிக் கொள்வான்.

தொழில்நுட்ப காதல்..!



பெண் அப்பா நான் லவ் பண்றேன்..


அப்பா : பையன் எந்த ஊரு..


பெண்: UK ல இருக்கான்...


அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?


பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...


WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ......


WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...


அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...


அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...


ONLINEல ஜாலியா இருங்க...


E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...


G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...


எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....


பெண் : ???????????

உங்கள் அக்கவுண்டில் பணம் குறைகிறதா? உஷார்!


முன்பெல்லாம் ரொக்கமாகப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள பயப்படுவார்கள். ஆனால் இப்போது டெபிட் கார்டுகளை வைத்திருக்கதான் அதிகம் பயப்பட வேண்டிருக்கிறது. காரணம், சமீப காலமாக பலருடைய பேங்க் அக்கவுன்டில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் சூறையாடப்பட்டு விடுவதுதான்.


ஏ.டி.எம். கார்டில் இருக்கும் தகவல்களை 'ஸ்கிம்மர்’ எனும் கருவி மூலம் அபகரித்து, அதைக் கொண்டு போலி கார்டுகளை உருவாக்கி, பணத்தை எடுத்து விடுகிறார்கள் சில சமூக விரோத சக்திகள்.


குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இத்தகைய நவீன கொள்ளைகள் அதிகமாக நடந்து வந்தாலும், மற்ற இடங்களிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


அதனால் பணத்தைப் பறிகொடுப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால்
 இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்காது.


கவனிக்க வேண்டியவை :


 *வழக்கத்திற்கு மாறாக ஏ.டி.எம். இயந்திரத்தின் முன்பக்கத்திலிருந்து ஏதாவது வயர்கள் வெளியே செல்வதைப் பார்த்தால் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாதீர்கள்.


 *பின் நம்பரை டைப் செய்யும்போது, அதை யாரும் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளுங்கள்.


 *பரிமாற்ற ரசீதுகளை ஏ.டி.எம். இயந்திர அறையிலோ அல்லது அருகிலோ தூக்கி எறியாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.


 *ஏ.டி.எம். இயந்திரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வங்கியைத் தவிர, அறிமுகம் இல்லாத வெளிநபரிடம் எந்த உதவியையும் கோர வேண்டாம்.


 *ஏ.டி.எம். சென்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மெஷின்கள் இருந்து ஏதாவது ஒன்று வேலை செய்யாமல் இருந்தால், மற்றதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், மற்ற மெஷின்களை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து, 'ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப் பட்ட மெஷினை பயன்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் நமக்கு வலை விரித்திருக்கலாம்.


 *ஏ.டி.எம். இயந்திரத்தைச் சுற்றி சந்தேகப்படும்படியான விஷயங்கள் அல்லது நடமாட்டங்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது உங்களது கணக்கில் நீங்கள் செய்யாத பரிமாற்றங்கள் இருந்தாலோ உங்களது வங்கிக்கும், காவல் துறைக்கும் முதலில் தெரியப்படுத்துங்கள்.


 *ஓட்டல்கள், கடைகள் போன்ற இடங்களில் பில்லை டெபிட் கார்டு மூலம் செலுத்தும் போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஏனெனில், நீங்கள் கார்டை கொடுத்து விட்டு உட்கார்ந்துவிட்டால், அதை ஸ்கிம்மர் பொருத்திய மெஷினில் ஸ்வைப் செய்தாலும் தெரியாமல் போய்விடும். அதன் மூலம் நம் ஏ.டி.எம். கார்டு தொடர்பான விஷயங்கள் நமக்கே தெரியாமல் திருடு போக வாய்ப்பிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கன்னடப் பாடல்!



நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.


 'பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே' என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள் மத்தியில் நடிகர் ரஜினி காட்டும் எளிமை, தன்னடக்கம் போன்ற அவரது நற்பண்புகள் போற்றப்பட்டுள்ளன.


ரஜினிகாந்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் இயக்குநர் ருஷியால் எழுதப்பட்டு பிரதீப் ராஜால் இசையமைக்கப்பட்டுள்ளது. விஜயப்பிரகாஷ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.


இதன் சிறப்பம்சமாக இந்தப் பாடலுக்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள் 1000 பேர் நடனமாடியுள்ளனர் என்று இயக்குநர் ருஷி தெரிவித்துள்ளார்.


 இந்தப் படத்தில் வரும் 12 முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு வேடத்தில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் நடிக்கின்றார்.
 
back to top