.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 10, 2013

தோல்வியே வெற்றி!


கலகமில்லா உலகமில்லை
 ரத்தமில்லா யுத்தமில்லை
 தோல்வியில்லா வெற்றியில்லை


நண்பனே!


உனக்குத் தோல்வியே வந்தாலும்
 தொடர்ந்து நீ போராடு
 நீயும் ஒரு நாள்
 வெற்றி பெறுவாய்


உனது வெற்றியின் வாசல் கதவுகள்
 உனக்கென கண்டிப்பாக திறக்கும்.
தொடர்ந்து நீ போராடு
 உனது வெற்றி தொடர போராடு

வெற்றி பெற்றவர்களின் தனித் தன்மைகள்!

   
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்


இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சிலத் தனித் தன்மைகள் வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு.


அமெரிக்காவிலுள்ள ” காலிப் ” என்ற நிறுவனம் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களில் 1500 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற் கொண்டது.


இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அந்தச் சாதனையாளர்களிடம் உள்ள சிறப்பான குணங்களை துல்லியமாக முறைப்படுத்திக் காட்டியுள்ளது. அவை :


1.) நடைமுறை அறிவு


சாதனையாளர்களில் 79 விழுக்காடு இந்த நடைமுறை அறிவு உள்ளவர்களாக இருந்தார்கள். நடைமுறை அறிவு தேவை என்பதையும் அறிந்து இருந்தார்கள். அதில் 61 விழுக்காட்டினார் நடைமுறை அறிவுதான் தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதைனையும் அறிந்து இருந்தார்கள்.


2.) தான் மேற்கொண்ட துறையில் சிறப்பான அறிவினைப் பெறுதல்:


நடைமுறை அறிவுக்கு அடுத்த இடத்தை பெறுவது ஒருவர் தான் எடுத்துக் கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுவதாகும். சாதனையாளர்களில் 75 விழுக்காட்டினர் இதனை முக்கியப் பண்பாகக் கருதுகின்றனர்.


3.) தன்னம்பிக்கை :



மிகச் சிறந்த சாதனையாளர்கள் தங்களிடமுள்ள வளங்களிலும் திறமைகளிலும் நம்பிக்கை வைத்தே செயல்படுகிறார்கள். 77 விழுக்காட்டினர் தன்னம்பிக்கைதான் தங்கள் வெற்றிக்கு அடிப்படைக் காரணம் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.


4.) புத்திசாலித்தனம் :


வெற்றி பெறுவதற்கு புத்திசாலித்தனம் முக்கியம் என 43 விழுக்காட்டினர் கூறினர். 52 விழுக்காட்டினர் புத்திசாலித்தனம் தான் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டனர்.


5.) எடுத்த செயலை முடிக்கும் திறன் :


நான்கில் மூன்று பங்கினர் தாங்கள் சாதனை புரிந்ததற்கு எடுத்த செயலை முடிக்கும் தங்களின் தனித் திறனே காரணம் என்று குறிப்பிட்டனர்.


வாரத்திற்கு 100 மணி நேரம் என்ற வகையில் உண்மையாகவும் கடினமாகவும் தொடர்ந்தும் விடாப்பிடடியாகவும் உழைத்த உழைப்பே சாதனை நிகழ்த்தக் காரணமாக இருந்தது என்கிறார் ஒரு பேராசியர்.


நடைமுறை அறிவு, தொழில் துறை அறிவு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், செயல்திறன் ஆகிய மேலே குறிப்பிட்ட ஐந்து பண்புகள் மட்டுமின்றி, தலைமைத் தன்மை, ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறன், மற்ற மனிதர்களோடு நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கமான உறவு, சில வேளைகளில் சிறிது அதிஷ்டமும் தேவையானவையாகும்.


இருப்பினும் மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து பண்புகளுக்கு சாதனை நிகழ்த்துவதில் முதன்மை பெறுகின்றன. இந்தப் பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால் சாதனையாளர் பட்டியலில் இடம்பெறுவது உறுதி.

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை!


உறுதியான நம்பிக்கை, 


நம்பிக்கை, 


எதிர்பார்ப்புடன் நம்பிக்கை


இந்த மூன்று வார்த்தைகளையும் அவதானித்தால் மூன்றிலையுமே
கூறப்படுவது ஒன்றை தான் அது நம்பிக்கை. ஆங்கிலத்தில் இந்த
மூன்றையும் வெவ்வேறு வார்த்தைகளினால் விவரிக்கபடுகிறது.

Confidence, 

Trust

 and Hope.



ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் வறட்சியால்
வாடினார்கள் அவர்கள் மழைக்காக பிரார்த்திப்பதாக முடிவு
செய்தார்கள். அப்போது அங்கு ஒரு சிறு பையன் குடையோடு
வந்தான். இது அவனது உறுதியான நம்பிக்கை (Confidence).



சிலர் சிறு குழந்தையை கொஞ்சும் போது தூக்கி போட்டு பிடித்து
விளையாடுவார்கள். அப்போதும் அந்த குழந்தை சிரித்து கொண்டே
இருக்கும். நீங்கள் கீழே விட மாட்டிர்கள் என்ற நம்பிக்கை.
இது அந்த சிறு குழந்தை உங்கள் மேல் கொண்ட நம்பிக்கை (Trust).



ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு செல்லும் பொது காலையில்
மீண்டும் கண் விழிப்போமா என்று நமக்குதெரியாது. இருப்பினும்
விழிப்போம் என்ற நம்பிக்கையில் அடுத்த நாள் செய்ய வேண்டிய
வேலைகளை நினைக்கிறோம் இது எதிர்பார்ப்புடன் நம்பிக்கை (Hope).

நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
 


அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.


அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.


ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டாள்.


ஒருநாள்...


அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.


தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.


அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.


பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.


நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.


ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
 


உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
 


1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
 


2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
 


3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
 
 

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
 
back to top