.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 10, 2013

“மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?” - நகைச்சுவை!


1. நோயாளி: தலை சுத்துது டாக்டர்…
-
டாக்டர்: என்னோட கண்ணுக்கு அப்படி ஒண்ணும்
 தெரியலையே!
-

-
2. ”சுப்பிரமணிக்கும் மாசிலாமணிக்கும் என்ன தகராறு?”
-
“”ரெண்டு பேர்லயும் இருக்கறது… ரெண்டு பேர்கிட்டயும்
 இல்ல… அதுதான் தகராறு..!
-


-
3. ராமு: உங்க மானேஜர் எதுக்கு, எப்பவும் கையில
 பிளேடு வெச்சுருக்கார்?
-
சேது: யாராவது சரியா வேலை செய்யலைன்னா
 அவங்க சீட்டைக் கிழிச்சுடுவாராம்!
-



4. “”மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?”
-
“”ஒரு மலை வேணும் சார்!”
-



5. அப்பா: உனக்கு ஸ்கூல்ல யாரை ரொம்பப் பிடிக்கும்?
-
மகன்: மணியடிக்கிற பியூனை ரொம்பப் பிடிக்கும்பா..!
-



6. “”பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம்
 உனக்கில்லை அப்பா!”

-
“”ஏண்டா அப்படிச் சொல்றே?”

-
“”பின்னே! அவன் அப்பா ஆபீஸிலிருந்து முழு பென்சில்
 கொண்டு வந்து அவனுக்குத் தர்றாரு. நீ துண்டுப்
 பென்சில்களையே தூக்கிக்கிட்டு வர்றே!”

சிந்தனை சிதறல்கள்!




மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!

-

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்

-

மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!

-

மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.

-

மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?

-

வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்

-

வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்

-

அவன் வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு

-

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது

-

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா!

கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?



கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.


அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.


சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 - 20 - 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.



வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.


‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.


பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும். பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும்.

பெண்களின் காதல் அழகு தான்!


ஆண் பேசிக்கொண்டிருக்க அமைதியாய் ரசிப்பது
 தனக்கு பிடிக்காததை பேசினாலும்...


ஆடவன் தோள் சாய அக்கம் பக்கம் பார்த்தபடியே
 திரு திரு என முழிப்பது...


தனக்கு பிடித்தவைகளை பற்றி காதலன் தானாய்
 அறிந்து வாங்கி கொடுக்க வேண்டுமென எண்ணுவது ...


வீட்டில் கைபேசியில் தோழியோடு பேசுவது போல்
 காதலனோடு பேசுவது அக்கம் பக்கம் பார்த்தபடியே ...


இரவுகளில் அவன் உடையை உடுத்தி ரசிப்பது ...


ஆடவன் தலை கோதிபடியே செல்லமாய் பேசுவது ...


அவனோடு வேறொரு பெண் பேசினால் அதை நினைத்து தனிமையில் தானாய் பேசிக்கொள்வது


 பேசாமல் இருந்தவள்...பேசியே கொல்வது ...


அவனை தூங்காமல் செய்துவிட்டு...தான் நிம்மதியாய்
 தூங்குவது ....


தன்னை மடி சாய்த்து நெற்றியில் ஒரு முத்தம் வேண்டுவது ....


போதும்..போதும்...


எல்லாமே அழகு தான்...


ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ
 
back to top