.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, December 13, 2013

கேவலமான உண்மைகள்



1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால்
 சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!


2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
 பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!


3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான
 வட்டி 12 சதவிகிதம்..!!


4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது
 பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!


5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு
 வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு
 பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும்
 இல்லை..!!


6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!


7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான
 இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை
 இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!


8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி
 சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று
 கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால்
 வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை
 பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!


10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால்
 பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம்
 இல்லை..!!!


11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில்
 வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக
 உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

அட அப்பாவி முதலமைச்சரே...!!




எங்களுக்காக எங்கும் கல்விக்
 கூடங்கள் திறந்தாய்...

சீருடைத் திட்டத்தினால்
பள்ளிகளில் ஏழை, பணக்காரன்
 பிள்ளைகள் என்கிற
 பாகுபாடுகள் நீக்கினாய்...

இலவச மதிய உணவுத் தந்தாய்...

அரசு செலவிலேயே ஆசிரியர்
 பயிற்சிகள் அளித்தாய்...

எல்லாக் கிராமங்களிலும் இரவுப்
 பாடசாலைகள் திறந்தாய்...

இன்னும்
 சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் அதில்
 எதிலாவது உனக்கான
 முத்திரையோ,
அடையாளமோ உண்டோ...?

எல்லாக் கல்விகூடங்களிலும் உன்
 படமாவது உண்டா...?

உன்னால் படித்த எங்களை தவிர
 உனக்கு வேறு அடையாளம்
 உண்டா...?

எம் "பச்சை தமிழரே"
பார்த்தீரா இன்றைய
 தலைவர்களை,




இவர்கள் அறிமுகம் படுத்தும்
 ஒவ்வொன்றிலும்
 இவர்களது அடையாளங்களை...

சோனியின் 2 இன் 1 யூஎஸ்பி !




பல ஸ்மார்ட் ஃபோன்களுக்கு மைக்ரோ யூ எஸ் பி என்னும் சார்ஜர் போர்ட் வழியாய் தான் மொபைல் சார்ஜும் டேட்டா பறிமாற்றமும் செய்து கொள்ள முடியும்.


இந்த காரணத்தால் இது வரை ஒரு ஃபோனில் இருக்கும் விஷயங்களை காப்பி செய்ய முதலில் மைக்ரோ யூஎஸ்பியை ஸ்மார்ட் ஃபோனில் சொருகி பின்பு அதை கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து அதை பின்பு அந்த டேட்டாவை யூ எஸ் பி மற்றும் தம்ப் டிரைவ் மூலம் காப்பி செய்ய வேண்டும்.இதே மாதிரி கம்ப்யூட்டர் டேட்டா டூ மொபைல். இதை எளிதாக்கும் வண்ணம் 2 இன் 1 யூ எஸ் பியை சோனி அறிமுகபடுத்தியுள்ளது.


இதன் மூலம் மைக்ரோ யூ எஸ் பி வழியே நீங்கள் மொபைல் டேட்டாவை ஏற்ற இறக்க முடியும்.


 அதே சமயம் சாதாரண கம்ப்யூட்டர் யூ எஸ் பி கூட யூஸ் செய்யலாம். இது இப்போதைக்கு ஆன்ட்ராயிட் ஃபோன்கள் மட்டும் யூஸ் செய்யலாம் ஆனால் நேற்று வின்டோஸ் ஃபோனிலும் / பிளாக்பெரியிலும் வேலை செய்தது என்பது கூடுதல் தகவல். 1200 ரூபாய் 16 ஜிபி / 2000 ரூபாய் 32 ஜிபி / 3200 ரூபாய் 64ஜிபி……………..ஜனவரி முதல் இந்தியாவிலும் கிடைக்கும்.

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக செட்டிலாக 2,02,586 பேர்கள் தயார்!




செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.இதில் இந்தியர்கள் 20,000 பேர்.மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன் பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது.


அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.


இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவில் இருந்தும், 6 சதவீதம் சீனாவில் இருந்தும், 5 சதவீதம் பிரேசிலில் இருந்தும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பிரிட்டன், கனடா, ரஷியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ், ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.


இத்தனை இலட்சததில் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தேர்வுக் குழு முதல்கட்டமாக தேர்வு செய்யும் தகுதியுடைய நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 2023ஆம் ஆண்டு ஒரு குழுவாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர் என்றும் அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் என்றும் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.


மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன்..


 பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
back to top