.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, December 13, 2013

சிந்தனைகள் பத்து..!



 *படித்தவனிடம் பக்குவம் பேசாதீர்கள்,
பசித்தவனிடம் தத்துவம் பேசாதீர்கள் .


 *மகான் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.


 *உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.


 *வாய்ப்பு ஒரு முறைதான் வரும்,
இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.


 *பகைவரையும் நண்பனாக கருதுங்கள், பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.


 *ஆசைகள் வளர வளர தேவைகள்
 வளர்ந்து கொண்டே போகும்.


 *எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ
 அவ்வளவு குறைவாகப் பேசுங்கள்.


 *மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.


 *கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.


 *அதிகம் வீணாகிய நாட்களில் நாம்
 சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

ஆத்திச்சுடி மொத்தம் 108:-



ஆத்திச்சுடி மொத்தம் 108:-

1. அறஞ்செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண்ணெழுத் திகழேல்.
8. ஏற்ப திகழ்ச்சி.
9. ஐய மிட்டுண்.
10. ஒப்புர வொழுகு.
11. ஓதுவ தொழியேல்
12. ஒளவியம் பேசேல்.
13. அஃகஞ் சுருக்கேல்.
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனிநீ ராடு.
17. ஞயம்பட வுரை.
18. இடம்பட வீடெடேல்.
19. இணக்கமறிந் திணங்கு.
20. தந்தைதாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மண்பறித் துண்ணேல்.
24. இயல்பலா தனசெயேல்.
25. அரவ மாட்டேல்.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகலா தனசெயேல்.
29. இளமையிற் கல்.
30. அறனை மறவேல்.
31. அனந்த லாடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப் படவாழ்.
35. கீழ்மை யகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்ப தொழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட் டொழி.
43. கௌவை அகற்று.
44. சான்றோ ரினத்திரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திருந்தச்செய்.
50. சேரிடமறிந்து சேர்.
51. சையெனத் திரியேல்.
52. சொற்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோ னெனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக் கடிமைசெய்.
57. தீவினை யகற்று.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வ மிகழேல்.
61. தேசத்தோ டொத்துவாழ்.
62. தையல்சொல் கேளேல்.
63. தொன்மை மறவேல்.
64. தோற்பன தொடரேல்.
65. நன்மை கடைப்பிடி.
66. நாடொப் பனசெய்.
67. நிலையிற் பிரியேல்.
68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல்.
70. நூல்பல கல்.
71. நெற்பயிர் விளை.
72. நேர்பட வொழுகு.
73. நைவினை நணுகேல்.
74. நொய்ய வுரையேல்.
75. நோய்க்கிடங் கொடேல்.
76. பழிப்பன பகரேல்.
77. பாம்பொடு பழகேல்.
78. பிழைபடச் சொல்லேல்.
79. பீடு பெறநில்.
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
81. பூமி திருத்தியுண்.
82. பெரியாரைத் துணைக்கொள்.
83. பேதைமை யகற்று.
84. பையலோ டிணங்கேல்.
85. பொருடனைப் போற்றிவாழ்.
86. போர்த்தொழில் புரியேல்.
87. மனந்தடு மாறேல்.
88. மாற்றானுக் கிடங்கொடேல்.
89. மிகைபடச் சொல்லேல்.
90. மீதூண் விரும்பேல்.
91. முனைமுகத்து நில்லேல்.
92. மூர்க்கரோ டிணங்கேல்.
93. மெல்லினல்லாள் தோள்சேர்.
94. மேன்மக்கள் சொற்கேள்.
95. மைவிழியார் மனையகல்.
96. மொழிவ தறமொழி.
97. மோகத்தை முனி.
98. வல்லமை பேசேல்.
99. வாதுமுற் கூறேல்.
100. வித்தை விரும்பு.
101. வீடு பெறநில்.
102. உத்தம னாயிரு.
103. ஊருடன் கூடிவாழ்.
104. வெட்டெனப் பேசேல்.
105. வேண்டி வினைசெயேல்.
106. வைகறைத் துயிலெழு.
107. ஒன்னாரைத் தேறேல்.
108. ஓரஞ் சொல்லேல்.

உலக கோப்பை கபடி : இந்தியா பெண்கள் அணி கோப்பையை வென்றது!




உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது.ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.


விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. அத்துடன் போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ கார் பரிசாக வழங்கப்பட்டது. 3வது இடத்திற்கான போட்டியில் டென்மார்க் அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித் தது குறிப்பிடத்தக்கது .

பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்:-




தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.


அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது அவற்றின் வளர்ச்சியைப் பொருத்த விஷயமாகும். ஆனால் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி இங்கு காணலாம்.

முதல் மாதம்


கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.

இரண்டாம் மாதம்

அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.

மூன்றாம் மாதம்

தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.

நான்காம் மாதம்

நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.

5ம் மாதம்

ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.

6ம் மாதம்

வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.

7ம் மாதம்

ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.

8ம் மாதம்
பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.

9ம் மாதம்

ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.

10ம் மாதம்

அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.

12ம் மாதம்

ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.

15வது மாதம்

தனியாக நடப்பார்கள். உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள். படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.

இவ்வாறாக குழந்தை வளர்ந்து சிறுவனாகிறது. இந்த படிநிலைகளில் சில குழந்தைகளின் வளர்ச்சியும், மற்ற சில குழந்தைகளின் வளர்ச்சியும் வேறுபடும்.

 
back to top