.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, December 13, 2013

தோல்வி என்பது அபிப்ராயம்தான்!



தோல்வி?? ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான். தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர்.


தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம்.


ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.


வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள்.


மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.


ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி.


ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.


தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.


தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?


சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.


ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.


நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது.


எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள்.


அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

மற்றவர்களை மன்னியுங்கள் மற்றவர்களுக்காக அல்ல!. உங்களுக்காக!


உங்கள் மனம் லேசாக-- மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக-- உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்க-- நீண்டகாலத் துன்பம் முடிவடைய-- மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம்.


ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள்.


மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் நிகழ்கின்றன என்று பார்ப்போமா?


உங்கள் மனம் லேசாகிறது:


ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும்போது உங்கள் மனம் லேசாகிறது.


உங்கள் புன்னகை, தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவதுபோல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது.


கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.


உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கிறது:


எதிர்மறை உணர்வுகளிலிருந்து எழுகிற அலைகள் நோய்களை உருவாக்க வல்லவை.


தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே ஆவியும் எழுகிறது. ஐஸ்கட்டியும் உருவாகிறது. அதுபோல, உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடாகவே உங்கள் உடலும் மனமும் இருக்கிறது.


ஒருவரை மன்னிப்பதால் மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. அதனால் உங்கள் ஆரோக்கியமும் முகப்பொலிவும் கூடுகிறது.


மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கிறார்கள்:


மிகக் கடுமையான விதிமுறைகளோடும் கோபத்தோடும் வாழ்கிற மனிதர்களின் மனதிலிருந்து எழுகிற அலைகள், எல்லோரையும் எட்டி நிற்கச் செய்பவை.

முள்ளம்பன்றியின் முட்கள்போல் அவை சிலிர்த்தெழுந்து வறட்டுப் பிடிவாதத்தின் நுனிகளை நீட்டுபவை.


உங்கள் மனம் மலர்ந்து, அதில் மன்னிப்பு என்கிற மணம் பரவுகிறபோது, அந்த நறுமணம் அனைவரையும் ஈர்க்கிறது. காரணம் தெரியாமலேயே பலரும் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அனைவராலும் விரும்பப்படுகிற மனிதராக நீங்கள் ஆகிறீர்கள்.


நீண்டகாலத் துன்பம் முடிவடைகிறது:



ஒருவரின் தகாத செயல் நடந்து முடிந்து நீண்ட காலம் ஆகியிருக்கலாம். ஆனால் அதுகுறித்த உங்கள் அதிர்ச்சியும், மனப்பொருமலும் தொடர்ந்து கொண்டே போகிறபோது நீங்களே துன்பத்திற்கு ஆளாகிறீர்கள்.


யாரோ செய்த தவறுக்கு நீங்கள் துன்பம் அனுபவிப்பது என்ன நியாயம்?


அந்த மனிதரை மன்னிக்கிறபோது உங்களின் துன்பம் முடிவடைகிறது.


உங்களையே எத்தனை நாள் தண்டிப்பது? :




ஒரு சம்பவத்தில் அநியாயமாய் இழைக்கப்பட்ட அவமானம் என்பது, நம்மைப் பொறுத்தவரை ஒரு தகாத தண்டனை.


திரும்பத்திரும்ப அந்த நினைவுச் சுழலுக்குள் சிக்கும் போதெல்லாம் நம்மை நாமே தண்டித்துக்கொள்கிறோம்.


அந்த சம்பவத்தை ஒருபாடமாக மட்டுமே பார்க்கிற பக்குவத்தை வரவழைத்துக் கொள்கிறபோதுதானே அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.



நடந்துமுடிந்த சம்பவத்தை மாற்றமுடியாதே தவிர அடுத்து நாம் செய்வது மிகச்சிறந்த செயலாக அமையவேண்டுமல்லவா. அந்தச் செயல்தான் மன்னிப்பு.


எப்படி மன்னிப்பது? :





சம்பந்தப்பட்டவரின் முகத்தைப் பார்த்து நீங்கள் உங்கள் மன்னிப்பைப் பிரகடனம் செய்யக்கூடத் தேவையில்லை. மனதுக்குள்ளேயே கூட மன்னிக்கலாம்.


சிறிது சிறிதாகவும் மன்னிக்கலாம். மனக்கண்முன் அவரைக் கொண்டுவந்து, அவர் செய்த தவறுகளையும் அதனால் உங்களுக்கேற்பட்ட உணர்வுகளையும் மானசீகமாகச் சொல்லி, இந்த சூட்டோடு அவரை மன்னிக்கிறபோது உங்கள் மனம் தெளிவடைகிறது. இதுவரை சுமந்த பாரத்தை இறக்கி வைத்த நிறைவு ஏற்படுகிறது.


மற்றவர்களை மன்னியுங்கள்….. மற்றவர்களுக்காக அல்ல! உங்களுக்காக!!

ஒரு சமயம் ஆயிரம் ரூபாய் நோட்டும், ஒரு ருபாய் நாணயமும் சந்தித்துக் கொண்டது?




ஒரு சமயம் ஆயிரம் ரூபாய் நோட்டும், ஒரு ருபாய் நாணயமும் சந்தித்துக் கொண்டது .


ஆயிரம் ருபாய் ,ஒருருபாயை நாணயத்தை பார்த்து ஏளனமாய் ,
 "நான் எப்போதுமே நடிகர்களிடமும் , பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே இருப்பேன், தொழிலதிபர்களின் பெட்டியில்தான் தூங்குவேன், நட்சத்திர ஓட்டலில் விளையாடுவேன், விலையுயர்ந்த காரில்தான் பயணிப்பேன் , என் வாழ்க்கை எப்போதும் பரபரப்பாக இருக்கும் கவுரவமாக இருக்கும் நீ எதற்கு என்னருகினில் நிற்பதற்கெல்லாம் தகுதி இல்லை"
என்றது தலைகனத்துடன்.


அதற்கு ஒரு ரூபாய் நாணயம் அமைதியாக சொன்னது.


 "நான் எதற்கு நீ செல்லும் இடத்திற்கெல்லாம் போய் அவதிப்படவேண்டும் ,


 என்னை பாதுகாப்பதே கோவில் உண்டியளில்தான், மண் உண்டியலில் குழந்தைகள் என்னை பத்திரப்படுதுகிறார்கள்.


 குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு நானும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறேன்.


 வறியவரின் பசியை போக்க நான் சிறுதுளி வெள்ளமாக இருக்கிறேன்" என்றது.


நான் என்ன சொல்லவறேன்னா:


ஒரு வறியவனுக்கு தன்னைப்பற்றிய கம்பீரம் இருக்குமானால்


பகட்டு மனிதனின் தலைகனமும் அடங்கிப்போகும்...




 யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லையே.

எனக்கு ஒரு யோசனை தோன்றியது...




எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.


இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்ப்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகிறது.

அதனால் யாருக்கு என்ன பயன்?


நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக மாறி வருகிறது.


விவசாய நிலங்கள் எல்லாம் PLOT ஆக மாறி வருகிறது இதனால் கூடிய விரைவில் நம் நாடு உணவு பொருட்களுக்காக மற்ற நாடுகளிடம் கை ஏந்தும் நிலை வரலாம்.


அதனால் நமது அரசு ஏன் விவசாயத்தை நடத்த கூடாது?



• ஒவ்வொரு மாவட்டதையும் அதன் தரம் வாரியாக பிரித்து அதற்கென ஒரு துறை அமைத்து அதனை விவசாய துறை அமைச்சகதிடம் ஒப்படைக்க வேண்டும்.


• இதில் விவசாயம் படித்த பட்டதாரிகளை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.


• விவசாய வேலை ஆட்களை அரசு வேலை போல நியமனம் செய்ய வேண்டும்.


• இதனை ஒரு பொது துறை நிறுவனம் போல செயல்படுத்த வேண்டும்.


• ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய ஆராய்ச்சி மையம் செயல் படுத்தவேண்டும். இதன் மூலம் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி விவசாய்திற்கு பயன்படுத்த வேண்டும்.


• இயற்க்கை வேளாண்மையும் செயல்படுத்த வேண்டும்.


இவை நடந்தால்?


• நம் நாடு உணவு உற்பத்தியில் முதலிடம் பெறும்

• உணவு ஏற்றுமதி அதிகரிக்கும்

• விவசாயம் அழியாமல் பாதுகாக்க முடியும்

• நாட்டில் பண வீக்கம் அரசின் கட்டுபாட்டில் இருக்கும்

• வேலை இல்ல திண்டாட்டம் ஒழியும்.

இன்னும் பல……………………………………..

ஏன் அரசாங்கம் டாஸ்மாக் நடத்தும் போது விவசாயம் செய்ய முடியாதா?
 
back to top