.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 17, 2013

அறிவாளி சிறுவன்...!




அந்த சலூன் கடையை நோக்கி அந்த சிறுவன் வருவதை பார்த்த அந்த கடைக்காரர், தன்னிடம் முடி திருத்திக் கொள்ள வந்தவரிடம் "சார் இப்ப இங்க வர்ற பையன சரியான முட்டாள்னு நீருபிக்கிறேன் பாருங்கன்னு சொல்லிட்டு,


ஒரு கையில் நூறு ரூபாயும் இன்னோரு கையில் இரண்டு ஐந்து ரூபாய் நானயங்களயும் கான்பித்து எது வேனுமோ எடுத்துக்கோ என்றார்.


சிறுவன் இரண்டு ஐந்து ரூபாய்யை மட்டும் எடுத்து சென்றுவிட்டான்.


கடைக்காரர் தன் கஸ்டமரிடம் பெருமையாக சொன்னார் டெய்லி இப்படி தான் சார் ஏமாந்துற்றான்.
முடி வெட்டி விட்டு வெளியே வந்தவர் அந்த சிறுவன் ஐஸ்கிரீம் கடையிலிருந்து வெளியே வருவதை பார்த்தார்.


அவனை கூப்பிட்டு ஏம்ப்பா இந்த வயசுல கூட உனக்கு நூறுக்கும், ஐஞ்சு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாதா என கேட்டார்.


சிறுவன் ஐஸ் கிரீமை நக்கிக்கொன்டே சொன்னான் அந்த நூறு ரூபாய எடுத்திட்டா அன்னையோட இந்த விளையாட்டு முடிஞ்சிறும் அங்கிள்!!


கடைகாரனை பாவமாய் பார்த்து சிரித்துவிட்டு போனார் கஸ்டமர்,

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?




பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

4. விரும்பியதைப் பெற இயலாமை.

5. ஒருவரையொருவர் நம்பாமை.

6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.

7. உலலாசப் பயணம் போக இயலாமை.

8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

9. விருந்தினர் குறைவு.

10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.

12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.

14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

கோபத்தை கையாள எளிய வழிகள்..




 1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

புகழ்ச்சி....?



புகழ்ச்சி இது ஒரு அதிசய மருந்து. இதனை உருவாக்க எந்த ஒரு கருவியும் தேவையில்லை. நாமே நமது எண்ணத்தால் இதனை உருவாக்கிட முடியும். இந்த மருந்தை மற்றவருக்குக் கொடுப்பதனால் “புகழ்பவரும் மகிழ்ச்சி அடைகிறார்! புகழப்பட்டவரும் மகிழ்ச்சி அடைகிறார்!!”.

இந்த அதிசய மருந்திற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. நமது ஆழ்மனதில் தோன்றும் எண்ண அலைகளே இதற்குக் காரணம்.

 பயன்கள்:

 உங்கள் குழந்தைகளிடம் தேர்விற்கு முன்னரோ அல்லது தினசரியிலோ சபாஷ்! நீ நன்றாகப் படிக்கிறாய் என்று கூறிப்பாருங்கள். இந்த மருந்தைக் கொடுத்தவுடன் குழந்தை முன்பு படித்ததை விட மேலும் ஆர்வமாக படிக்கத் தொடங்குகிறது. தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறது.

வியாபாரத்தில் உங்கள் வர்த்தக பங்குதாரர்கள் புகழ்ச்சியின் காரணமாக ஒத்துழைத்து உங்கள் வெற்றிக்கும் செல்வச் சேமிப்பிற்கும் உறுதுணை ஆகிறார்கள். புகழ்ச்சி அவர்களுக்கு கிடைக்கும்  போது அவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு மிகையாகக் கிடைக்கிறது.

இந்த மருந்தை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கும் அது போதுமான அளவில் கிடைத்து, உங்களை மகிழ்ச்சியாகவும், புகழ்மிக்கவராகவும் மற்றும் செல்வந்தராகவும் ஆக்கிவிடுகிறது.


அதிசய மருந்து பற்றி மூத்த அறிஞர்கள் கூறுவது:

சொல்வேந்தர் சுகி சிவம்: பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்! பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!! பிறர் உங்களைப் பாராட்டாத பொழுதும் நீங்கள் மற்றவர்களைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!!!

அமெரிக்காவின் மிகப்பெரிய தத்துவ ஞானியும், மனோ தத்துவ நிபுணரும் ஆன வில்லியம் ஜேம்ஸ் கூறுகையில், “மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்னவென்றால், பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவது தான்”.

நீங்கள் வெளிச்சத்தை மற்றவர்கள் மீது பாய்ச்சும் போது, அதன் பிரதிபலிப்பு உங்கள் மீது அதிகமாக வரத் தொடங்குகிறது. உங்கள் மீது நீங்கள் வெளிச்சம் பாய்ச்சுவதைவிட இது பிரகாசமானது. இறுதியாக, மற்றவர்களை நீங்கள் புகழ்வது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மனோபாவத்தை உங்களிடம் ஏற்படுத்துகிறது.
 
back to top