.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 16, 2013

மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!





நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:


காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம்.

ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.

ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.

கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.

பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.

ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.

சதகுப்பை இலைப் பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.

ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.

50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.

திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.

வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

வெளிப் பிரயோகம்:


சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.

லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.

கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.
சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம்.

சேர்க்க வேண்டியவை:

தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி.

தவிர்க்க வேண்டியவை:

குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம்

கனா காண்கிறேன் - கவிதை!





பல்லாங்குழி ஆடிய திண்ணை
 பாண்டி ஆடிய தெரு வீதி

 பட்டம் விட்ட மொட்டைமாடி
 பாடித் திரிந்த வயல் வெளி

துரத்திப் பிடித்த தும்பி
 பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சி

 கையில் ஏந்திய ஆட்டுக் குட்டி
 காத்துக் கிடந்த கனமழை

 விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டி
 விரட்டிச் சென்ற டயர் வண்டி

 திருடித் தின்ன மாங்காய் தோப்பு
 திட்டித் தீர்த்த காவல்காரன்

 அசைந்தாடிய ஆலமர ஊஞ்சல்
 ஆற்றைக் கடந்த பரிசல்

 அல்லி பூத்தக் குளம்
 அரசமரத் தடி பிள்ளையார்

 என அத்தனை நினைவுகளையும் சுமந்து சென்ற
 நெஞ்சம் தேடுது, எங்கே தொலைந்தது? நான் பார்த்த ஊர் என..

கனா காண்கிறேன்.....

உலகை வியக்கவைக்கும் ‘எக்ஸ்-ரே கண்ணழகி’!




உடலிலுள்ள கோளாறுகளை அறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட எவ்வளவோ புதுமையான மருத்துவ பகுப்பாய்வு முறைகள் தோன்றி விட்டன.ஆனால், 1987ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் தனது வெறும் கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஊடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவளாய் திகழ்ந்தாள்.


தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை ஊடுசக்தி மூலம் வெறும் கண்ணால் பார்க்க தொடங்கிய இவரது புகழ் காலப்போக்கில் உலகம் முழுவதும் படர்ந்து பரவியது.


இதையடுத்து, இவரிடம் உள்ள அற்புத சக்தியை அறிந்த உள்ளூர் மக்கள், இவரது பார்வை பட்டாலே நோய் குணமாகிவிடும் என நம்பத்தொடங்கி டெம்கினாவை வீடுதேடி படையெடுக்க தொடங்கினர்.


டாக்டரின் வயிற்றின் எந்த பகுதியில் ‘அல்சர்’ கட்டி உள்ளது என்றும், மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக் கட்டி அல்ல என்றும் தீர்க்கமாக கூறி இவர் மருத்துவ நிபுணர்களையே திகைக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியததை உறுதிப் படுத்தும் கீரை வகைகள்!




நம் முன்னோர்கள் பயன்படுத்திய, நூற்றுக்கணக்கான கீரை வகைகளின் பெயர்கள் தெரியாததால் அவை களைச் செடிகளாக மாறி விட்டன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் மாறுபாடு, பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால், பயன்பாட்டில் இருக்கும் கீரை வகைகளும், அழிய தொடங்கி விட்டதாம்.இதற்கிடையில் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் கீரையின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் மகத்துவ பலன்களை இங்கே பார்ப்போம்.

 * புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும். வாய் சுவையற்று இருந்தால் மாறி விடும். வாந்தி போன்ற குமட்டல் நிற்கும். நல்ல பசியும் உண்டாகும். ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாகும். வயிற்று பிரச்சினைகளும் தீரும்.

* அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும்.

* முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆனால் புளி சேர்க்கக் கூடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

* கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறு கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும். குறிப்பாக கண் புகைச்சல் நீங்கி, பார்வை பிரகாசமாகும்.

* கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும்.

* பசலைக் கீரையை, பசறைக் கீரை என்றும் சிலர் அழைப்பார்கள். இது அதிக சுவையை உடையது. அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, இந்த கீரையை கொடுத்தால் நாவறட்சியை தீர்க்கும்.

* பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். நாக்கில் ருசி இல்லாமல் இருந்தால் மாறி சுவையுணர்வு ஏற்படும். வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்றவற்றை நீக்கும். வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.

* வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.

* புளிச்ச கீரை என்றழைக்கப்படும் புளிப்புக் கீரையை அடிக்கடி சாப்பிடுவோருக்கு வாத நோய்கள் நீங்கும். ரத்தத்தில் உள்ள உஷ்ணம் மற்றும் சிக்கல்கள் தீர்ந்து, சுத்தமாகும். கரப்பான் என்று அழைக்கப்படும் நோய் அகன்று விடும். பித்தம் தொடர்பான நோய்களும் தீரும். நாக்கில் சுவையுணர்வை அதிகரிக்க வைக்கும். வயிற்றில் உள்ள கோளாறுகளை நீக்கும்.
 
back to top