.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 17, 2013

சூப்பர் ஸ்டாருடன் மோதத் தயாராகும் பவர் ஸ்டார்?




'லத்திகா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் 'பவர்ஸ்டார்' சீனிவாசன்.அந்தப் படத்தை ஒரே தியேட்டரில் ஓடவைத்து வெள்ளிவிழா கொண்டாடினார்.


அதற்குப் பிறகு. 'ஆனந்தத் தொல்லை', 'இந்திர சேனா', 'மூலக்கடை முருகன்', 'தேசிய நெடுஞ்சாலை' என பல படங்களுக்கு ஒரே சமயத்தில் பூஜை போட்டார்.


அதில். 'ஆனந்தத் தொல்லை' படம் மட்டும் எடுக்கப்பட்டு, ரிலிஸுக்குத் தயாராக உள்ளது.


இதற்கிடையில் தான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து பிரபலமானார். பண மோசடி வழக்கில் சிறைக்கு சென்று வந்தார்.


இப்போது 'சுட்ட பழம் சுடாத பழம்'. 'நாலு பொண்ணு நாலு பசங்க', 'நாலு பேர் ரொம்ப நல்லவங்க' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


'ஆனந்தத் தொல்லை' படத்தை எப்போது வெளியிடுவீர்கள் என்று அவரிடம் கேட்டால், சூப்பர் ஸ்டார் ரஜினியின்  'கோச்சடையான்' எப்போது ரிலீசாகுமோ அன்றே எனது 'ஆனந்தத் தொல்லை'யும் வெளிவரும் என கூலாக சொல்கிறார்.

தம்பியைப் புகழும் சிம்பு!




சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில்பாண்டிராஜ் இயக்கும் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 20ல் தொடங்குகிறது.


இந்த படப்பிடிப்பில் சிம்புவும், நயன்தாராவும் கலந்துகொண்டு நடிக்கின்றனர்.


ஆறேழு வருடங்கள் கழித்து இவர்கள் இரண்டுபேரும் இணைவது உண்மையிலேயே ஒரு புதுவிதமான காம்பினேஷன் தான்.


அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


சமீபத்தில் இந்தப்படத்திற்கான முதல் பாடல் கம்போஸிங் நடந்தது. குறளரசன் இசையை லயித்துக்கேட்ட சிம்புவும் பாண்டிராஜும் ‘நீ நல்லா வருவடா’ என ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்துள்ளார்கள்.


சிம்பு தன் தம்பியை 'நல்லா மியூசிக் பண்றான்' என  பார்ப்பவர்களிடம் புகழ்ந்து தள்ளுகிறாராம்.

மருந்தாகும் பூண்டு...!




 பூண்டை பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும்.

நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.

ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கெண்டால் வாதநோய் கட்டுப்படும்.

பூண்டுச் சாறுடன் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப்படும்.

பூண்டை சிறிதளவு நீர் கலந்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து உட்கொண்டால் இருமல் கட்டுப்படும்.

பூண்டை நசுக்கி ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உருவாகும் கால் வீக்கம் குறையும். ரத்தக் கொதிப்பும் கட்டுப்படும்.

பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம் சூட்டில் மைபோல் அரைத்துத் தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால் தொண்டை வீக்கம் குறையும்.

உணவில் மருந்தாக உபயோகப்படுவது பூண்டு. பல மருத்துவ குணம் உள்ளடங்கியது என்பதால் தினசரி உணவில் பூண்டை அனைவரும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சங்குப் பூவின் மருத்துவக் குணங்கள்....




 சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு உண்டு. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.


இரத்த குழாய் அடைப்பு நீங்கும்

 அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்.

சங்குப்பூ, வேர், திப்பிலி, விளாம்பிசின், ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு 15 கிராம் சுக்குடன் நீர் விட்டு அரைக்க வேண்டும். சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். ஒரு மாத்திரை கொடுக்க நன்கு பேதியாகும். சிறுகுழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்க வேண்டும்.

நெறிகட்டிகள் குணமாகும்


 சங்குப்பூ, இலை, உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும். குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.

நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.

சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிட காய்ச்சல், தலைவலி ஆகியவை தீரும். 

 
back to top