.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, December 18, 2013

புதுக்குறள்.....?




                                            ******புதுக்குறள் *******


1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
 செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
 சோகாப்பர் hack செய்யப்பட்டு.

5.விரும்பிய மனம் விரும்பா விடின்
 துரும்பா இளைப்பார் தூய காதலர்..

6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

7.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
 வாயினால் சுட்ட வடை

8.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
 அரியவாம் கடலைபோ டுதல்

9.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
 ஆறாதே லேடியால் கெட்ட மனம்

10.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
 தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

11.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக...

தாய் மடியில் தலைவைத்த காலம் வருமா ?



வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

இந்திய தொழில்நுட்பம்!




இந்தியா சைனாவைப் போல் ஒரு பெருமைமிகு செயலில் இறங்கியுள்ளது அதுதான் சூப்பர் கம்யூட்டர் ஆராய்ச்சி. இந்த தொழில்நுட்பமானது சூப்பர் கம்யூட்டர்  PARAM yuva-II, ஆகும்.



இது ஒரு புதிய 500-teraflop/s veesion ஆகும். இந்த PARAM yuva-வின் computing பவரானது 54 teraflop/s to 254 teraflop/s ஆகும்.


இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உலக நாடுகளின் மத்தியில்  இந்தியாவின் மதிப்பு உயரும்.


அமெரிக்கா முதன் முதலில் GPS ஐ(Global Positioning System) இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடித்தது. அதனை தொடர்ந்து சைன, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் கண்டுபிடித்தன.





தற்பொழுது வளர்ந்து வரும் நாடுகள் தரவரிசையில் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் இந்தியா 2014- ஆம் ஆண்டு Satellite Based Navigation System 'GAGAN' என்ற GPS தொழில்நுட்ப்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் புகழ் உலக அராங்கில் பதிவுசெய்யப்படும்.

ஓர் வரலாற்று அதிசயம்...?




இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண முடியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம். எகிப்தின் பிரமிட்டுக்கள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் இது இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகின்றது. வரலாற்றில் பல சமூகங்களும் இப்பணியில் குறிப்பிடத்தக்களவு பங்கு கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களால் பல...


மில்லியன் கணக்கான மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டு இச்செயற்றிட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.


அதிகபட்டசம் ஒவ்வொன்றும் 4 டன்    எடையுடைய 82 வரையான நீல பளிங்கு கற்கள் ஏறக்குறைய 240 மைல்களுக்கு அப்பால் உள்ள பிரசெலி மலைத்தொடரில் இருந்து எவ்வாறு இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டன என்ற வினாக்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. 82 வரையான நீல பளிங்கு கற்களால் அமைந்த முதலாவது வட்டம் கி.மு 2150 வருடங்களுக்கு முன்பு முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. பின்னர் 150 வருடங்கள் கழித்து மேல் உள்ள கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதவாது கி.மு 2000 ம் ஆண்டளவில் இது நடைபெற்றிருகின்றது.


இத்தகைய பிரமிப்பு ஊட்டும் செயற்றிட்டம் தொழில்நுட்ப வசதிகள் எதுமற்றிருந்த அக்காலத்தில் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் அதிகளவான மனித வலு பயன்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும் இராட்சத விலங்குகள், அபூர்வ சக்திகள் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கற்பனைக்கதைகளும் இதன் பின்னணியில் உள்ளன. இத்துணை சிரமங்களோடு இக்கற்தூண்களால் வடிவமைக்கப்பட்ட வட்டம் ஏன் உருவாக்கப்பட்டது என்பது இதுவரை உறுதியாக அறியப்பட்டிருக்கவில்லை. பெருமளவான வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதுபோல் அது ஒரு முக்கிய சமய வழிபாட்டு ஸ்தலமாக இருக்கலாம் என்ற கருத்துக்களே மேலோங்கியிருக்கின்றன. எனினும் இது வரலாற்றில் ஓர் நிர்வாக மையம், பாதுகாப்பு அரண், ஆய்வகம் போன்று இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் உண்டு.


எப்படியிருந்த போதும் எந்த மதமும் உரிமைகோராத ஒரு வரலாற்று சின்னமான இது ஆதி சமூகங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை.
 
back to top