.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, December 19, 2013

'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்!




இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!

அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.

எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.

தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.

மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.

சமையல் எண்ணை ஓர் தெளிவு!



சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.


1) முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid)


2) முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid)


இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linolic Acid கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.

இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும். அதே நேரம் மார்க்கக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நிச்சயம் முடியும்.

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.

1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்

2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்

3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்

4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு

5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு


எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!

செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள்?




பல்வலி குணமடையும்

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்


சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

மாலைக்கண்நோய்

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகள்?



நாம் வாழ்வில் கடைப்பிடிக்க  வேண்டியவைகள் :


முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - தாய், தந்தை.

மிக மிக நல்ல நாள்                   - இன்று

மிக பெரிய வெகுமதி                  - மன்னிப்பு

மிகவும் வேண்டியது                   - பணிவு

மிகவும் வேண்டாதது                  - கோபம்

மிக பெரிய தேவை                    - சமயோஜித புத்தி

மிக கொடிய நோய்                    - பேராசை

மிகவும் சுலபமானது                   - குற்றம் காணல்

மிகவும் கீழ்தரமான விஷயம்       - பொறாமை

நம்ப கூடாதது                            - வதந்தி

ஆபத்தை விளைவிப்பது              - அதிக பேச்சு

செய்ய கூடாதது                         - உபதேசம்

செய்ய வேண்டியது                    - விவாதம்

உயர்வுக்கு வழி                          - உழைப்பு

நழுவ விடக்கூடாதது                  - வாய்ப்பு

பிரிய கூடாதது                           - நட்பு

மறக்க கூடாதது                         - நன்றி

மறக்க வேண்டியது                    - பிறர் நமக்கு செய்த தீமையை
 
back to top