Thursday, December 19, 2013
எதிரிகளை வெல்லுங்கள்.!
7:59 AM
Unknown
No comments
1.நம்மை அறிந்தோ அறியாமலோ வாழ்வில் எதிரிகள் உருவாகி விடுகின்றார்கள்.நமது கருத்துக்கு முரன்பாடான கருத்துக்களை செயல்களை நம்மை நோக்கி செயல் படுத்துபவர்கள் நேரிடையான எதிரிகள்.நம்முடன் இருந்து கொண்டே குழி பறிப்பவர்கள் மறைமுகமான எதிரிகள்.
2.இந்த மறைமுகமான எதிரிகளை நாம் தவிர்க்கவே முடியாது அவர்கள் நமது அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கும் உறவினர்கள்,நண்பர்கள் ,என்ற போர்வையில் இருப்பார்கள் .நாம் ஒரு அடி முன்னேற எடுத்து வைக்கப் போகின்றோம் என்றால் அதை முளையிலேயே கிள்ளி எரிவதில் வல்லவர்கள்.
3.இவர்களை எப்படி நாம் எதிர் நோக்குவது இப்படிப்பட்ட எதிரிகள் இல்லாமல் வாழ்வை நாம் அமைக்க முடியுமா?என்றால் இவர்கள் இல்லாமல் நமது வாழ்வு இருக்காது ,ஆகவே இவர்களை நாம் தவிர்க்க முடியாது .ஆனால் எதிர் கொள்ளலாம்.
4.அதே போல் நேரிடையான எதிரிகளை எதிர் கொள்ள நேரிடையான செயல்கள் மேற்கொள்ளலாம்,நாம் அவர்களை விட்டு விலகலாம்,நண்பர்களாக மாற்றலாம் இல்லையென்றால் அவர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்கலாம்.
5.இவர்களை எதிர் கொள்வதில் தான் நமது வாழ்க்கை வெற்றி ரகசியம் இருக்கின்றது .இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல் நாம் பழிவாங்கல் என்னும் செயலில் இறங்கினால் அது நமக்குத்தான் கெடுதலைத் தரும்.
6.ஒவ்வொரு மனதிலும் உருவாக்கப்படும் வெளியிடப்படும் எண்ணங்கள் ,அது வெளியிடப்படும் மனங்களில் எல்லாம் பரவி ஒரு நாள் நம்மிடமே அது திரும்பி வரும் .
அப்பொழுது தெரியாது இந்த எண்ணம் நம்மால் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு இன்று செயலாக நம் முன் பரிணமித்து நிற்கின்றது என்று.சில எண்ணங்கள் உடனேயே நம்மை நோக்கி திரும்பும் .
7.ஆகவே முதலில் நம்மை எதிர்க்கும் நேரடியான எதிரியோ மறைமுகமான எதிரியோ அழிந்து விட வேண்டும்,அவர்களுக்கு நாமும் தொல்லை தர வேண்டும் , என்று நினைத்து செயல்கள் செய்ய ஆரம்பித்தோம் என்றால், அந்த தொல்லைகளும் ,அழிவும் ஒரு நாள் நம்மை நோக்கி பூமராங் போல கட்டாயம் திரும்பி வரும்.
8.ஆகவே முதலில் நமது எதிரிகள் என்ன பாடத்தை நமக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள் என்பதை உணர்ந்து அந்த பாடத்தை நாம் கற்று தெளிவுர வேண்டும்.அவர்கள் கட்டை போடும்,தொல்லைகள் தரும் விசயத்தில் நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
9.ஒரு ஆழமான வழக்குச் சொல் ஒன்று உண்டு ஒரு எதிரியைப் பழி வாங்க வேண்டும் என்று உங்கள் மனதில் தோன்றி விட்டால் "அவர்கள் கண் முன் நன்றாக வாழ்ந்து காண்பித்து அவர்களைப் பழி வாங்கு" என்று. எவ்வளவு ஆழமான நேர்மறையான தனி நபர் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் உகந்த ஆக்கப்பூர்வமான வழக்குச் சொல் இது.
10.இந்த வழக்குச் சொல் உணர்த்துவது உங்களது வாழ்க்கையில் தடை போடுபவர்களைக் கண்டு,தொல்லைகள் தருபவர்களைக் கண்டு கலங்காமல் ,அவர்கள் போடும் தடையையே உணவாகக் கொண்டு வாழ்ந்து காண்பி என்று.வாழ்ந்து காண்பிப்போமா?
'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்!
7:43 AM
Unknown
No comments
இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.
இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!
அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.
எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.
தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.
மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.
இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.
மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.
சமையல் எண்ணை ஓர் தெளிவு!
7:35 AM
Unknown
No comments
சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.
1) முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid)
2) முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid)
இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linolic Acid கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.
இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும். அதே நேரம் மார்க்கக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நிச்சயம் முடியும்.
ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.
1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்
2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்
3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்
4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு
5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு
எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!