.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 22, 2013

‘தூம் 3’ தூள் பரக்கிறது..!



சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.

அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பரக்கிறது

நிலா


நிலா


1.சூரியமண்டலத்தில் ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும்.

2.மனிதன் நிலவில் இறங்கிய நாள் ஜீலை 21.1969.
 (முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸராங். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இறங்குவதற்கு உதவிய ஏனியின் பெயர் "ஈகிள்." முதன் முதல் இவர் இடது காலை நிலாவில் எடுத்து வைத்தார். இரண்டாவாதாக இறங்கினவரின் பெயர் ''எட்வின் ஆல்ட்ரின்.'' நீல் ஆம்ஸ்ராங் இறங்கும்போது எட்வின் ஆல்ட்ரினும், கொலின்ஸ்சும் கூட இருந்தவர்கள்.)

3.நிலவிலிருந்து எடுத்த பாறையின் வயது 425 மில்லியன் ஆண்டுகள்.

4.நிலவை முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ.

5.நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட்.

6.நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான்-வுட்ரோபர்.

7.நிலவின் விட்டம் 3475 கி.மீ.

8.நிலவின் சராசரி அடர்த்தி 3.342.

 9.நிலவு, பூமியிலிருந்து 384,403 கி.மீ தூரத்தில் உள்ளது.

10.நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3680 கி.மீ.

11.நிலவு தன்னைத் தானே சுற்றிவரும் காலம் 29 1/2 நாட்கள்.

12.நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.

13.நிலவின் பெரிய பள்ளம் பெய்லீ ஆகும்.

14.நிலவின் கனம் பூமியனுடையதில் 8ல் ஒன்று..

15.நிலவின் ஈர்ப்பு சக்தி பூமியினுடையதில் 6ல் ஒன்று.

16.சூரிய ஒளி சந்திரனில் மேற்பரப்பில் பட்டு நிலா பிரதிபலிக்கின்றது.

17.சந்திரனில் முதன் முதலில் பயிரிடப்பட்ட பயிரினம் ''பட்டானி.''

18.சந்திரனில் முதன் முதல் கொல்ஃவ் விளையாடினவர் ''ஆலன் செப்பர்டு''

19.விண்வெளியில் இருந்து பார்த்தால் வானம் கருப்பாக தெரியும்.

20.அர்மகோலைட் (Arma Colite) என்பது நிலவில் மட்டுமே கிடைக்கும் பொருள் ஆகும்.

21.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கிய இடத்திற்குப் பெயர் ''ஸீ ஆஃப் ட்ரான்க்யுலிட்டி'' (Sea of Tranquility)

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்!


இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்!


பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.

ஆனால் சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.

அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெங்காயம்

 வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் கெட்டுப் போகாமல் இருக்கும்.

பூண்டு

 பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுப் போக ஆரம்பித்துவிடும்.பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக்கிழங்கு

 உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக்கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும், பாலிதீன் பையில் வைக்கக் கூடாது. இதே போன்று கருணைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் பிரிட்ஜில் வைக்க கூடாது.

தேன்

 உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான்.

ஆனால் தற்போது கடைகளில் வாங்கப்படும் தேனில் சுவை மற்றும் பலவற்றுக்காக பலவித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும் தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

 வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும்.

இதேபோன்று பூசணிக்காய், பிரட், தக்காளி, அன்னாசி போன்றவற்றையும் பிரிட்ஜில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?


உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?

ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது.

இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.

இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

தேன்: தொண்டை வலி

 தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காபி: ஒற்றை தலைவலி

 காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால் ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு எண்ணெய்: காது வலி

 காதுகளில் வலி ஏற்பட்டால், பூண்டுகளை தட்டி கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால் உடனே வலி நீங்கிவிடும்.

கிராம்பு: பல் வலி

 சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி போய்விடும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு

 உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால் பிடிப்புக்கள் நீங்குவதோடு உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

உப்பு: பாத வலி

 நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு வீக்கமும் குறையும்.

திராட்சை: முதுகு வலி

 முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்

 மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால் வீக்கமானது தணியும்.

செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி

 மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

தக்காளி: கால் பிடிப்பு

 இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மீன்கள்: அடிவயிற்று வலி

 மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.

ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி

 மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.

அன்னாசி: வாயுத் தொல்லை

 வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால் அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

புதினா: தசைப்புண்

 அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால் அது வலியைக் குறைத்துவிடும்.
 
back to top