.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 24, 2013

சர்ச்சைக்குள்ளான விஜய்யின் சாமி தரிசனம்?




விஜய் சாமி தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறு கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

ஒவ்வொரு படம் வெளியாகும் போது வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் விஜய். இந்நிலையில் விஜய் கடந்த சனிக்கிழமை அன்று காலை திருநள்ளாறு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தார். நளன்குளத்தில் நீராடிய அவர், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரணாம்பிகை சன்னதிகளில் வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதி அருகே நடைபெற்ற நவகிரஹ ஹோமத்தில் கலந்து கொண்ட பின்னர் ஸ்ரீ சனீஸ்வர பகவானை வழிபட்டார். பின்னர் 4 மணியளவில் கோயிலிலிருந்து வெளியே வந்தார்.

யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்று விஜய் தலையில் குல்லா அணிந்து கொண்டார். அவரின் வருகை, ஹோமம் நடத்திய சிவாச்சாரியார் தவிர யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

திருநள்ளாறு கோயில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 6 மணிக்கும், சனிக்கிழமை என்று காலை 4 மணிக்கும் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் விஜய் வருகைக்காக அதிகாலை 3 மணிக்கு முன்னதாக கோயில் திறக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

ஆகம விதிகளுக்கு முரணாக கோயில் நிர்வாகம் செயல்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பக்தர்கள் புகார் குறித்து, நிர்வாக அதிகாரி “விஜய் வருகைக்காக சனிக்கிழமை முன்னதாகவே கோவில் நடை திறக்கப்பட்டது உண்மைதான்.

முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் தரிசனம் செய்ய விரும்பினால் அதற்கான கட்டணத்தை கோயில் நிர்வாகத்திடம் செலுத்திவிட்டு தரிசனம் செய்யலாம். அதன் அடிப்படையில் நடை திறப்பு முன்னதாக செய்யப்பட்டது. “என்றார்.

மாரடைப்பை தடுக்கும் வால்நட்...?



 வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது.

இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பை சரியாக கணிக்க ஸ்மார்ட் ஃபோனே போதும்.!.




அநேக பேருக்கு முக்கிய பிரச்சினை கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு உடம்பில் அதிகம் இருப்பது. இது இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உண்டு. HDL & LDL எனப்படும் இந்த இரண்டு வகையினால் தான் பெரும்பாலோருக்கு இதய நோயான ஹார்ட் அட்டாக் முதற் கொண்டு பல நோய்கள் வருகிறது. இது போக ட்ரைகிளய்சிரேட்ஸ் என்னும் இன்னுமொரு மோசமான கொழுப்பு கட்டிகள் தான் கண்டிப்பாய் பலருக்கு எமனாகிறது.


இதை கண்டறிய அதிகாலை சாப்பிடாமல் ரத்தம் கொடுத்தால் 1 -3 நாட்கள் வரை லேப் எடுத்து கொள்ளும். அது போக இந்த வகை பரிசோதனைக்கு பெயர் “லிப்பிட் புரஃபைல் டெஸ்ட்” என்பதாகும். இதற்க்கு செலவு 900 ரூபாய் முதல் 2800 வரை வசூலிக்க படுகிறது. இனிமேல் இதெல்லாம் தேவையில்லை.


ஸ்மார்ட் கார்ட் என்னும் இந்த சிறிய விஷயத்தை ஐஃபோனில் மாட்டி ஒரு துளி வேர்வை / எச்சில் அல்லது ஒரு துளி ரத்ததை இதன் மேல் வைத்தால் உடனுக்குடன் உங்கள் நல்ல கொழுப்பு / கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரை கிளைசிரெட்ஸ் எம்புட்டு என்பதை புட்டு புட்டு வைத்து விடும். வர வர லேபுக்கு மூடு விழா நடத்த வேண்டியது தான் போல. இதை கண்டு பிடித்திருப்பது அமெரிக்காவின் கார்னல் பல்கலைகழகம்ங்கோ.

மல்லிகை பூவின் மருத்துவ குணங்கள் தெரியுமா?




மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

தொண்டைப்புண் அற்றுப் போவதற்கு மல்லிகைப் பூக்களை அரைத்து, புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவேண்டும். அதாவது, குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்றுவிடும்.

இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

வயிற்றில் புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப்பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
 
back to top