.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 24, 2013

தாய்ப்பாலில் என்னவெல்லாம் இருக்கின்றன?




அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, இரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது தாய்ப்பாலில் ‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.


தாய்ப்பாலில் புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

நல்ல தூக்கம் இயற்கையின் மாமருந்து...?




ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில்தான் கழிக்கின்றான். இப்படி மனித வாழ்க்கையை விழுங்கும் தூக்கமே வேண்டாம் என்று நாம் நினைத்தால் அது முற்றிலும் தவறு.

இந்தத் தூக்கம்தான் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கிறது. ஒரு மனிதன் தினமும் தன்னைத்தானே புதுமைப்படுத்தி புத்துணர்வு பெறச் செய்வதற்கு தூக்கம் மிகவும் அவசியம்.

ஆனால் அந்த தூக்கத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது துக்கமின்றி இருந்தாலோ உடலில் பாதிப்புகள் உண்டாகும்.

சரியான தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு நோய்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். இந்த தூக்கமின்மை எதனால் ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் பாதிப்புகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

சராசரியாக ஒரு மனிதன் தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை தூங்குவது அவசியம். குறைந்தது 5 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் இன்றைய பொருளாதார போராட்டத்தில் 2 மணி நேரம் தூக்கம் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

சிலர் சரியானதூக்கம் இல்லாமல் புலம்புவார்கள். தினமும் படுக்கைக்குச் செல்கிறேன், தூங்கும் முன்பு பால் அருந்துகிறேன். தூங்கவேண்டும் என்று நினைத்து கண்களை மூடினாலும் தூக்கம் மட்டும் வருவதே இல்லை என்பார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவர்கள் அதிகாலையில் கண்ணயர்வார்கள். ஆனால் சிறிது நேரத்திலே விழிப்பு வந்துவிடும்.

இப்படிப்பட்டவர்கள் எப்போதும் டென்ஷனாகவே காணப்படுவார்கள். இந்த தொல்லை தொடர்ந்துகொண்டே இருப்பதால் சிலர் தூக்க மாத்திரைகளை உபயோகிப்பார்கள். நாளடைவில் தூக்க மருந்து சாப்பிட்டால் தான் தூக்கம் என்ற நிலைக்கு வந்து அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.

இன்னும் சிலரோ மது, போதை பொருட்களை உபயோகப்படுத்துகின்றனர். இவை ஆரம்பத்தில் தூக்கத்தைத் தருவதுபோல் தோன்றும். பின்பு இதன் அளவு அதிகரிக்குமே ஒழிய முழுமையான நித்திரையை தராது.

எனக்கு இருக்கும்பிரச்சனைக்கு மது அருந்தினால்தான் தூக்கம் வரும் என்று சிலரும், மேலும் சிலர் தூக்க மாத்திரை அருந்தினால்தான் தூக்கம் வரும் என்பர். சிலர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், பாடல் கேட்டுக்கொண்டும் படித்துக்கொண்டும் தூங்க முயற்சிப்பார்கள். இவர்கள் சரியான தூக்கத்தைப் பெறமுடியாமல் தவிப்பார்கள்.

தூக்கமின்மை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன் உள்ளவர்களே அதிக தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர்.

சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமை, நேரத்திற்கு தூங்க செல்லாமல் இருத்தல், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பது, போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் தூக்கமின்மை உருவாகிறது.

தினமும் 4 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும் 16 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குபவர்களும் ஆயுளைக் குறைத்துக்கொள்பவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக நேரம் தூங்குபவர்களுக்குத்தான் தற்கொலை எண்ணம் தோன்றும் என்றும் கூறியுள்ளனர்.

சிலர் தூக்த்தில் எழுந்து நடப்பார்கள். துணி துவைப்பார்கள் அல்லது சில வீட்டு வேலைகளை செய்வார்கள். பின் வந்து படுத்துக்கொள்வார்கள். காலையில் எழுந்தவுடன் கேட்டால் தாம் தூங்கும்போது என்ன செய்தோம் என்பது தெரியாமல் இருப்பார்கள். இதுவும் தூக்கமின்மையால் ஏற்படும் ஒரு விதமான நோயாகும்.சிலர் பய உணர்வு கொண்டு தூங்கும்போது அலறுவார்கள்.

சிலர் அதிக நேரம் தூங்கிக்கொண்டேயிருப்பார்கள். இது நடுத்தர வயதினரை மட்டுமே பாதிப்படையச் செய்யும் இவர்களுக்கு நீரழிவு, உடல்பருமன், அசீரணக் கோளாறு, உடல்வலி உண்டாகும்.

இவ்வாறு தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் கீழ்காணும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

 * இரவு உணவு சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லக் கூடாது. சிறிது தூரம் குறுநடை போடுவது நல்லது. குறைந்தது 1 மணி நேரம் கழித்துதான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

 * இரவு உணவில் எளிதில் சீரணமாகாத உணவுகளான அசைவ உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், வாயுக்களை உண்டாக்கும் உணவுகள், கீரைகள், அதிக குளிர்ந்த பானங்கள், டீ, காபி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

 * இனிப்புப் பொருட்கள், உப்பு சேர்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது.

 * கொசுக்களின் தொல்லையால் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் அறையின் கதவுகளை படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் மூடி கொசுவத்தி அல்லது கொசுவை அழிக்கும் மருந்து சாதனத்தை உபயோகப்படுத்துங்கள். பின் அரை மணி நேரம் கழித்து கதவை திறந்துவிட்டு மூடவும். இப்படி செய்தால் கொசு அழிக்கும் மருந்தின் வாசனை நம் தூக்கத்தைக் கெடுக்காது.

 * அழுக்கு உடையுடன் தூக்கம் கூடாது. இரவு படுக்கைக்கு செல்லும்முன் இளம்சூடான நீரில் கை, கால், முகம் கழுவிவிட்டு தூங்கச் செல்லலாம். மன இறுக்கம், கவலைகளை மனதில் சுழலவிடக்கூடாது. தூங்கும் போது உடலை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது.

 * படுக்கைக்குச் செல்லும் முன் சிறுநீர், மலம் கழித்துவிட்டு தூங்கச் செல்லலாம். சில சமயங்களில் அதுவே தூக்கத்தைக் கெடுக்கும்.

 * எக்காரணம் கொண்டும் மது, போதை மருந்து, தூக்க மாத்திரைகளை உபயோகிக்கக் கூடாது. நாளடைவில் அதற்கு நாம் அடிமையாக நேரிடும்.

அப்படியும் தூக்கம் வரவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மூளைக்கு மட்டும் வேலை கொடுக்காமல் உடலுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.

உடலுக்கு உழைப்பு கொடுக்க முடியாதவர்கள் உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும்.

நல்ல தூக்கம் இயற்கையின் மாமருந்து...!

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை....?


நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்

* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.


* குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.


* காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.


* காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.


* அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.


* காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.


* சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.


* உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.


* குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.


* குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.


* காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.

நெஞ்சுவலிக்கு - விளாம்பழம்?




அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுபவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவர குணமாகும். வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுத்தால் கூட இதைச் சாப்பிடலாம் ஏனெனில் இதயத்துக்கும் பாதுகாப்பு, தாகமும் தீரும்.. இப்பழத்திலிருந்து கல்லீரல் மற்றும் இதய கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இது பழுக்காத போது துவர்ப்பாக இருக்கும். இது வயிற்றுபோக்கையும், வயிற்றுக்கடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.

இதுவிக்கலுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. தொண்டை புண்னை இதனுடைய கோந்து சரி செய்கிறது. இதனுடைய சதை வீக்கத்திற்கு வைத்து கட்டுகிறார்கள்.. விஷப்பூச்சிகள் கடித்தால் பழ ஓட்டின் பவுடரை அரைத்து பூசுவதால் சரியாகிறது. பெரும் பயன் தரும் பழங்களில் இது ஒன்று. அடிக்கடி மார்பில் வலி ஏற்பட்டால், உங்கள் வயிற்றில் புளிப்பு தன்மையுடைய நீர் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். இதைப்போக்க இஞ்சியும், எலுமிச்சம்பழமும் உணவில் நிறைய சேர்த்துக்கொள்ளவும்.

அதன்பிறகு மார்பு வலி வராது. அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக்கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும். மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்த்துக் கொள்ளவும். கடலைப்பருப்பையும் அடிக்கடி உணவில் சேர்த்த்துக் கொள்ளவும். பூண்டைப் போட்டு காய்ச்சியும் பருகி வரலாம். மார்பில் நமநம என்று வலி ஏற்பட்டு தொந்தரவு வரும்போது செம்பரத்தம்பூ கஷாயம் மிகவும் நல்லது.

பூக்களை சுத்தம்செய்து, சுண்டும்படியாக கஷாயம் வைத்து, பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், மார்புவலி இருக்காது. இருந்த வலியும் நின்றுபோகும். குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொண்டு, சமமாகச் சர்க்கரை சேர்த்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டு வரவும்.

இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டால், மார்பு வலி நீங்கி தேகத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மேலும் உடல் வனப்பு உண்டாகும். நெஞ்சுவலி வந்தால், போரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. அதனால் நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்தும்
 
back to top