.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 24, 2013

50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்!





பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது.

Free...dom Ship என்ற பெயருடைய இந்தக் கப்பல் மிதக்கும் உலகம் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் ஆடம்பர வர்க்கத்தினருக்காக இவ்வாறானதொரு கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வரவுள்ளதாக Freedom Ship இன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 25 அடுக்கு மாடிகள் உண்டு. இங்கு குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு மேலதிகமாக 30 ஆயிரம் விருந்தினர்கள் பயணிக்கக் கூடிய வாய்ப்பையும் கப்பல் வழங்குகிறது.

கப்பல் உருவாக்கப்பட்டுள்ள விதம் குறித்தான வரைபடத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு கப்பலில் உலகத்தைச் சுற்றிவர பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி.!


“கறுப்புப் பெட்டி” என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல்… பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.

விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம்.

இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும். ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் “பிளைட் டேட்டா ரெகார்டர்”. இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் “வாய்ஸ் ரெகார்டர்”. இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும்.

கறுப்புப் பெட்டியை 1953 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுப்பிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார். ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆராய்சியில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார்.

கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல “ஆரஞ்சு நிறம் ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.

கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான். விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து “பீப்” சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.

இது 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.

எத்தனை பேர் அறிவோம் ஆழிக்குமரன் ஆனந்தனை...?




எத்தனை பேர் அறிவோம் ஆழிக்குமரன் ஆனந்தனை. இந்தச் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்போம்.

ஆழிக்குமரன் ஆனந்தன் ஈழத்து நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.பா...க்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன்.

1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.

சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.

குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். 
இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை. 
இறப்பு ஆகஸ்து 6, 1984 ஆங்கிலக் கால்வாயில்.

உன்னை இன்றும் அம்மா என்று கூப்பிட ஆசை வருதே ஏன்..?




கால்களை உதைத்து
 கர்ப்பப்பையை
 கிழித்தாகிவிட்டது.

தொப்புள்கொடியை
 யாரோ
அறுத்தனர்.

முதல் பால் அருந்த
 முன்வரிசையில்
 காத்திருந்தேன்.

யாரும் என்னை
 கவனிப்பவராக இல்லை.

விட்டேன் ஒரு
 குவா குவா
 சத்தம்

 சாதம் ரெடி !

ஓ பிள்ளைக்கு
 பசிக்குது
 நீங்களே பால் குடுங்க
 நாங்கள் வெளியில் நிக்கிறோம்.

கண்ணை மூடியிருந்த
 இருட்டிலும்
 ஏதோ கரங்கள் என்னை தூக்கி
 மார்போடு அணைத்தது
 அப்பொழுது எரிந்தது
 என்னிடம் முதல் முறையாக
 அகல் விளக்கு.

பன்னீர்க்குடத்து
 நீரையெல்லாம்
 பகல் இரவாய் குடித்த எனக்கு
 பத்தினியின் முலைமார்பில்
 முதல் விருந்து
 முதல் அமிர்தம்.

யாரப்பா அது
 எனக்கு நீ பால் தர

 எல்லாமே
 இருட்டாயிருக்கே
 எப்படித் தேடுவது அவளை
 என்றிருக்கையில்

 என் செல்லம்
 என் குஞ்சு
 முத்த முத்திரைகளை
 முகமெல்லாம்
 குத்தியவர் யார்

 பஞ்சு விரல்கள் என்
 உடலை வருடி
 தென்றல் காற்றை பிடித்து என்
 தேகமெல்லாம் விட்டது யார்

 பிரசவ வலியென்னும்
 மிச்சமிருக்கையில்
 கொஞ்சிக்கொண்டே
 தாலாட்டு தமிழில் பாடியவர் யார்

 வந்த களைப்பில்
 உறங்கிக் கொண்டிருந்த
 மார்பு யாருடையது.
இலவம் பஞ்சைவிட
 அதுவேன் மென்மையாக
 இருந்தது

 கண்ணை விழிதொருநாள்
 கறுப்பு வெள்ளையில்
 படம் பார்த்தேன்
 பக்கத்தில் நின்றவள்
 ஈன்றவள்
 இவளா என் .. அம்மா

 உன்னை
 இன்றும் அம்மா என்று கூப்பிட
 ஆசை வருதே ஏன்

 உன் முலைப்பாலில்
 முதல் பாலில்
 முழு அன்பையும் கரைத்தது
 உன்னுடைய இரகசியம்

 அதுவே இந்த
 வசியம்.
வாத்தியமாய் இசைக்கிறேன்
 விடியும் வரை
 முடியும் வரை
 அம்மா அம்மா ..
 
back to top