.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, December 25, 2013

வெற்றியின் ரகசியம்.....?


நன்றாக யோசித்து  ஒரு செயலில் இறங்கவேண்டும்.ஆனால் அப்படி இறங்கிய பிறகு சலனங்கள் கூடாது.பலன்களை எண்ணி கவலைப்  படக்கூடாது.

ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம். நமக்கு பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதை விட அவர்களைப் புறக்கணித்துப் பாருங்கள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.

உங்களுடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது உங்களுக்குப் பிடித்தவர் என்பதற்காக சிலருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.எல்லோருக்கும் சம அளவு வாய்ப்புக் கொடுங்கள்.

பள்ளி கல்லூரிக்குச் சென்று திரும்புவதோடு படிப்பு நின்று விடுவதில்லை. எப்போதும் மாணவராக இருங்கள்.புதுப் புது விசயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும்.வெற்றுகனவுகள் யாருக்கும் உபயோகப் படாது.

ஆயிரம் கட்டுரைகள் கதைகள் தத்துவ அலசல்கள் புத்தகங்கள் திரைப்படங்கள் தராத ஞானத்தை நன்கு வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும்.நாம் "முடியாது என்று நினைக்கிற விசயத்தைக் கண்ணெதிரே சாதித்து முடித்தவர்கள் நிச்சயம் இருப்பார்கள் தேடுங்கள்.

நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால் வாழ்நாள் முழுதும் ஏற்படுகிற குற்ற உணர்ச்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற உறுதியை கட்டுப்பாட்டை ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்தவர்களை அதிகாரத்தின் மூலம் ஜெயித்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.சர்வாதிகாரதனத்தை தவிர்த்து அனைவரையும் அன்பால் கட்டிபோடுங்கள்.

மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு விஷயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதையும் கேள்வி கேட்டு பழகுங்கள்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன் ஆடம்பரமும் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும். அனுமதிக்காதீர்கள். எப்போதும் சேவை மனப்பான்மை உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும்.

கேள்வி கேக்காம நான் சொன்னதை நீ செய் என்று சொன்னால் அவர்கள் கேள்வி கேட்பார்கள். இதை செய்தால் உனக்கும் எனக்கும் நமக்கும் இந்தச் சமூகத்துக்கும்  பலன்கள் உண்டு என்று ஒருவரிடம் புரியவைத்தால் கண்ணைக் கட்டிக் கொண்டு எங்கேயும் குதிக்க தயாராகி விடுவார்கள்.
உண்மை என்பது உங்களுடைய வாழ்க்கையின் ஒற்றை வரி விளக்கமாக இருக்கட்டும். கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும். உண்மை மட்டுமே ஜெயிக்கும்.

கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?




இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது


கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்.


மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குதலேயாகும்.


 வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.


கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.


கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது.

விருந்து வித் வி.ஐ.பி!




ஆளுமைத் திறன் என்றதும் தகவல் தொடர்புத் திறன், உடல் மொழி, ஆடை நாகரிகம், தனி மனிதப் பண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் உணவு அருந்தும் ‘டேபிள் மேனரிஸம்’ என்பதில் அக்கறை காட்டுகிறோம்? தினமும் மூன்று வேளை உணவருந்தும் பழக்கம்கொண்டவர்கள் நாம். அந்தச் சமயங்களிலும் ஸ்கோர் செய்ய டிப்ஸ் தருகிறார் கோவை காருண்யா பல்கலைக்கழக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் ஆன்ட்ரூ ஃபிராங்க்ளின் பிரின்ஸ்.

உணவு மேஜை மீது தட்டு, கரண்டி போன்றவற்றால் ஒலி எழுப்பாதீர்கள். அது அநாகரிகமான பழக்கம்.

வாய் நிறையச் சாப்பாட்டுடன் பேசாதீர்கள். ஒன்று, பேசிவிட்டுச் சாப்பிடுங்கள். அல்லது, சாப்பிட்டவுடன் பேசுங்கள்.

உங்கள் உதடுகளை மூடிக்கொண்டு உணவை மெல்லுங்கள்.

சாப்பாட்டை அள்ளி வாயில் கொட்டிக்கொள்ளாதீர்கள். கொஞ்சமாக, நிதானமாகச் சாப்பிடுங்கள்.

சாப்பிட்டவுடன் கைகளில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களை நக்குவது, பல்லிடுக்கில் நோண்டுவது போன்றவை அருகில் இருக்கும் யாருக்கும் அருவருப்பை ஏற்படுத்தும்.

யாரேனும் சாப்பிடும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். நீங்கள் ஏற்பாடு செய்த விருந்தென்றால், உங்கள் விருந்தினர் சாப்பிடத் துவங்கும் வரை நீங்கள் ஆரம்பிக்காதீர்கள். நீங்கள்தான் விருந்தாளி என்றால், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்து சிக்னல் வரும் வரை சாப்பிட வேண்டாம்.

விருந்துகளில் பெண்களுடன் சாப்பிட நேரும்போது, ஆண்கள் அவர்களுக்கு முதலில் பரிமாற வேண்டும்.

அடிக்கடி மற்றவர்களின் சாப்பாட்டுத் தட்டையோ அல்லது டேபிளையோ கவனிக்காதீர்கள். அது உங்கள் மீது ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.

ஒரே சமயத்தில் நிறைய உணவை உங்கள் தட்டில் கொட்டிக்கொள்ளக் கூடாது. கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்தால் ‘ஸாரி’ என்று மென்மையாகத் தவிர்த்துவிடுங்கள்.

முன் பின் அறிமுகம் இல்லாத இடங்களில் கரண்டி, முள் கரண்டி, கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரியாமல் அல்லல்பட வேண்டாம்

வேண்டாத நான்கு குணங்கள் !!!



 * நாம் உயர்ந்த குறிக்கோள் உண்டயவர்களாக இருக்க வேண்டும், குறிக்கோளை அடைய முடியாவிட்டாலும் முயற்சியை விடாமல் மேற்கொள்ள இருப்பது சிறப்பு தருவதாகும்.


    * ஒரு செயல் சிறப்பாக நடக்க வேண்டுமானால், காலம் நீடித்தல், மறதி, சோம்பல், மிகுந்த தூக்கம் என்னும் என்னும் நான்கு தீய குணங்களையும் விட்டு விடவேண்டும். இந்த குணங்களை கொண்டிருப்பது மூழ்கக்கூடிய கப்பலில் விரும்பி பயணம் செய்வது போலாகும்.


    * ஒரு செயல் செய்வதற்கு மிகக் கடினமாக இருந்தாலும், அதற்காக உடல் தளர்ச்சியோ, உள்ளச் சோர்வோ கொள்ளுதல் கூடாது. பிறர்க்கு உதவி செய்யவேண்டும் என்ற பெருமித உணர்வோடு ஊக்கம் கொண்டு இருப்பவர்கள் விடா முயற்சியோடு பணியாற்றுவர்.


    * மனத்தளர்ச்சி கொள்ளாமலும், உடல்சோர்வு கொள்ளாமலும் முயற்சி செய்பவன் தனக்குத் தோல்வியைத் தரும் விதி இருந்தாலும் அதையும் புறமுதுகிட்டு ஓடச் செய்யும் வலிமை பெற்றவனாவான்.


    * எவருக்கும் எந்த பயனும் தராத சொற்களை விரிவாகப் பேசி வீண் பொழுது கழிப்பவன் "தான் ஒரு பயனற்றவன்" என்பதை பிறர் அறியச் செய்வான்.
 
back to top