.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, December 26, 2013

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை!



திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ், பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம் இரும்புச்சத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில் உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும் பற்கள் வலுபெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடும் முதியோர்களுக்கு சிறந்தது. உல் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பலத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள் வலுபெறும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள், உல் திராட்சையை போட்டு பருகலாம். நாவறட்சிக்கு சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர்திராட்சையை யும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும்.

பித்தத்திற்கும் இது சிறந்த மருந்து. கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். இந்தப்பழத்தை பாலில் போட்டும் வெறுமனையாக சாப்பிட்டும் வந்தால் இதய துடிப்பு சீராக செயல்படும். தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.

கர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!




கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச்சிதைவு ஏற்படும் என்று தெரியும்.

ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒருசில காய்கறிகளின் மூலமும் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் இந்த காலத்தில் தான் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே இக்காலத்தில் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடனே வேலையை காண்பித்துவிடும். அதற்காக அதனை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. ஆனால் மிகவும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

இதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் தான். ஏனென்றால் வைட்டமின்கள் அதிகமாக இருந்தால், இரத்தக்கசிவு ஏற்படுவதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். எனவே கீழ்கூறிய சில காய்கறிகளை பிரசவத்திற்கு முன் தவிர்ப்பது நல்லது.

• கத்திரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

• கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.

பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.

• கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

• கர்ப்பமாக இருக்கும் போது காலிஃப்ளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

• குடமிளகாயின் சுவை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம் முடியும் வரை இதனை சாப்பிடுவதை சற்று தவிர்க்கலாமே!

இன்று 9-ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்:




ஒரு பூகம்பமும் அதனைத்தொடர்ந்து நேரிட்ட ஆழிப்பேரலைகளும் இன்னமும் எவர் மனதில் இருந்தும் நீங்கியிருக்கப்போவதில்லை..

சுனாமி என்ற பெயரின் வலி படர்ந்த வலிமையை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உணர்த்திய அந்த நாள் டிசம்பர் 26.. இந்நாளின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் (26-12-2013) வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலகையே உலுக்கிய மறக்க முடியாத சுனாமி வந்து போன நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எழுந்த சுனாமி ஆழிப் பேரலைகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை என இந்தியக் கடலோர நாடுகளை சுழற்றிப் போட்டது. லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர். தமிழகம் இந்த ஆழிப் பேரலைத் தாக்குதலில் பேரிழப்பை சந்தித்தது. நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை என தமிழக கடலோர மாவட்டங்கள் கடும் பாதி்ப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தன. ஆனால் நாகையும், கடலூரும்தான் மிகப் பெரிய அளவில் உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்களாகும்.


சுனாமி பேரழிவில் மிகுந்த பாதிப்படைந்து அதிர்ச்சியில் இருந்த மீனவ மக்கள் தற்போது மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு திரும்பிஉள்ளனர். இருப்பினும் தங்களது குடும்பத்தினரை இழந்ததை மறக்க முடியாமல் நினைவு தினத்தன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், பிரார்த்தனையில் ஈடுபடுவதை கண்டு வேதனையளிக்கிறது. மேலும் சுனாமி பேரலையின் பயம் மீனவர்கள் மத்தியில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை மருத்துவம்:-




குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.

சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள்
 உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக்
 கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
 வெளியேறும்.

கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக்
 கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்
 வெளியேறும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும்
 வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல்
 பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின்
 வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.

வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய்
 அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில்
 சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்
 
back to top