.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, December 27, 2013

ஜில்லாவும் ஆரோ 3D யில் வெளியாகிறது








இளைய தளபதி விஜய், காஜல் அகர்வால் நடித்து வருகிற பொங்கலுக்கு வெளியாகும் ஜில்லா திரைப்படத்தின் ஆடியோவும் ஆரோ 3Dயில் வரவிருக்கிறது.

பெருகிவரும் மின்னனுவியல் சாதனங்களின் உபயோகத்தால் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கும் ஆர்வம் படிப்படியாகக் குறைந்து வருவது போலத் தோன்றினாலும் , ரசிகர்களைத் தியேட்டர்களுக்கு ஈர்க்க என்னற்ற புதுப்புதுத் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் செவிகளுக்கு விருந்தளிக்கும் புதிய தொழில்நுட்பம்தான் ஆரோ 3D.

சமீபமாக கமல்ஹாசனின் விஷ்வரூபம் திரைப்படத்தின் ஆடியோ இப்புதிய தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்டது. மேலும் பூஜா நடிப்பில் சில
வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட “விடியும் முன்” திரைப்படமும் இத்தொழில்நுட்பத்தில் வெளியாகியிருந்தது. தற்பொழுது இந்த வரிசையில்
விஜயின் ஜில்லா திரைப்படமும் இணையவிருக்கிறது.

தேர்வு செய்யப்பட்ட திரையரங்குகளில் இப்படம் ஆரோ 3D 11.1 மிக்ஸ் ஆடியோவில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா பறந்தார் அஜித்




தல அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

அஜித் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் குடும்பத்துடன் வெளி நாடுகளுக்குச் சென்று வருவது வழக்கம். ஆனால் இந்த
முறை ஆரம்பம் திரைப்படம் நிறைவடைந்ததும் வீரம் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியதால் அவரது வெளிநாட்டுப் பயணம் தடைப்பட்டது.

தற்பொழுது வீரம் படத்தின் அனைத்துப் வேலைகளும் நிறைவடைந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது. இதனையடுத்து இன்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர். ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியதும் கௌதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித், தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் வீரம் திரைப்படம் வருகிற ஜனவரி 10-ல் வெளியாகவுள்ளது

விவேக் மற்றும் சந்தானத்துடன் உலகநாயகனின் உத்தமவில்லன்




உலகநாயகன் கமல்ஹாசன் தற்பொழுது எழுதி இயக்கிவரும் “விஷ்வரூபம்-2” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்வரூபம் -2 திரைப்படத்தையடுத்து கமல்ஹாசன் ரமேஷ் அர்விந்த் இயக்கத்தில், இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கும் புதிய படமான “உத்தம
வில்லன்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தித் உருவாகவிருக்கும் இப்படத்தில் தற்பொழுது நகைச்சுவையில் கலக்கிவரும் சந்தானம் மற்றும் விவேக் ஆகியோர் இடம்பெறலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கமலின் பேவரிட் வசனகர்த்தாவான கிரேஸி மோகன் இப்படத்திற்கு வசனங்களை எழுதுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
   

இசைஞானியின் கிங் ஆப் கிங்ஸ் 2ற்கான ஒத்திகைகள் தொடங்கின




கார்த்திக் ராஜா வழங்கும் இசைஞானி இளையராவின் லைவ் இசைக் கச்சேரியான கிங் ஆப் கிங்-2 வருகிற டிசம்பர் 28ல் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான ஒத்திகைகள் இன்று தொடங்கவுள்ளதாக கார்த்திக் ராஜா கூறியுள்ளார்.

கோலாலம்பூர் மெர்டேக்கா ஸ்டேடியத்தில் இவ்விழா நடைபெற உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேடைகளை அமைக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

சுமார் 25,000 பார்வையாளர்கள் ரசிக்கவுள்ள இவ்விழாவில் 90ற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு இசை, நடனம் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நிகழ்த்தவுள்ளனர். பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரக் கலவைகளைக் கொண்ட மலேசியாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இளையராஜாவின் உலக அளவிலான இசை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், இன்று அவர் பூரண குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளால் இசை நிகழ்ச்சி பாதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.



 
back to top