.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

ஆனந்தம் என்பது எது தெரியுமா?

* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால் வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனைஅன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின் நெறிமுறையாகும். * பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும் குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த முடியாமல் தவிப்பார்கள். * உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால் இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க மாட்டீர்கள். * மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். *...

வெளிநாட்டுக் கல்வி - கொஞ்சம் திட்டமிட்டால் போதும்...

வெளிநாட்டுக் கல்வியானது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைத்தது அந்தக் காலம். கொஞ்சம் திட்டமிட்டால் போதும்; படிப்பு தகுதிகொண்ட நடுத்தர குடும்பத்து மாணவன்கூட வெளிநாடு சென்று படிக்க முடியும் என்பது இந்தக் காலம். என்றாலும், இந்த உண்மை பலரையும் சென்று சேராததற்கு காரணம், அதுகுறித்த விழிப்பு உணர்வு பரந்த அளவில் மக்களிடம் சென்று சேராததே.வெளிநாட்டில் கல்வி வாய்ப்புகள் எப்படி உள்ளது? என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?''இந்தியாவில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், உலகளவில் டாப் 100 கல்வி நிறுவனங்களில் நம் நாட்டைச் சேர்ந்தவை எதுவும் இல்லை. வேலையுடன் கூடிய கல்வி, உடனடி வேலை வாய்ப்பைத் தரும் கல்வி என்பது இந்தியாவில் குறைவுதான்.ஆனால், அயர்லாந்து போன்ற மிகச் சிறிய மேற்கத்திய நாடுகளில்கூட கல்வி, வேலை வாய்ப்போடு பிரிக்க முடியாதவாறு உள்ளது. இந்தியாவில் கல்லூரியில்...

நச்சு எண்ணங்கள்?

ஒரு சில நச்சு எண்ணங்களை சுலபமாக அடையாளம் காண முடியாது.அவை எங்கும் பரவிக் கிடக்கும்.மிகச் சாவகாசமாக வேலை செய்யும்.அவற்றுக்கு இரையாகும் மனிதர்கள் அவற்றின் பாதிப்பை உணரும்போது ஏற்கனவே காலம் கடந்து போயிருக்கும்.  அவை......குமுறல்: நாம் சிறுமைப்படுத்தப் பட்டு விட்டதாக எண்ணும் போதும்,நமது உறவு,உடமைகளை ஒருவர் அவமானப் படுத்தியதாக எண்ணும்போதும் நமக்குள் ஏற்படும் எரிச்சல்தான் குமுறல்.குமுறல் நமது உள் மனதில் அடியில் தங்கிப் புற்று நோய் போல வேலை செய்கிறது.அது படிப்படியாக வளர்ந்து மேற்கொண்டு மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்,மென்மையான உள்ளங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும்,தன்னிரக்க வடிவெடுத்து நாளாவட்டத்தில் வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரேயடியாக ஒதுங்கிக் கொள்ளச் செய்யும்.அல்லது படு வேகமாகப் பரவும் குமுறல்,கோபமாகி ,கோபம் தாங்க முடியாத வெறுப்பாகி,வெறுப்பு வன்முறையாகி,சில சமயங்களில் கொலையில் கூட முடியும். ...

நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா...

நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...!உங்களுக்கு சரக்கு அடிக்க ரொம்ப பிடிக்குமா? அப்படி சரக்கு அடித்த பின்னர் நீங்கள் செய்த அட்டகாசங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இல்லையா.. அப்படியெனில் இந்த கட்டுரையைப் படித்து பாருங்கள்.பொதுவாக சரக்கு அடித்தவர்களுக்கு, சரக்கு அடித்தப் பின்பு செய்யும் லூட்டிகள் எதுவும் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் உங்களுக்கு சரக்கு அடித்த பின்னர் ஆண்கள் செய்யும் லூட்டிகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால், தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக சரக்கு அடித்தப் பின்னர், ஆண்கள் செய்யும் சில லூட்டிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்துப் பாருங்கள்.நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...!* சில ஆண்கள் சரக்கு அடித்தப் பின்னர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். அப்போது அவர்கள்...
Page 1 of 77712345Next
 
back to top