.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

உன்னதமான உறவு!!!



ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு .ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும் ,கசப்பையும் ,இனிப்பாக்க வல்லது இவ் உறவு .புது புது உறவுகளை உருவாக்க கூடியது .இதை விட புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை, இது ஒரு தெய்விகமான உறவு .


இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமையால், நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், ஆளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளால் , தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மையான உறவுகள் பல உடைந்து போகின்றது .


ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்களில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகிவிட்டது ,இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவாகிறது ,சமூகதின் அத்தனை வீழ்ச்சிகளும் .உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு முழுக்காரணம் .


எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி ஆண் வெற்றி பெறுகிறானோ ,அங்கே வெல்வது ஒரு மிருகம் ,எந்த வீட்டில் ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாளோ அங்கே ஒரு பிடரி ஜெயித்ததாகப் பொருள் .


தலை தாழ்ந்த பெண்ணும் தலை உயர்த்திய ஆணும் உள்ள இல்லத்தில் இருமனம் இணைந்து அன்பாலும் நம்பிகையாலும் இன்ப துன்பங்களை இணைத்து பகிர்கிறது .

நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?



சென்ட்டர் ஃபர் சிஸ்ட்டம்ஸ் நியூராலஜி, பாஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது. அங்கே ஆராய்ச்சி செய்யும் லாங்குயன் லின் மற்றும் ஜோ டிரெய்ன் என்ற இரு நரம்பியல் வல்லுநர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மூளையில் எப்படி நினைவுகள் பதிவாகின்றன என்பதை ஓரளவுக்கு விளக்குவதாக உள்ளது. நரம்புக்கூட்டத்தின் சமநேர மின்துடிப்பே நினைவுகள்.


நேரடியாக மின் முனைகளை எலிகளின் மூளையில் பதித்து, அவை இயல்பாக நடமாடும்போதே நினைவுகள் எப்படி பதிகின்றன என்பதை நவீன கருவிகள் கொண்டு ஆராய்ந்தனர். தக்க புள்ளியியல் கணக்குகளைப் பயன்படுத்தி தகவல்களை தொகுத்திருக்கின்றனர்.


நரம்பு செல்களின் வழியாகப் பாயும் மின்சார ஒட்டம்தான் நினைவுகள் என்பதை பொதுவாக எல்லோருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்படி ஒரே சமயத்தில் துடித்து செயல்படும் நரம்பு செல் கூட்டங்களே குறிப்பிட்ட நினைவுகளுக்குக் காரணம் அவற்றில்தான் நினைவுகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன என்பது முடிவு.


உணர்வுகள்-நினைவுகள்-பயிற்சிகள் ஆகியவை அனைத்தும் வெவ்வேறு நரம்புசெல் கூட்டங்களாக சேமிக்கப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது. எப்படி நரம்புக்கூட்டத்தில் நினைவுகள் பதிகின்றன என்பதை இன்னமும் தெளிவாகப் புரிந்துகொண்டால், கைகளைப் பயன்படுத்தாமல் எண்ணங்கள் மூலமாக கருவிகளைக் கட்டுப்படுத்துல், தானாகச் சிந்தித்து செயலாற்றும் ரோபாட்டுகளை (உருபிகள்) உருவாக்குவது, மனத்தில் உள்ளதை குறியீடுகளாக மாற்றி கம்யூட்டரில் இறக்கி சேமித்து வைத்துக்கொள்வது போன்ற தொழில் நுட்பங்கள் வளரும்.


பாஸ்ட்டன் பல்கலை விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனையில் இரண்டுவித எலிகளைப் பயன்படுத்தினார்கள். ஒன்று மரபியல் மாற்றத்தின் மூலம் கெட்டிக்கார எலியாக மாற்றப்பட்டது. “டூகி” என்பது அதன் பெயர். இதற்கு நேர்மாறாக படுமந்த புத்தியுடைய எலியையும் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டையும் வைத்துக்கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.


வாழ்நாளில் எத்தனையோ கோடி காட்சிகளைப் பார்க்கிறோம் பேச்சுகளை கேட்கிறோம், ஆயினும் திடுக்கிடும் நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளத்தைத் தொடும் சம்பவங்கள் மட்டுமே நினைவில் ஆழமாகப் பதிகின்றன. எனவே ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கும் எலிகளுக்கும் மூன்று விதமான திடுக்கிடும் சம்பவங்களை வழங்குகினார்கள்.

உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14?

உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14 உயிரினங்கள்!!!


இந்த பெரிய உலகில் வாழும் நாம், பெரியது முதல் சிறியது வரை நிறைய உயிரினங்களைப் பார்த்திருப்போம். அதிலும் ஒரு சாதாரண அளவில் இருக்க வேண்டிய உயிரினமானது அளவுக்கு அதிகமாக பெரிய உருவத்தில் காணப்பட்டால், உலகில் உள்ளோரால் அதிசயமாக பார்க்கப்படுகின்றனவோ, அதேப் போல் மிகவும் சிறிய அளவில் காணப்பட்டாலும் அதிசயிக்கத்தக்கவையே.


ஆனால் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்படி சிறியதாக இருக்கும் உயிரினங்களின் வாழ்நாள் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இப்படி ஒரு சாதாரண உயிரினமானது மிகச்சிறிய அளவில் இருப்பதற்கு காரணம் பிறப்பு குறைப்பாடுகள் தான்.


இங்கு தமிழ் போல்ட் ஸ்கை, வளர்ச்சி குறைபாடு மற்றும் பிறப்பு குறைபாட்டினால் மிகவும் சிறியதாக இருக்கும் சில உயிரினங்களை உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளது. இவை அனைத்தையும் ஒரு கையினால் என்ன, ஒரே விரலால் கூட தூக்கலாம்.


இப்போது உலகில் இருக்கும் மிகச்சிறிய உயிரினங்களைப் பார்ப்போம். மேலும் இவை அனைத்தும் செல்லப் பிராணி போன்று சரியான பராமரிப்புடன் வளர்க்கப்படுகின்றன.

  
பான்டா




இந்த சிறிய பான்டா 51 கிராம் தான் உள்ளது. இது தற்போது சீனாவில் உள்ளது.


பூனை



இந்த அழகான பூனையின் உயரம் 19.2 இன்ச் தான். இது தான் உலகிலேயே மிகவும் சிறிய பூனை. தற்போது இந்த பூனைக்கு 2 வயது இருக்கும்.
  
  
மறிமான் (Antelope)



படத்தில் காட்டப்பட்ட இது ஒரு வகையான மான். இந்த மறிமான் 20 செ.மீ உயரதும், 1.3 கிலோ எடையும் கொண்டது.
  
  
மீன்




படத்தில் காட்டப்பட்ட இந்த மீனானது 7.9 மி.மீ நீளத்தில் தான் இருக்கும். மேலும் இது மலேசியாவில் உள்ள அமில சதுப்பு நீரில் தான் நீந்தும்.
  

தவளை




உலகிலேயே மிகச்சிறிய தவளை என்றால் அது பிரேசிலியன் கோல்டன் தவளை தான். இந்த குட்டித் தவளையின் நீளமே 9.8 மி.மீ. தான். இது ஆப்பிரிக்க காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
  

பறவை




இந்த ரீங்கார பறவை தான் உலகிலேயே மிகவும் சிறிய மற்றும் க்யூட்டான உயிரினம்.
  
  
பாம்பு




பாம்பு குடும்பத்திலேயே மிகவும் சிறிய பாம்பு தான் பார்படாஸ் நூல் பாம்பு. இதன் முழு வளர்ச்சியே 4 இன்ச் தான் இருக்கும்.
  
  
பல்லி




இந்த சிறிய பல்லி 16 மி.மீ. நீளம் தான் இருக்கும்.
  
  
குரங்கு





பிக்மி மார்மோசெட் குரங்கு கூட உலகிலேயே மிகச்சிறிய உயிரினங்களில் ஒன்று தான். இந்த சிறிய குரங்கின் நீளம் சுமார் 16 செ.மீ. இருக்கும். இதன் பிரதான உணவு மரங்களில் இருந்து வெளிவரும் பசை தான்.
  
  
குதிரை




தம்பிலினா குதிரை தான் உலகிலேயே மிகவும் சிறியது. இது ஐரோப்பாவில் உள்ளது. இந்த குதிரையின் உயரம் 17.5 இன்ச் தான் இருக்கும்.
  
  
மாடு


உலகில் உள்ள மிகச்சிறிய மாடு தான் வெச்சுர் மாடு. இந்த மாட்டின் சராசரி உயரம் 30-35 இன்ச் தான் இருக்கும்.
  
  
ஆமை


இது தான் உலகிலேயே மிகவும் சிறிய ஆமை. இது ஒரு நாணயம் அளவில் தான் இருக்கும்.
  
வௌவால்


வௌவால் என்றால் பயப்படுவோம். ஆனால் இந்த வௌவாலை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். மேலும் இந்த வௌவாலின் நீளம் 20 மி.மீ. தான் இருக்கும்.
  
  
பச்சோந்தி



படத்தில் காட்டப்பட்ட இந்த பச்சோந்தி 1 இன்ச் தான் இருக்கும்.

குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை...



குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்...


குளிர்காலங்களில் ஏற்படும் ஒரு பெரிய தொல்லை தான், மரச்சாமான்களில் பூஞ்சை படிவது. ஆம், இந்த காலங்களில் வீட்டில் அதிகப்படியான ஈரப்பசை இருப்பதால், மரச்சாமான்களில் ஈரமானது தங்கி, பூஞ்சைகளை படிய வைக்கின்றன. இப்படி மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால், அது ஆங்காங்கு வெள்ளை வெள்ளையாக காணப்படுவதோடு, மரச்சாமானின் அழகு மற்றும் தரத்தை கெடுத்துவிடுகின்றன. எனவே வீட்டில் மேஜை மற்றும் நாற்காலிகளில் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தால், சரியாக பராமரிப்பது அவசியமாகும்.


அதுமட்டுமின்றி, நிபுணர்கள் வீட்டில் மரச்சாமான்கள் ஈரமாக இருந்தால், அவற்றை வெயிலில் நீண்ட நேரம் உலர வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் மரச்சாமான்களுக்கு போதிய வெயில் கிடைக்காவிட்டால், மீண்டும் பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.


குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்...


ஆகவே மரச்சாமான்களில் பூஞ்சை படியாமல் இருக்கவும், படிந்த பூஞ்சையைப் போக்கவும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கீழே சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி செய்து வந்தால், மரச்சாமான்களை சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ளலாம்.


* மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலி ஈரமாக இருந்தால், வெளியில் எவ்வளவு நேரம் வைக்க முடியுமோ, அவ்வளவு நேரம் வைக்க வேண்டும். இதனால் மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால் காய்ந்துவிடும். பின் அதனை எளிதில் நீக்கிவிடலாம்.


* ஈரமான மரச்சாமான்களில் உள்ள பூஞ்சையை துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து, பின் வெயிலில் காய வைக்க வேண்டும்.


* எவ்வளவு தான் பூஞ்சையை துடைப்பம் கொண்டு தேய்த்து நீக்கினாலும், தேய்த்த இடமானது வெள்ளையாக தெரியும். ஆகவே அப்படி தேய்த்த பின்பு, வெள்ளை வினிகரில் நனைத்த ஈரமான துணியைக் கொண்டு ஒருமுறை துடைத்து எடுக்க வேண்டும்.


* வினிகர் கொண்டு துடைத்து எடுத்தப் பின்னர், அதனை வெளியே வெயிலில் குறைந்தது 2 மணிநேரமாவது உலர வைத்து, பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.


* மேற்கூறியவற்றை செய்து முடித்த பின், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த கலவையை பஞ்சில் நனைத்து, அதனை மரச்சாமான்களின் மேல் ஒரு கோட்டிங் போல் தேய்த்தால், எலுமிச்சையானது மீண்டும் பூஞ்சை வராமல் தடுக்கும்.


* இறுதியில் மீண்டும் மரச்சாமான்களை வெயிலில் 1/2 மணிநேரம் உலர வைத்து எடுத்தால், உங்கள் மேஜை மற்றும் நாற்காலி புதிது போன்று பளிச்சென்று மின்னும்.


இவ்வாறெல்லாம் செய்து வந்தால், நிச்சயம் குளிர்காலங்களில் வீட்டில் இருக்கும் மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலியை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
 
back to top