.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 29, 2013

குழந்தைகளுக்கு தண்டனைகள் நற்பயன் தருவதில்லை...



பெற்றோர்கள் குழந்தைகளின் உள் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். வேண்டாத நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் மீது பழி சுமத்த வேண்டாம். இதற்காக மனமொடிந்து இருக்கவும் வேண்டாம். எவ்வளவு திட்டினாலும், தண்டனை தந்தாலும் முன் எச்சரிக்கை செய்தாலும், எதிர்மறை குறிப்புகளாலும், குழந்தைக்கு எந்தவித பயனும் உதவியும் இல்லை.

எப்பொழுதெல்லாம் குழந்தைகள் (ஏமாற்றம், கோபம் அல்லது எதிர்பார்த்தது நடக்காவிடில்) போன்ற உணர்வுகளால் தாக்கப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் உடனே அழுவார்கள். பொருட்களை கோபத்துடன் உடைப்பார்கள்; தரையில் விழுந்து புரளுவார்கள்; உதைப்பதோ அல்லது முட்டுவதோ, மூச்சைப் பிடித்து கத்துவதோ செய்வார்கள். இத்தகைய நடத்தைகள் நடக்க விடக்கூடாது. இதற்காக ஊக்கமளித்தலும் கூடாது. பெற்றோர் குழந்தையின் சில செயல்களைத் தடுத்தால், அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதையும் விளக்க வேண்டும்.

 தவறான வழியில் செல்லும் குழந்தையைத் தடுத்து, சரி செய்ய வேண்டும். இல்லாவிடில் அவர்களது கோபமூட்டும் நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், பின்னாளில் அவன் வளர்ந்து மிகுந்த கோபக்காரனாகவும், அகந்தையுள்ளம் உள்ள குழந்தையாகவும் மாற வாய்ப்புள்ளது. இதுவே பின்னர் கல்லூரி நாட்களில் இவன் ஒரு அகந்தையானவனாக மாறி விடுவான். அதன் பின்னர் தாம் பணிபுரியும் இடத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும். இதனை ஜான் டி குரூஸ் என்னும் உளவியல் நிபுணர் கூறுகிறார்

. தாத்தா பாட்டியுடன் வாழும் குழந்தைகள் பல நேரங்களில் செல்லத்தினால் மிகவும் கோபம் அடைவார்கள். ஏனெனில் இப்பெரியவர்கள் தங்கள் பேரக் குழந்தைகள் மீது அளவில்லாத அன்பை பொழிந்து குழந்தைகளை கெடுத்து விடுகிறார்கள். ஆனால் பெற்றோர் சில சந்தர்ப்பங்களில் சில எல்லைக்குள் சுதந்திரம் தந்து குழந்தைகளை நடத்துவார்கள். சில நேரங்களில் சந்தர்ப்பமே கொடுக்காது நடத்துவார்கள்.

வளரும் குழந்தைகள் அடிக்கடி கோபப்படும் நடத்தைகளில் ஈடுபடுவது என்பது ஒரு சாதாரண விஷயம்தான். இந்நிலையில், ஓர் அன்பானவனின் நடத்தைகள் தீர்மானமான அணுகுமுறை ஆகியவற்றால் நல்லபடியாக வளரும் நிலை அமைய வாய்ப்புண்டு. கட்டுப்படுத்தாத பெரிய இடைவெளி ஏற்பட்டால் அவனது நடத்தைகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

தண்டனை என்பது ஒரு பரிகாரமானது. சில பெற்றோர் தண்டனை தொடர்பான ஏதாவது விஷயங்கள் தேவை என நினைக்கின்றனர். குழந்தைகளை அடிக்கடி அடிக்கும் பழக்கம் நல்லதன்று. இது அவர்களை முழுதான ஆளுமையோடு வளரச் செய்யாது. அவர்கள் உடல் மன வளர்ச்சி குன்றிவிடும்

. சில பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கவும், காதுகளை இழுத்துத் திருகி தப்பான வழிமுறைகளை கையாளுவார்கள். இத்தகைய குழந்தைகள் பிற்காலத்தில் சில தவிர்க்க முடியாத பிரச்சினைகளோடு வாழ்வார்கள். அவர்கள் வீட்டிற்கும், மனித சமூதாயத்திற்கும் மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். இன்னும் சில பெற்றோர்கள் கையில் குச்சியுடன் தன் குழந்தைகளை அடிக்கத் தயாராக இருப்பார்கள்.


 குழந்தைகளை வெயிலில் நிற்க வைப்பார்கள். சென்ற நூற்றாண்டில், வகுப்பறையில் மாணவர்கள் பெஞ்சின் மீது நிற்க வைத்து தண்டனை கொடுக்கும் பழக்கம் இருந்தது. பெற்றோர்கள் பல அன்றாட நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும்

. விலைவாசி உயர்வு, வருமானம் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, கடின அலுவலகப் பணி முதலிய பிரச்சினைகளை பெற்றோர் சந்திக்க வேண்டியிருக்கும். இது குழந்தைகள் மீது திணிக்கப்படக்கூடாது. பெற்றோர், எப்போதும் அவர்கள் உணர்ச்சிவசப்படாது பார்த்துக்கொள்வது நல்லது. சிறு குழந்தைகள் மீது இளம் பெற்றோர் காட்டும் கவனம் இதை மறைத்துவிடும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பைரன் என்ற உளவியல் வல்லுனர் இவ்வாறு கூறுகிறார். ஊமைக்காய உணர்வோடு வளரும் குழந்தைகள் பின்னாளில் நன்கு வளரா ஆளுமையோடு இருப்பார்கள். இதற்குக் காரணம் திரும்பத் திரும்ப உதாசீனப்படுத்துதல் ஆகியவற்றால் அவர்கள் தங்களைப் பற்றிக் குறைவான மதிப்பீட்டையும், தாங்கள் எதற்கும் பயன்படாதவர்கள் என்ற எண்ணமும் ஏற்படலாம். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தண்டிப்பதற்கு முன் பலமுறை சிந்தித்துத்தான் செயலாற்ற வேண்டும்.

இன்றைய குழந்தைகள்தான் நம் நாட்டின் நாளைய குடிமகன்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஐரோப்பிய நாடுகளில் மாணவர் மீது அடிபட்டால் அது ஒரு குற்றவியல் சார்ந்த செயலாகவே எண்ணுகிறார்கள். வீட்டில் தண்டனை மற்றும் பள்ளியில் தண்டனையெல்லாம் தற்போது மறைந்த, தீய கனவு ஆகிவிட்டது. குழந்தைகள் தவறு செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். ஆனால் தண்டனை மட்டும் கொடுக்காதீர்கள். குழந்தைகளை சிந்திக்க அனுமதியுங்கள். அவர்களுக்கும் மூளை இருக்கிறது.

ஸ்பைஸ்ஜெட் வழங்கும் அதிரடி ஆஃபர்! ஒரு டிக்கெட்டுக்கு 65% தள்ளுபடி!!!




இந்த புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதாவது முப்பது நாட்களுக்கு முன் டிக்கட்டுகளை பதிவு செய்த வாடிக்கையாளர் களுக்கு 65 சதவிகிதம் சலுகையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்குகிறது. அதிலும் இதே சலுகையில் இந்நிறுவனம் ஒரு மில்லியன் டிக்கட்டுகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.ஆனால் ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பயணிக்க விரும்புகின்றவர்கள் ஜனவரி 5-க்குள் டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


ஜனவரி மாதத்தின் முற் பகுதியில் பயணக்காலம் முடிவடையும் என்பதால், விமான சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மட்டுமலாமல் பிற்காலத்திலும் இந்த சேவையை பயன்படுத்த இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் பயணக் காலங்களாக இல்லாததால் இந்த நாட்களில் மக்கள் அதிகம் பயணிக்க மாட்டார்கள். இச்சலுகையின் முலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயணிகளை கவர திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.


குறிப்பாக இந்த சலுகையில் வாங்கப்படும் டிக்கட்டுகள் ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பதிவு செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பயணம் செய்வதற்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்பவர்களுக்கு அதிகபட்ச சலுகை விலை வழங்கப்படும்.


56 விமானங்கள் கொண்ட இந்த விமான நிறுவனம் 40,000 இருக்கைகளை உள்நாட்டு சேவைக்கு பயன்படுத்தி வருகின்றது.


மற்றொறு சலுகையாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மாடல் திட்டத்தை பயன்படுத்தி பயணிக்கும் மக்களுக்கு 50 சதவிகிதம் சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன் விமான இதழில் தோன்றும் விமான பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இந்த சலுகைகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பயணிக்க விரும்புகின்றவர்கள் ஜனவரி 5-க்குள் டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? - ஜாலி கற்பனை!




யார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்?


ஸ்கூலுக்கு டவுசர் பாக்கெட்டுக்குள் ரெண்டு கையையும் விட்டுக்கொண்டு ஸ்டைலாகத் தலையை ஆட்டியபடிதான் நடந்து போயிருப்பார்.

அப்பாவை விட சித்தப்பா ரொம்ப பெஸ்ட் ஃப்ரெண்டு. 'வா சித்தப்பு, ஸ்கூலுக்குப் போகலாம்’ என இழுத்துட்டுப் போயிருப்பார். 

வகுப்பறை பெஞ்ச்சில் அடிக்கடி 'ஜிந்தாக்கு ஜிந்தா ஜிந்தா ஜிந்தாக்குத் தா’ சவுண்டைக் கொடுத்து பட்டையைக் கிளப்பியதால் ஒருநாள் முச்சூடும் முட்டிக்கால் போட்டிருந்தார்.

அப்பாவின் டார்ச்சரால் அநியாயத்துக்கு அவதிப்பட்டிருப்பார். கம்பராமாயணத்தை அப்பாவிடம் ஒப்பிக்கும் அசைன்மென்ட்டில் அண்ணன் சூர்யா தப்பித்தாலும் பொறுப்புத் தம்பியாய் மனப்பாடம் செய்து ஒப்பித்திருப்பார்.

கொஞ்சம் பூசினாற்போல இருந்ததற்காக, ஸ்கூல் ஃபேன்சி டிரெஸ் காம்பெடீஷனில் அண்ணன் சூர்யாவுக்கு முருகர் வேடத்தைக் கொடுத்தவர்கள் இவருக்கு எப்போதும் உல்ட்டாவாய் பிள்ளையார் வேடம்தான் கொடுப்பார்களாம். இதனாலேயே ஏகக் கடுப்பில் இருந்திருப்பார். 

மழை அலர்ஜி. ஆனால் ஸ்கூல் கேர்ள்ஸை அட்ராக்ட் பண்ண, நனைந்து ஆட்டம் போட்டிருப்பார்.

அப்பா நல்ல பிராண்டட் சட்டை, பேன்ட் எடுத்துக் கொடுத்தாலும் அழுக்குச் சட்டையையும் அப்பாவின் கைலியும்தான் சாருக்கு ஃபேவரைட் டிரெஸ். அதைப் போட்டுக்கொண்டு நடந்து செல்வதைப் பெருமையாக நினைப்பார்.

அப்பா ஸ்டைலில் அடிக்கடி விரதம் இருப்பார். 'பிரியாணி’ சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்.

பிரபு ரசிகராக இருந்திருப்பார். 'வெள்ளைரோஜா’ படத்தின் 'ஓ மானே மானே...’ பாட்டுதான் கார்த்தியின் ஆல் டைம் ஃபேவரைட்.

காலை எழுந்ததும் வீட்டில் களேபரம்தான். அண்ணன் சூர்யா, 'சன்ரைஸ் வேணும்’ என அடம்பிடிக்க... தம்பி கார்த்தியோ, 'எனக்கு ப்ரூதான் வேணும்’ என அடம் பிடித்திருப்பார். பொறுத்துப்பார்த்த அப்பா சிவக்குமார், 'கண்ணுகளா....நிலவேம்புக் கஷாயம் குடிங்க. ரொம்ப நல்லதுப்பா’ எனச் சொல்லி வாயில் ஊற்றிவிட்டதால், டரியலோ டரியல் ஆகி இருப்பார்கள்!

நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் திருமணம்!




நடிகை சமீரா ரெட்டி நடிகர் சூர்யாவுடன் நடித்த 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் ஏராளமான ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆவார். இவரது திருமண நிச்சயதார்த்தம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றுள்ளது.


தனித்தனியே அனுப்பப்படும் மோட்டார் பைக்குகளின் பாகங்களை ஒருங்கிணைத்து வண்டிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர் அக்ஷய் வர்தே என்பவர். இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இவர்களை சென்ற வருடம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துவைத்தார். சமீராவிற்கும், அக்ஷய்க்கும் மோட்டார்பைக்குகளும், அவற்றில் பயணம் செய்வதும் மிகப் பிடித்தமான ஒன்றாக இருந்ததினால் அந்த விருப்பம் இருவரையும் ஒருங்கிணைத்துள்ளது.


கடந்த 14-ம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குடும்ப விழாவாகவே அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று சமீராவின் பிறந்த நாள் என்பதுவும் இன்னொரு சிறப்பாகும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்தது.


அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை உறுதி செய்த சமீரா இது குறித்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். சமீராவின் மணமகன் கார்ப்போரேட் பின்னணியைக் கொண்டவராக இருப்பினும் திரையுலகப் பரிச்சயமும் இவருக்கு இருந்திருக்கின்றது.


நடிகர் அக்ஷய்குமார் நடித்த 'ஓ மை காட்' திரைப்படத்தில் அவர் பயன்படுத்திய பைக்கையும், நடிகர் பாலகிருஷ்ணா தனது 'லெஜென்ட்' படத்தில் உபயோகப்படுத்திய சூப்பர் பைக்கையும் இவரது நிறுவனமே வடிவமைத்துத்தந்துள்ளது.

 
back to top