.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

இசைஞானி இல்லாமல் கிங் ஆப் கிங்ஸ் 2





                        இசைஞானி இளையராஜா தலைமையில் இன்று கோலாலம்பூர் மெர்டாக்கா மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. கிங் ஆப் கிங்ஸ் 2 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று இசைஞானி அறிவித்துள்ளார்.

கார்த்திக் ராஜா வழங்கும் கிங் ஆப் கிங்ஸ் 2 இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் முக்கியக் கலைஞர்களாக இருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு நேற்று இல்லம் திரும்பிய இளையராஜா, தன்னால் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்று தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதால் தன்னால் இவ்விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என்றும், தான் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைய வேண்டாமென்றும் இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….




சமையலில் செய்யக்கூடாதவை…

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


செய்ய வேண்டியவை….

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்

வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்...

01. அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.


ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.


இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்


ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.


உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்


ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.


எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.


ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்


ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்


ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.


ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.


ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.


02. ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.


03. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.


04. கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த பொறுமைசாலியும் கூட.


05. வாழ்க்கை ஓர் ஓவியம் போன்றது. அது கணிதமல்ல, நிறையப்பேர் வாழ்க்கையை கணிதமாக்கி நாசப்படுத்தியுள்ளார்கள். நீங்களாவது அதை ஓவியமாக்கி சந்தோசமான உலகத்தை உருவாக்குங்கள். எறும்பின் ஞானத்தை பின்பற்றுங்கள்.


06. மோசமான பறவைகள்தான் தனது கூட்டிலேயே எச்சமிடும் என்பதை உணர்ந்து தனது குடும்பத்தை அழிக்காமல் குடும்பத்தோடு மகிழ்வாக வாழ்வை அனுபவிக்க வேண்டும்.


07. விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் மிகச்சிறந்த ஆசான்.

08. உங்களை மாற்றிப் பாருங்கள் இந்த உலகம் எத்தனை சுவாரசியமாக மாறுகிறது என்பதை உணர்வீர்கள்.


09. பிரபஞ்சம் காலம் இரண்டும் முடிவே இல்லாதவை. இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். நீங்களே வாழ்க்கைக்கு வீணான வரையறைகளை போட்டுக்கொண்டு அதுதான் விதியென எண்ணி வாழ்வை குழப்பாதீர்கள்.


10. விட்டில் பூச்சி விளக்கொளியில் பலியாகிறது, மனிதனோ தனது கற்பனையால் பலியாகிறான்.


11. உங்கள் போராட்டம் புனிதத் தன்மையோடு அமைய வேண்டும். பலத்தோடு இருப்பதற்காக புனிதத் தன்மையை இழப்பது சிறப்பல்ல.

 பலத்தை புனிதமான வழியில் உபயோகப்படுத்துவதே பலத்திற்கு சிறப்பு. கோழைகளே பலத்தை தவறான வழியிலும், பழி தீர்க்கவும் பயன்படுத்துவர் என்பதை அறிக.


12. உயிரோடு இருக்கும் எலி இறந்துபோன புலியை விட பலமானது.


13. கடினமான வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கும் கொடிய விஷமாகும்.


14. எல்லாவற்றையும் அரவணைப்பதே அன்பு எதையும் நிராகரிப்பது அன்பல்ல.


15. நேர்மை ஒரு தெய்வீக ஆணை. அந்த நேர்மை பலன் தரும் ஆனால் சிலருக்கு அது போதியதாக தெரிவதில்லை.


16. விவேகமற்ற மனிதர்கள் தங்கள் நிழல்களுடனேயே சண்டை போடுவார்கள்.


17. வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.


18. எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.

19. ஒன்று வழி நடாத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.


20. திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !


21. உங்கள் மூளையை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்தால் எல்லா அவமதிப்புக்களையும் இலகுவாக தாண்டிவிடலாம்.


22. மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு அறிவின் அடையாளமல்ல அதுபோல மடமடவென செய்யும் செயல்கள் செயல் திறனின் அடையாளமும் அல்ல.


23. நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.



24. சின்னச் சின்னக் கணங்களின் மொத்தமான கூட்டுத் தொகையே நீண்ட வாழ்க்கை அதுபோல இழந்துவிட்ட சின்னச் சின்னக் கணங்களின் கூட்டுத் தொகையே மரணம்.


25. நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.


26. தாமதப்படுத்துவது என்பது மூளைச் சோம்பலின் இன்னொரு வடிவம்.


27. சோம்பேறி மனிதன் என்பவன் கடிப்பதற்கோ வாலாட்டுவதற்கோ வலுவற்ற செத்த நாயைப் போன்றவன்.


28. ஒரு கூர்மையான மனது எந்தக் கதவுகளையும் திறக்கும் அதேபோல ஒரு சேம்பேறி மனதிற்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.


29. உங்கள் சந்தோஷத்திற்கான காரணத்தை மாற்றிப் பாருங்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதை.


30. மற்றவர்களின் கட்டளைகளை செய்யாதீர்கள், முதலில் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள், பிறகு அந்தச் செயலை விரும்புங்கள்.

திட்டமிட்டால் திகட்டாத மகிழ்ச்சி!




நிதி நிர்வாகம் என்பது வாழ்வில் முக்கியமான விஷயம். வரவு& செலவு விஷயத்தில் திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் என்றுமே திண்டாட வேண்டியிருக்காது. அவர்கள் திகட்டாத மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். நிதி விஷயத்தில் நிம்மதியை அனுபவிப்பதற்கான ஆலோசனைகள் உங்களுக்கும்...


கடன்களை ஒழியுங்கள் வாழ்வில் விரைவாக முன்னேற்றம் காண விரும்புபவர் முதலில் செய்ய வேண்டியது, கடன்களை ஒழிப்பதுதான். கடன்களுக்கான வட்டிக்காக நீங்கள் மாதமாதம் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்று கணக்கிட்டாலே போதும். அதிலிருந்து மீள்வதற்கான உத்வேகம் பிறந்துவிடும். கடன்களுக்கான வட்டிகளில் இருந்து உங்கள் வருவாயை மீட்டால், சேமிப்பு உயரும்.


எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக நீங்கள் கடன்களில் இருந்து மீள்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்களின் பொருளாதாரம் நலம் பெறும். கடன்களை உடனே ஒழிக்க முடியாது, ஆனால் பணமும் சேமிக்க வேண்டும் என்றால், முதலில் உங்கள் கடன்களை ஒழுங்குபடுத்துங்கள். அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும் தனிநபர் கடன், கந்துவட்டிக் கடன் போன்ற கடன்களை முதலில் முடித்துவிடுங்கள்.


முடிந்தால், வட்டியில்லா கடன்களுக்கு (உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பெறுபவை), அல்லது குறைந்த வட்டிக் கடன்களுக்கு அவற்றை மாற்றிக்கொள்ளுங்கள். கடன்களில் இருந்து மீள்வதற்கான ஒரு வழி, ஒரு அவசர கால நிதியை உருவாக்குவது.


இந்த நிதியைப் பயன்படுத்தி ஒன்றி ரண்டு மாதங்களை ஓட்டினால், வரும் வருவாயை கடன்களைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தலாம். நீங்கள் இதுவரை அவசர கால நிதியை வளர்க்கத் தொடங்கவில்லை என்றால், உடனே அதைத் தொடங்குங்கள். தேவைகள் இல்லாத மனிதர்கள் இல்லை.


ஆனால் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு பொருளாதார பலம் அவசியம். பொருளாதார விஷயத்தில் குறுகியகால இலக்குகள், நீண்டகால இலக்குகள் என்று திட்டமிட்டால் நமது தேவைகளை எளிதில் நிறைவேற்றிவிடலாம்.
 
back to top