'ஜில்லா' பட டைட்டிலில் மோகன்லால் பெயரை போடுமாறு விட்டுக்கொடுத்துள்ளாராம் விஜய். | |||
விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படப்பிடிப்பை நடத்தி, படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் ஆர்.டி.நேசன். இப்போது டைட்டில் போடும் நேரத்தில் அவர் முன்னரே எதிர்பார்த்த அந்த தர்மசங்கடமான சூழ்நிலை வந்துவிட்டது. விஜய் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். மோகன்லாலோ 35 வருட காலமாக மலையாள சினிமாவின் எவர்கிரீன் ஹீரோ. முழுப்படத்தையும் இயக்கி முடித்துவிட்ட இயக்குனர் ஆர்.டி.நேசனுக்கு டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் குழப்பம். ஆனால் இயக்குனரின் மனப்போராட்டத்தை புரிந்துகொண்டு, விஜய்யின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும் என இயக்குனரிடம் முன்பே சொல்லிவிட்டார் மோகன்லால். ஆனால் விஜய்யோ, மோகன்லாலின் சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, டைட்டிலில் மோகன்லால் பெயர்தான் முதலில் வரவேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் இயக்குனர் நேசன். |
Saturday, December 28, 2013
மோகன்லால் பர்ஸ்ட், விஜய் நெக்ஸ்ட்!
11:22 PM
Unknown
No comments
சொல்லாதீர்கள்... கவிதை?
11:06 PM
Unknown
No comments
எங்களை இல்லாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!
எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
தனித்து அழமுடியும் எங்களால்..!
எங்களை வீரமற்றவர்கள்
என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
தைரியம் இருக்கிறது எங்களிடம்..!
எங்களை திக்கற்றவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
எங்கள் வறுமை ஜாதிதான்..!
எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...
மலையாளத்திலும் சந்தானம்
11:02 PM
Unknown
No comments
தமிழ் சினிமாவின் தற்போதைய நகைச்சுவை மன்னனாக வலம்வரும் நடிகர் சந்தானம் தற்பொழுது மலையாளத் திரையுலகிலும் நுழைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் சலாலா மொபைல்ஸ் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்துவருவதாகக்
கூறப்படுகிறது. இப்படம் சந்தானம் நடிக்கும் முதல் மலையாளத் திரைப்படமாகும். தமிழில் தவிர்க்க இயலாத நகைச்சுவை நாயகனாக வலம்வரும்
சந்தானம் மலையாளத்திலும் ஜொலிப்பாரா என்பது இப்படம் வெளியானபின்பு தெரியவரும்.
ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை சரத் ஏ.ஹரிதாசன் இயக்கிவருகிறார். நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இப்படம் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கான வேலைகள் தொடங்கின ? -
10:18 PM
Unknown
No comments
இளைய தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி மாபெரும்
வெற்றி பெற்ற திரைப்படமான துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. அதற்கான படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் தற்பொழுது கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கி திரைப்படம் முழுவதும் மும்பை நகரை மையப்படுத்தி
உருவாக்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்பொழுது கொல்கத்தாவை மையப்படுத்தி அடுத்த திரைப்படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் அடுத்த ஆண்டு துவக்கம் முதல்
படப்பிடிப்புத் துவங்கவுள்ள இத்திரைப்படம், அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீசாக
இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.