.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 30, 2013

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..




தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!


அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.



1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.



இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.



 கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

வாழ்வின் ரகசியம் !!!




வாழ்வின் ரகசியம் !!!


"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீடன்.


"தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.


"புரியல குருவே.." என்றான்.


"எருமை பின்னால் தட்டினால், எதையும் கண்டு கொள்ளாது. கழுதை, தட்டியவரை எட்டி உதைக்கும். ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து செல்லும்.


புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் வாழ்வின் ரகசியம் என்றார்.

உடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள் !!!!




உடல் எடையை குறைக்க, கடுமையான உடல் எடை குறையும் முறையை கையாள வேண்டும். அதற்காக தீவிரமான உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். இவைகள் மட்டும் போதுமா? வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது! உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை எரித்து, செரிமானத்தை சீராக்க என பல உதவிகளைப் புரிகிறது வைட்டமின்கள்.

ஆனால் அதற்காக உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் விட்டு விட வேண்டும் என்றில்லை. அதனுடன் சேர்த்து முக்கிய வைட்டமின்களையும் சேர்த்துக் கொண்டால், எடையை குறைக்க முயலும் போது சுலபமாக இருக்கும். இதோ உடல் எடையை குறைக்க உதவும் 9 வைட்டமின்கள் பற்றிய ஒரு பார்வை. இதில் ஒருசில கனிமங்களும் அடங்கும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்


வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பது 8 வகை வைட்டமின் பி-க்களை கொண்டுள்ளதாகும். இது நம் உடலில் பல வகைகளில் வேலை செய்கிறது. உடல் எடையை குறைக்க, அவை தீவிரமாக உதவி புரிகிறது. அதற்கு காரணம் உடல் கார்போஹைட்ரேட்டை ஆற்றல் திறனாக மாற்ற இது உதவி புரிகிறது. மேலும் ஈரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்திற்கு துணை புரிந்து கொழுப்பை குறைக்கவும் இது உதவும். அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும் இது துணை நிற்கும். ஆகவே கீரைகளை அதிகம் உட்கொண்டால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் டி

உடல் எடை குறைப்பு ஆய்வுகளில் பங்கேற்றவர்களில் ஆறுதல் மருந்து எடுத்துக் கொண்டவர்களை விட, வைட்டமின் டி கொண்ட உணவுகளை எடுத்து கொண்டவர்கள் தான் அதிக எடையை இழந்தனர். அதே போல் வைட்டமின் டி-யை குறைவாக எடுத்தவர்களை விட அதிகமாக எடுத்தவர்கள் தான் அதிக அளவில் எடை குறைந்துள்ளனர். வைட்டமின் டி கால்சிய ஈர்ப்பை அதிகரிப்பதால், அது உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி சத்தானது மீன், காளான் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் சி

உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும். அதனுடன் சேர்ந்து வைட்டமின் சி-யும் அதற்கு துணை புரியும். அதனால் ஆற்றல் திறன் அதிகரித்து, கலோரிகள் எரிக்க உதவும். அதே சமயம் வைட்டமின் சி-யை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியாது என்று விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கூறுகிறது. இருப்பினும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அது மெட்டபாலிச செயல்பாட்டை குறைத்து, உடல் எடையை அதிகரித்துவிடும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

கால்சியம்

கால்சியத்திற்கும் உடல் எடை குறைவுக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது. இதில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும், கால்சியம் மற்றும் கால்சியம் அடங்கிய பொருட்கள் உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கொழுப்புகளை உடைத்து அதை சேமித்து வைப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். கால்சியம் சத்தைப் பெற பால் பொருட்களை அதிகம் உட்கொண்டால், கால்சியம் குறைபாடு நீங்கிவிடும்.


குரோமியம்

உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை செயல் நிறுத்த உதவி புரிவதால், உடல் எடை குறைப்புக்கு குரோமியம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. மேலும் அது இன்சுலினுடன் சேர்ந்து குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் திறன் உற்பத்திக்கு உதவி புரிகிறது. இத்தகைய குரோமியம் சோளத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

கோலின்

கோலின் என்பது ஒரு வைட்டமின் கிடையாது. ஆனால் இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் பி-யுடன் சேர்க்கப்பட்டிருக்கும். கொழுப்புகளை செயலற்றதாக மாற்ற இது உதவுவதால் உடல் எடை குறைவதற்கும் இது உதவும். இது இல்லையென்றால், கல்லீரலில் கொழுப்புகள் தேங்கி, மெட்டபாலிச செயல்பாடு தடைபட்டு போகும். சோயாவில் கோலின் என்னும் சத்தானது அதிகம் நிறைந்துள்ளதால், அதனை உட்கொள்வது நல்லது.

ஜிங்க்

தைராய்டு மற்றும் இன்சுலின் சீரமைப்பு திறம்பட செயல்படுவதற்கு ஜிங்க் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. இவை இரண்டில் ஏதாவது ஒன்று சரிவர செயல்படவில்லை என்றால் கூட போதும், மெட்டபாலிச செயல்பாடு வெகுவாக தடைபட்டுவிடும். அதனால் ஜிங்க் குறைபாட்டை தவிர்த்தால், தேவையற்ற உடல் எடையை குறைக்கலாம்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

இந்திய விளம்பரங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்னென்ன...?




1. கத்ரினாவுக்கு பொடுகு, தலைமுடி பிரச்சினை இருக்கிறது..., ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.

2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3. உங்கள் தகுதிகளை விட, உங்கள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.

4. சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் !

5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!

6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அழைத்துச் செல்லுங்கள்.

7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன் ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.

8. கோலா பானங்கள் அனைத்துமே எல்லாவகையான பயங்களையும் போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!

9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம், ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய் கொடுத்து கோலா வாங்க இயலாமல் உயிரையே பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள்.

10. ஷாம்பு விளம்பரங்களில் வரும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட அதி உன்னதமானவை.

11. ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும் பழப்பொருட்களின் விகிதம், 99% பழச்சாறுகளில் இருக்கும் விகிதத்தை விட அதிகமானது.

12. அமுல் நிறுவனத்தில் நல்ல பால்பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமைசாலிகளைவிட கார்ட்டூன் வரையும் திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

13. சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைக் குறைகூறம் பெரும்பாலான மக்கள், அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத் தான் வாகனங்களை வாங்குகிறார்கள்.

14. டயரி மில்க் சில்க்- கை மூஞ்சிமுழுக்க அப்பிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.

15. மோட்டார் பைக் வாங்குவோர் எவரும் பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக் அப் செய்யவே வாங்குகிறார்கள்.

16. எல்லா சோப்புகளுமே 99.9% கிருமிகளைக் கொன்று விடும்.

17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது, கிங் பிஷர் மினரல்வாட்டர் தயாரிக்கிறது என்றே எல்லாரும் நம்புகிறார்கள்.

18. தாயும் மகளும் பேசிக்கொள்கிற ஒரே நேரம், ஹேர் ஆயில் பற்றிப் பேசும்போது மட்டும்தான்.

19. எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் எப்போதும் வெள்ளைக் கோட் அணிந்திருப்பார்.
 
back to top