..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
6:57 PM
Unknown
No comments
அமீர்கான், கத்ரீனா கைஃப் , அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா நடிப்பில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான தூம் 3 திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்கள் வரை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
தூம் படவரிசையான தூம் 3 திரைப்படம் கடந்த டிசம்பர் 20ல் வெளியானது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். தூம் படவரிசைகளான தூம் மற்றும் தூம் 2 ஆகிய படங்களின் வசூலை விட அமீர்கான் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளதாகப் பாராட்டப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் 250 கோடிகள் வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் இந்தி வெர்சன் 200 கோடிகளுக்கும் மேலாகவும் இதர மொழிகளில் சுமார் 20 கோடிகள் வரையிலும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றியினை அமீர்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
6:50 PM
Unknown
No comments
விக்ரம் பிரபு மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்துவரும் அரிமா நம்பி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ஆனந்த ஷங்கர் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் சமீபமாக வெளியான “இவன் வேற மாதிரி” திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததுடன், சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவன் வேற மாதிரி திரைப்படத்தை எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குனர் சரவணன் இயக்கியிருந்தார்.
விக்ரம் பிரபு தற்பொழுது சிகரம் தொடு மற்றும் தலப்பாக்கட்டை முதலான படங்களில் நடித்துவருகிறார். பிரியா ஆனந்த் தற்பொழுது வை ராஜா வை,பொடியன், இரும்புக் குதிரை முதலான படங்களில் நடித்துவருகிறார்.
6:45 PM
Unknown
No comments
அறிமுக இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துவரும் தனுஷின் இருப்பத்து ஐந்தாவது படமான வேலையில்லாப் பட்டதாரி படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் தனுஷின் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், 3 மற்றும் நைய்யாண்டி ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவராவார். தனுஷ் கேட்டுக்கொண்டதன் பேரில் இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். மேலும் இப்படத்தின் பாடல்களை தனுஷே எழுதியிருக்கிறார். மூன்று படத்தின் மெஹாஹிட் பாடலான ஒய் திஸ் கொலவெறி மற்றும் எதிர் நீச்சல் படத்தின் “பூமி என்ன சுத்துதே” போன்ற பாடல்கள் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
6:40 PM
Unknown
No comments
இளைய தளபதி விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வருகிற ஜனவரி 10ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஜில்லா திரைப்படம் இன்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜில்லா படத்தின் தயாரிப்பாளார் ஆர்.பி.சௌத்ரி ஜில்லா படத்தினை இன்று தணிக்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், ஜில்லா திரைப்படம் நாளை அல்லது ஜனவரி 2ல் தணிக்கை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுவருகிறது.
இதற்கிடையில் ஜில்லா படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் நாளை வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருப்பதால், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் இன்று தணிக்கை செய்யப்படலாம் என்றும், முழு திரைப்படம் நாளை தணிக்கை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜில்லா திரைப்படத்துடன் ரிலீசாகவிருக்கும் அஜித்தின் வீரம் திரைப்படம் ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டு U சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜில்லா திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நேசன் இயக்கத்தில், இமான் இசையில் உருவாகியுள்ளது.