.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 31, 2013

உலக அளவில் சார்லி சாப்ளின் போல் விவேக் புகழ்பெற வேண்டும்: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு!







விவேக் கதாநாயகனாக நடித்த 'நான்தான் பாலா' என்ற படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்கள் மற்றும் டிரைலரை டைரக்டர் பாரதிராஜா வெளியிட, டைரக்டர் கே.பாலசந்தர் பெற்றுக்கொண்டார்.


விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:-


''கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் ஆகிய மூவரும் தமிழ் திரையுலகின் மிக திறமையான இயக்குனர்கள். தமிழ் மண்ணின் கலாசாரத்தை படமாக கொடுத்தவர்கள்.


இசையும், பாடல்களும் சந்தோஷத்தையும் தரும். சோகத்தையும் தரும். நகைச்சுவை எப்போதுமே சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும். நான் வெளியூர் பயணங்களின்போது, யு-டியூப்பில் விவேக் நடித்த நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிப்பேன். அவர், தமிழ் திரையுலகுக்கு கிடைத்த வரப்பிரசாதம். சார்லி சாப்ளின் உலக அளவில் புகழ்பெற்றது போல் விவேக்கும் புகழ்பெற வேண்டும்.''


இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.


விழாவில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கண்ணன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் ஆகியோரும் பேசினார்கள். நடிகர் விவேக் வரவேற்று பேசினார்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் ஆன்லைன் ஷாப்பிங்!!!




பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஆன்லைன் மூலமாக பொருள்களை ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. இது மிக சௌகர்யமாக உள்ளதாகக் கருதுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

 மேலும் பணம் செலுத்துவதற்கு பல்வேறு வகையான வாய்ப்பு, வசதிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடைபெற்ற மொத்த வர்த்தகம் 850 கோடி டாலராகும்.

 இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் இதற்கு முக்கியக் காரணமாகும். ஆன்லைன் ஷாப்பிங் குறித்த ஆய்வறிக்கையை அசோசேம் வெளியிட்டது.

இதில் 2009-ம் ஆண்டு 250 கோடி டாலராக இருந்த ஆன்லைன் வர்த்தகம் 2011-ம் ஆண்டில் 630 கோடி டாலராக அதிகரித்தது. இது 2013-ம் ஆண்டில் 1,600 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆன்லைன் வர்த்தகம் 5,600 கோடி டாலர் அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த சில்லறை வர்த்தகத்தில் ஆன்லைன் வர்த்தகம் 6.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்னணு பொருள்கள் தவிர, ஆடைகள், அணிகலன்கள், வீட்டுக்கு குறிப்பாக சமையலறை சாமான்கள், பிற உபகரணங்கள், கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், அழகு சாதனப் பொருள்கள், வாசனை திரவியங்கள், குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புக்கு டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஆமதாபாத், கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் உள்ள 3,500 வர்த்தகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு ...?




தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.தொலைத்தொடர்பு வரியினை 20 – 25 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்திருந்தார்.

இதற்கமையவே தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து நீடிக்கிறது என்றென்றும் புன்னகை



ஜீவா, திரிசா, வினய் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான என்றென்றும் புன்னகை இரண்டாவது வாரமான இந்த வாரத்திலும் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் நீடித்துவருகிறது.

ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் மற்றும் டாக்டர் ராமதாஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இப்படத்தை ஐ.அகமது இயக்கியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நட்பினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இப்படம் பெரும்பாலான திரைவிமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்
பெற்றிருந்தது. உணர்ச்சிப் பூர்வமான படமாகவும், தங்களது இளமைக்கால நட்பினை ஞாபகப் படுத்தும் விதமாகவும் இருப்பதாக ரசிகர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.

ரசிகர்களின் இந்த வரவேற்பால் இப்படம் இந்த வாரத்திலும் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் நீடித்துவருவதுடன், அதிகத் திரையரங்குகளிலும்
நீடிக்கிறது. இப்படத்துடன் வெளியான வெங்கட் பிரபுவின் பிரியாணி திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் நீடித்துவருகிறது.

கோ படத்திற்குப் பிறகு பெரும்பாலும் தோல்விகளையே கண்டுகொண்டிருந்த நடிகர் ஜீவாவிற்கு இப்படம் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
 
back to top